டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சல்யூட்.. சி.வி.ராமன் முதல் அபிஜித் பானர்ஜி வரை.. நோபல் பரிசு பெற்ற இந்தியர்கள்

Google Oneindia Tamil News

Recommended Video

    கள்ளக்காதலியின் கணவனை கொன்ற கைதுசெய்த போலீசார் -வீடியோ

    டெல்லி: இந்தியரான அபிஜித் பானர்ஜி உட்பட 3 பேருக்கு பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு வழங்கப்படுவதாக இன்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. அபிஜித் பானர்ஜி, எஸ்தர் டுப்லோ, மெக்கேல் கிரமர் ஆகிய மூவருக்கு பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு வழங்கப்படுகிறது.

    இதற்கு முன்பாக இந்தியாவை சேர்ந்த 8 பேர் இந்த கவுரவமிக்க விருதை பெற்றுள்ளனர்.

    Nobel Prize Winners from India list is here

    அவர்கள் பற்றிய ஒரு விவரம் இதோ:

    முதல்முதலில் நோபல் பரிசு வென்ற இந்தியர், நமது தேசிய கீதத்தை எழுதிய, ரவீந்திரநாத் தாகூர். இலக்கியத்திற்காக 1913ம் ஆண்டு இவருக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. அவரது ஆழ்ந்த உணர்திறன், புதிய மற்றும் அழகான வரிகளின் காரணமாக, ரவீந்திரநாத் தாகூருக்கு இந்த விருது கிடைத்தது.

    சி.வி.ராமனுக்கு, இயற்பியல் ஆய்வு சாதனைக்காக, 1930ல் நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. ஒளி சிதறல் பிரிவு ஆய்வுக்காக சர் சி.வி.ராமன் இந்த விருதை பெற்றார்.

    ஹர் கோவிந்த் கொரானா, மருத்துவ துறை பணிக்காக 1968ல் நோபல் பரிசு பெற்றார். மரபணு குறியீட்டின் விளக்கம் மற்றும் புரதத் தொகுப்பில் அதன் செயல்பாடு பற்றிய ஆய்வுக்காக இந்த விருது ராபர்ட் டபிள்யூ. ஹோலி மற்றும் மார்ஷல் டபிள்யூ. நிரன்பெர்க் ஆகியோருடன் ஹர்கோவிந்த் கொரானாவுக்கும் கிடைத்தது.

    அமெரிக்கா வாழ் இந்தியர் அபிஜித் பானர்ஜி உட்பட 3 பேருக்கு பொருளாதாரத்துக்கான நோபல் பரிசுஅமெரிக்கா வாழ் இந்தியர் அபிஜித் பானர்ஜி உட்பட 3 பேருக்கு பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு

    அமைதிக்கான நோபல் பரிசு, அன்னை தெரசாவுக்கு 1979ல் வழங்கப்பட்டது.

    சுப்ரமண்யம் சந்திரசேகர் இயற்பியல் துறைக்காக, 1983ல் நோபல் பரிசு பெற்றார். நட்சத்திரங்களின் அமைப்பு மற்றும் பரிணாம வளர்ச்சிக்கு முக்கியத்துவம் வாய்ந்த இயற்பியல் செயல்முறைகள் குறித்த அவரது தத்துவார்த்த ஆய்வுகளுக்காக இந்த விருது கிடைத்தது.

    பொருளாதார அறிவியலுக்கு வழங்கிய பங்களிப்புக்காக, 1998ல் அமர்த்தியா சென்னுக்கு விருது வழங்கப்பட்டது.

    வேதியியல் துறையில் சாதித்ததற்கு, 2009ல் வெங்கட்ராமன் ராமகிருஷ்ணனுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது. தாமஸ் ஏ. ஸ்டீட்ஸ் மற்றும் அடா ஈ. யோனாத் ஆகியோருக்கும் சேர்த்தே இந்த நோபல் பரிசு வழங்கப்பட்டது.

    அமைதிக்கான நோபல் பரிசு 2014ல் கைலாஷ் சத்யார்த்திக்கு வழங்கப்பட்டது. குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்குஎதிரான அடக்குமுறை தொடர்பான, செயல்பாடுகளுக்காக இந்த விருது வழங்கப்பட்டது. பாகிஸ்தானை சேர்ந்த மலாலாவுக்கும் அப்போது அமைதிக்கான நோபல் விருது சேர்த்தே அறிவிக்கப்பட்டது.

    English summary
    Nobel Prize Winners from India list is here, we can find C.V.Raman to Abhijit Banerjee.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X