டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

போர்க்களமான டெல்லியில் இயல்பு நிலை திரும்பியது- வாகனங்கள், மெட்ரோ ரயில்கள் மீண்டும் இயக்கம்

Google Oneindia Tamil News

டெல்லி: விவசாயிகளில் ஒரு பிரிவினர் அனுமதி மறுக்கப்பட்ட பாதைகளில் டிராக்டர்கள் பேரணி நடத்தியதால் போர்க்களமான டெல்லியில் இயல்பு நிலை திரும்பி உள்ளது.

மத்திய அரசின் விவசாய சட்டங்களுக்கு எதிராக பல லட்சம் டிராக்டர்களுடன் டெல்லியில் பேரணி நடத்தப்படும் என விவசாயிகள் அறிவித்தனர். இதற்கான பாதைகள், நேரத்தை டெல்லி போலீசார் ஒதுக்கி இருந்தனர்.

Normalcy returns to Delhi, All Traffic movement normalises

ஆனால் குடியரசு தின நிகழ்ச்சிகள் நடைபெற்று கொண்டிருக்கும் போதே போலீசாரின் தடையை மீறி ஒரு பிரிவினர் டிராடர்கள் பேரணியை நடத்தினர். போலீசாரின் தடுப்புகளை உடைத்து நொறுக்கினர். உச்சகட்டமாக டெல்லி செங்கோட்டையில் சீக்கியர் கொடியும் ஏற்பட்டது.

இதனால்போலீசார் தடியடி, கண்ணீர்புகை குண்டுகள் வீச்சு என நடவடிக்கை மேற்கொண்டனர். இதனால் டெல்லி மாநகரமே போர்க்களமாக காட்சி தந்தது. இதனைத் தொடர்ந்து விவசாயிகள் சங்கத்தினர், டெல்லிக்குள் இருக்கும் விவசாயிகளை எல்லைகளுக்கு திரும்ப கேட்டுக் கொண்டனர்.

டெல்லி போராட்டம்- 18 போலீசார் படுகாயம்- ஒருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி டெல்லி போராட்டம்- 18 போலீசார் படுகாயம்- ஒருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி

தற்போது தலைநகர் டெல்லியில் அமைதி திரும்பியது. இயல்பு வாழ்க்கை திரும்பியுள்ளது. வாகனங்கள் வழக்கம் போல இயங்குகின்றன. மெட்ரோ ரயில் சேவைகள் இயக்கப்படுகின்றன. இன்றைய மோதலில் மொத்தம் 83 போலீசார் படுகாயமடைந்தனர். 18 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஒருவர் ஆபத்தான நிலையில் உள்ளார்.

Normalcy returns to Delhi, All Traffic movement normalises

இதனிடையே குடியரசு தின ஊர்வலத்தில் பங்கேற்ற 200க்கும் மேற்பட்டோர் டெல்லி செங்கோட்டை அருகே இந்த போர்க்களத்தில் சிக்கிக் கொண்டு தவித்தனர். அவர்களை சி.ஆர்.பி.எப். வீரர்கள் பாதுகாப்பாக மீட்டு அவர்களது இருப்பிடங்களுக்கு அனுப்பி வைத்தனர்

English summary
After the Violence, now traffic movement is normal at Peeragarhi Chowk and Punjabi Bagh Chowk. The route from NH-24 towards Ghaziabad and NH-9 towards Ghaziabad has also been cleared.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X