டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

போலீஸிடம் அடி வாங்கி.. 10 நாட்கள் டெல்லி திகார் சிறையில் இருந்த அபிஜித் பானர்ஜி

Google Oneindia Tamil News

Recommended Video

    Nobel Laureate Abhijit Banerjee and his friends were kept in Tihar jail

    டெல்லி: பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு வென்றுள்ள அமெரிக்க வாழ் இந்தியரான அபிஜித் பானர்ஜி, மாணவனாக இருந்த காலத்தில் கல்லூரியில் நடந்த போராட்டத்தில் பங்கேற்று 10 நாட்களை டெல்லி திகார் சிறையில் கழித்தவர் என்ற தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளது..

    நோபல் பரிசு வென்ற அமெரிக்க வாழ் இந்தியரான அபிஜித் பானர்ஜி மேற்கு வங்க மாநிலத்தில் பிறந்தவர் ஆவார். இவர் பிஏ பொருளாதாரம் படிப்பை கொலகத்தாவில் உள்ள பிரசிடன்சி பல்கலைக்கழகத்தில் படித்தார்.

    முதுகலை படிப்பை டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் அபிஜித் பானர்ஜி படித்தார். இதையடுத்து ஹார்வேர்டு பல்கலைக்கழகத்தில் பிஎச்டி முடித்தார்.

    மாணவர்கள் கைது

    மாணவர்கள் கைது

    இதில் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் (ஜேஎன்யு) அவர் படித்த காலத்தில் இருந்தே போராட்டங்கள் நடந்து வந்திருக்கிறது. 1983ம் ஆண்டு புதிய மாணவர் சேர்க்கை கொள்கைக்கு எதிராக டெல்லி ஜேஎன்யு பல்கலைக்கழக துணைவேந்தரின் வீட்டில் உள்ளிருப்பு போராட்டம் நடந்தது. அப்போது மாணவர் சங்க துணை தலைவரை வெளியேற்ற போலீசார் முயற்சித்த போது கைகலப்பாகி உள்ளது. அப்போது மாணவர்கள் நடத்திய போராட்டத்தை போலீஸ் தடுத்து நிறுத்தி, அவர்களை தாக்கி டெல்லி திகார் சிறையில் அடைத்தது.

    திகார் சிறையில் அடைப்பு

    திகார் சிறையில் அடைப்பு

    அப்போது நடந்த போராட்டத்தில் பங்கேற்ற அபிஜித் பானர்ஜியும் போலீசார் தாக்கப்பட்டு கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார். 10 நாட்கள் சிறையில் இருந்த அவர் பின்னர் விடுவிக்கப்பட்டு இருக்கிறார். அப்போது போடப்பட்ட வழக்குகளும் கைவிடப்பட்டு இருக்கிறது.தன் மீது போடப்பட்ட வழக்கு சிறையில் இருந்த தகவலை ஆகியவற்றை 2016ம் ஆண்டு ஆங்கில நாளிதழக்கு அபிஜித் பானர்ஜியே பேட்டி அளித்துள்ளார்.

    அரசியல் சாராதவர்

    அரசியல் சாராதவர்

    இதனிடையே சீனியர் மாணவர்களில் ஒருவரும், எகனாமிக்ஸ் டைம்ஸ் நாளிதழின் மூத்த ஆசிரியருமான டி.கே.அருண் அபிஜித் எந்த அரசியல் அமைப்பையும் சார்ந்து இருக்கவில்லை என்றும் தனது நினைவலைகளை பகிரந்து கொண்டிருக்கிறார்.

    நோபல் பரிசு வென்றார்

    நோபல் பரிசு வென்றார்

    திகார் சிறையில் இருந்து விட்டு வந்து நோபல் பரிசு பெற்றவர் என்றால் அது அபிஜித் பானர்ஜி தான் என்று அருண் குறிப்பிட்டுள்ளார். சர்வதேச வறுமையை ஒழிப்பதற்கான சோதனை அணுகுமுறைக்காக இந்திய வம்சாவழியைச் சேர்ந்த அப்ஜித் விநாயக் பானர்ஜி, அவருடைய மனைவி எஸ்தர் டஃப்லோ மற்றும் மைக்கெல் க்ரெமர் ஆகிய மூன்று பேருக்கு வழங்கப்பட்டுள்ளது.

    English summary
    Nobel Laureate Abhijit Banerjee and his friends were kept in Tihar jail for 10 days and were beaten up for staging protest against the JNU VC in 1983
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X