டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பிரதமர் மோடியுடன் நோபல் பரிசு பெற்ற பொருளாதார அறிஞர் அபிஜித் பானர்ஜி சந்திப்பு

Google Oneindia Tamil News

Recommended Video

    PM Narendra modi met economics nobel winner abhijit banerjee

    டெல்லி: பிரதமர் நரேந்திர மோடியை நோபல் பரிசு பெற்ற பொருளாதார அறிஞர் அபிஜித் பானர்ஜி இன்று சந்தித்து பேசினார்.

    2019-ம் ஆண்டுக்கான பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு அமெரிக்கா வாழ் இந்தியரான அபிஜித் பானர்ஜி, அவரது மனைவி எஸ்தர் டூஃப்ளோ, மைக்கேல் கிரேம் ஆகியோருக்கு கூட்டாக வழங்கப்பட்டுள்ளது. அபிஜித் பானர்ஜி, மத்திய அரசின் பொருளாதார கொள்கைகளை விமர்சிக்கிறார் எனவும் கூறப்பட்டது.

    Nobel Laureate Abhijit Banerjee meets Prime Minister Narendra Modi

    இந்நிலையில் இந்தியா வருகை தந்த அபிஜித் பானர்ஜி டெல்லியில் பிரதமர் மோடியை இன்று சந்தித்து பேசினார். இச்சந்திப்பு தொடர்பாக தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, அபிஜித் பானர்ஜி நோபல் பரிசு பெற்றதில் இந்தியா பெருமிதம் கொள்கிறது.

    அவருடனான இச்சந்திப்பு ஆரோக்கியமானதாக இருந்தது. மனித குல முன்னேற்றத்தின் மீதான அவரது ஆர்வம் புரிந்து கொள்ள முடிந்தது என பெருமிதத்துடன் பதிவிட்டுள்ளார்.

    இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை அபிஜித் பானர்ஜி சந்தித்து பேசினார். இச்சந்திப்பின் போது அவர் கூறியதாவது: இந்தியாவின் நலன் குறித்து தாம் எப்படி சிந்திக்கிறேன என பிரதமர் மோடி கூறினார்.

    அவருக்கு சில கொள்கைகள் இருக்கின்றன. சிந்தனை இருக்கிறது. அவரது அணுகுமுறை வித்தியாசமான ஒன்றாக இருக்கிறது. அதேநேரத்தில் மோடியின் ஆட்சி மீது பூசப்படும் வண்ணங்களால் ஒருவித அவநம்பிக்கையும் உருவாக்கப்பட்டிருக்கிறது.

    மக்களின் பார்வையை புரிந்து கொள்ளுதல் என்கிற யதார்த்தம் அவசியமானது . அதுதான் ஆக்கப்பூர்வமான அரசாங்கம் செயல்படுவதற்கு சரியானதாக இருக்கும். இவ்வாறு அபிஜித் பானர்ஜி தெரிவித்தார்.

    English summary
    Nobel Laureate Abhijit Banerjee today met Prime Minister Narendra Modi at Delhi.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X