டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இந்த ஒரு விஷயத்தை பண்ணுங்க.. பொருளாதாரம் சரியாகும்.. நிர்மலா சீதாராமனுக்கு அபிஜித் அறிவுரை!

பொருளாதார மந்த நிலையை சரி செய்ய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் என்ன செய்ய வேண்டும் நோபல் பரிசு வெற்றியாளர் அபிஜித் பானர்ஜி அறிவுரை வழங்கி உள்ளார்.

Google Oneindia Tamil News

டெல்லி: பொருளாதார மந்த நிலையை சரி செய்ய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் என்ன செய்ய வேண்டும் நோபல் பரிசு வெற்றியாளர் அபிஜித் பானர்ஜி அறிவுரை வழங்கி உள்ளார்.

2019ம் வருடத்திற்கான நோபல் பரிசுகள் வரிசையாக அறிவிக்கப்பட்டு வருகிறது. இதில் அமெரிக்கா வாழ் இந்தியரான அபிஜித் பானர்ஜி இந்த நோபல் பரிசை பெற்று இருக்கிறார்.

இவருக்கு பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. அவரின் மனைவி எஸ்தர் டூஃப்லோ மற்றும் மெக்கேல் கிரெமர் ஆகியோருக்கு கூட்டாக பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நோபல் பரிசு வெற்றியாளர் அபிஜித் பானர்ஜி தனியார் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ளார்.

இதுதான் காரணம்.. பிரதமர் மோடி தேர்தலில் வென்றது எப்படி? நோபல் வெற்றியாளர் அபிஜித் அளித்த பேட்டி!இதுதான் காரணம்.. பிரதமர் மோடி தேர்தலில் வென்றது எப்படி? நோபல் வெற்றியாளர் அபிஜித் அளித்த பேட்டி!

என்ன பேட்டி

என்ன பேட்டி

அபிஜித் பானர்ஜி தனது பேட்டியில் பொருளாதார மந்த நிலையை தற்போதுதான் அரசு கொஞ்சம் தீவிரமாக அணுக தொடங்கி உள்ளது. தற்காலிக தீர்வு வேண்டும் என்றால் நாம் உடனடியாக சீர்திருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். நீண்ட கால தீர்விற்கு கொஞ்சம் அதிர்ஷ்டம் இருக்க வேண்டும்.

பொருளாதார மந்தநிலை

பொருளாதார மந்தநிலை

அரசு தற்போது இருக்கும் பொருளாதார மந்த நிலை குறித்து என்னிடம் அணுகாது. இது என்னுடைய பணியும் கிடையாது. ஆனால் என்னிடம் நிர்மலா சீதாராமன் இதுகுறித்து ஆலோசனை கேட்டால் நான் ஆலோசனை வழங்குவேன்.

பொருளாதாரம் சரியாகும்

பொருளாதாரம் சரியாகும்

மக்களிடம் பணம் இருக்க வேண்டும். மக்களிடம் பணம் புழங்க வேண்டும் இதுதான் என் ஆலோசனை. அப்போதுதான் பொருளாதாரம் சரியாகும். அரசு அறிவித்து இருக்கும் திட்டங்கள் மூலம் மக்களிடம் எதிர்காலத்தில் பணம் புழங்கும். ஆனால் நிகழ் காலத்தில் பொருளாதார பிரச்சனையை போக்க அது உதவாது.

வாங்கும் திறன்

வாங்கும் திறன்

மக்களின் வாங்கும் திறனை அதிகரிக்க வேண்டும். மக்கள் இடையே எவ்வளவு பண புழக்கம் இருக்கிறதோ அவ்வளவு பொருளாதாரம் உயரும். நான் மக்கள் என்று சொல்வது ஏழைகளை. அவர்களிடம் பணம் இருந்தால்தான் பொருளாதார மந்த நிலை சரியாகும், என்று அபிஜித் பானர்ஜி தெரிவித்துள்ளார்.

English summary
Economic Nobel Laureate Abhijit Banerjee gave one advice to FM Nirmala on Economic Slowdown.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X