டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அவரே வரட்டும்.. மீண்டும் ஆக்டிவ் அரசியலுக்கு வரும் மன்மோகன் சிங்.. மாநில கட்சிகள் அசத்தல் யோசனை!

தி ஆக்சிடெண்டல் பிஎம் என்று பாஜகவால் வர்ணிக்கப்பட்ட முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு இன்னொரு முறை மிகப்பெரிய வாய்ப்பு கதவை தட்டி இருக்கிறது.

Google Oneindia Tamil News

Recommended Video

    மன்மோகன் சிங்கிற்கு மீண்டும் ஒரு வாய்ப்பு.. மாநில கட்சிகள் அசத்தல் யோசனை- வீடியோ

    டெல்லி: தி ஆக்சிடெண்டல் பிஎம் என்று பாஜகவால் வர்ணிக்கப்பட்ட முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு இன்னொரு முறை மிகப்பெரிய வாய்ப்பு கதவை தட்டி இருக்கிறது.

    முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை விமர்சிப்பதற்காக எடுக்கப்பட்ட படம்தான் தி ஆக்சிடெண்டல் பிஎம். பாஜக கட்சி இந்த படத்தை வைத்து தேர்தல் பிரச்சாரம் கூட செய்தது. ஆனால் அதே மன்மோகன் சிங்கிற்கு இன்னொரு முறை பிரதமர் ஆகும் வாய்ப்பு கை கூடி வந்துள்ளது.

    மன்மோகன் சிங் ஆட்சி காலத்தில் இந்தியாவின் ஜிஎஸ்டி பெரிய அளவில் வளர்ச்சி அடைந்தது. முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமாவே ''சிங் எனது நல்ல நண்பர்'' என்று பாராட்டும் அளவிற்கு உலக நாடுகளுடன் இந்திய உறவு சிறப்பாக இருந்தது.

    என் தாயைக் கூட விட்டு வைக்கவில்லை.. காங்கிரஸ் முன்வைத்த விமர்சனங்களை பட்டியலிட்டு மோடி வேதனை என் தாயைக் கூட விட்டு வைக்கவில்லை.. காங்கிரஸ் முன்வைத்த விமர்சனங்களை பட்டியலிட்டு மோடி வேதனை

    எப்படி வந்தார்

    எப்படி வந்தார்

    இவர் பிரதமர் ஆனதே கடைசி நேரத்தில் நிகழ்ந்த மாற்றம் என்றுதான் கூற வேண்டும். சோனியா காந்தி பிரதமராக முடியாது என்பதால், பிரணாப் முகர்ஜி தேர்வு செய்யப்பட்டு கடைசி நேரத்தில் அவர் மாற்றப்பட்டு, மன்மோகன் சிங் பிரதமர் ஆனார். ஆனால் அவர்தான் 10 வருடங்கள் நிலையான ஆட்சியை கொடுத்தார். விமர்சனங்கள் காரணமாக 2014 தேர்தலில் இவரது ஆட்சி அகற்றப்பட்டது. இவர் தற்போது ராஜ்யசபா எம்பியாக இருக்கிறார்.

    மீண்டும் ஆக்டிவ்

    மீண்டும் ஆக்டிவ்

    மன்மோகன் சிங் பெரிதாக அதிர்ந்து பேசாத நபர். செய்தியாளர்கள் சந்திப்பு நடந்தால் கூட இவர் குரலை உயர்த்தி பேசியது கிடையாது. ஆனால் இவர் கடந்த சில நாட்களாக பிரதமர் மோடியை நேரடியாக விமர்சனம் செய்து வருகிறார். மோடியின் ஆட்சி காலத்தின் பொருளாதார சீர்குலைவு, காங்கிரஸ் ஆட்சியில் நடந்த சர்ஜிக்கல் ஸ்டிரைக் குறித்து எல்லாம் மன்மோகன் சிங் வெளிப்படையாக பேச தொடங்கினார்.

    காரணம் என்ன

    காரணம் என்ன

    இவர் மீண்டும் ஆக்டிவ் அரசியலில் ஈடுபட காரணம் இருப்பதாக அரசியல் வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள். காங்கிரஸ் கட்சி, சில நினைத்த விஷயங்கள் நினைத்தபடி நடக்கவில்லை என்றால், மன்மோகன் சிங் என்ற டிரம்ப் கார்டை பயன்படுத்த வாய்ப்புள்ளது என்கிறார்கள். ஆம், 2004ல் காங்கிரஸ் கட்சிக்கு மன்மோகன் சிங் உதவியது போல 2019லும் உதவ வாய்ப்புள்ளது.

    இதுதான் பிளான்

    இதுதான் பிளான்

    அதன்படி லோக்சபா தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை ஏற்படாமல் போனால் கூட்டணி ஆட்சி அமைய வாய்ப்புள்ளது. அப்போது காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை எதிர்க்கட்சிகள் பிரதமராக ஏற்றுக்கொள்ள வாய்ப்பு குறைவு. அதேபோல் பிற மாநில தலைவர்களை, எல்லா கட்சிகளும் ஒருமனதாக ஏற்கவும் வாய்ப்பு குறைவு. இப்படிப்பட்ட நேரத்தில் மன்மோகன் சிங்கை களமிறக்க காங்கிரஸ் எண்ணுகிறது.

    இவர் ஏன்

    இவர் ஏன்

    மாயாவதி, மமதா போன்றவர்கள் ரேஸில் இருந்தாலும், எல்லா மாநில தலைவர்களும் ஒரு மனதாக இவர்களில் ஒருவரை தேர்வு செய்வார்களா என்பது சந்தேகமே. ஆனால் மன்மோகன் சிங் அனைத்து மாநில தலைவர்களுடனும் நட்பானவர். முக்கியமான அரசியல் தலைவர்களுக்கு இவர் நெருக்கமாக இருந்துள்ளார். இதனால் மன்மோகன் சிங்கை மாநில கட்சிகள் பிரதமராக ஏற்க வாய்ப்புள்ளது என்கிறார்கள். தேர்தல் முடிந்த பின் இவர் மீண்டும் தேர்தலில் நிற்க கூட வாய்ப்புள்ளது.

    நல்ல வாய்ப்பு உள்ளது

    நல்ல வாய்ப்பு உள்ளது

    மே 21ம் தேதி பிரதமரை தேர்வு செய்ய எதிர்க்கட்சிகள் கூட்டம் போட இருக்கிறது. இதில் மாயாவதி, மமதா பானர்ஜி.. கடைசியாக ராகுலின் பெயர்கள் விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மூன்று பெயர்களும் டிக் செய்யப்படவில்லை என்றால் கண்டிப்பாக மன்மோகன் சிங் பெயர் தேர்வு செய்யப்படும் என்று கூறப்படுகிறது.

    அந்த அனுபவம்

    அந்த அனுபவம்

    ஏற்கனவே அவருக்கு கூட்டணி கட்சிகளை வைத்து ஆட்சி நடத்திய அனுபவம் இருக்கிறது. எதிர் எதிர் துருவங்களாக இருக்கும் கட்சிகளை கூட்டணியில் வைத்து அனுசரித்து போய் ஆட்சி நடத்திய அனுபவம் மன்மோகன் சிங்கிற்கு இருக்கிறது. இதனால் அவர் தேர்வு செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது என்றும் கூறுகிறார்கள்.

    English summary
    Not an Accidental PM this time: Search for a National leader may give Congress PM Manmohan Singh a chance.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X