டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அடுத்த ஆண்டுக்கு முன் எந்த தடுப்பூசியும் தயாராக இருக்காது.. நாடாளுமன்றக் குழு முன் அதிகாரிகள் பதில்

Google Oneindia Tamil News

டெல்லி: அடுத்த ஆண்டுக்கு முன்னர் எந்த தடுப்பூசியும் தயாராக இருக்காது என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் நாடாளுமன்றக் குழுவின் முன் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.,

உலகத்திற்கே திண்டுக்கல் பூட்டுபோட்டிக்கிறது கண்ணுக்குத் தெரியாத கொரோனா வைரஸ். கோடிக்கணக்கான மக்களை கொரோனா பாதித்துவிட்டது. 5 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்களை கொன்றுவிட்டது.

No Vaccine Will Be Ready Before Next Year, Officials Tell Parliamentary Panel

இந்த வைரஸ்க்கு மருந்து கண்டுபிடிக்க உலகம் முழுவதும் பெரும் போராட்டம் நடந்து வருகிறது. கோடிக்களை கொட்டி மருந்து கண்டுபிடிக்க இரவு பகலாக விஞ்ஞானிகள் தீவிரமாக முயன்று வருகின்றனர்.

இந்நிலையில் இந்தியாவில் கோவிட் 19 தடுப்பு ஊசி வரும்ஆகஸ்ட் 15ம் தேதி அறிமுகம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் மத்திய அறிவியல் அமைச்சகம் தடுபபு ஊசி இப்போதைக்கு சாத்தியம் இல்லை என்று அறிக்கையில் குறிப்பிட்டு பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் சர்ச்சைக்கு பின் அதை நீக்கிவிட்டது

இந்தியாவில் ஜெட் வேகத்தில் பரவும் கொரோனா எட்டு லட்சத்தை நெருங்கியதுஇந்தியாவில் ஜெட் வேகத்தில் பரவும் கொரோனா எட்டு லட்சத்தை நெருங்கியது

கொரோனா காரணமாக மார்ச் 25 அன்று லாக்டவுன் அமல்படுத்தப்பட்ட பின்னர் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் தொடர்பான நாடாளுமன்ற நிலைக்குழு இன்று முதல் முறையாக கூடியது. காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தலைமையிலான குழு நாடாளுமுன்றம் ஒத்திவைக்கப்பட்டதிலிருந்து அதன் முதல் கூட்டத்தை நடத்தியது. இந்த கூட்டத்தில் ஆஜரான அதிகாரிகள், அடுத்த ஆண்டுக்கு முன்னர் கொரோனா வைரஸிற்கான தடுப்பூசி எதுவும் தயாராக இருக்காது என்று விளக்கம் அளித்தனர்.

English summary
Officials who appeared before a parliamentary panel today said no vaccine for coronavirus will be ready before next year. The Parliamentary Standing Committee on Science and Technology, Environment and Climate Change met for the first time today since the lockdown due to COVID-19 was enforced on March 25.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X