டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பாஜகவின் தேசிய நிர்வாகிகள் பட்டியல்- ஹெச். ராஜாவுக்கு மீண்டும் தேசிய செயலாளர் பதவி இல்லை

Google Oneindia Tamil News

டெல்லி: பாரதிய ஜனதா கட்சியின் தேசிய நிர்வாகிகள் பட்டியலை அக்கட்சியின் தலைவர் ஜே.பி. நட்டா வெளியிட்டுள்ளார். இதில் தமிழகத்தைச் சேர்ந்த பாஜக நிர்வாகிகள் யாருக்கும் தேசிய பொறுப்பு வழங்கப்படவில்லை. பாஜகவின் தேசிய செயலாளராக இருந்த ஹெச். ராஜாவுக்கு மீண்டும் அப்பதவியும் வழங்கவில்லை.

பாரதிய ஜனதா கட்சியின் 12 துணைத் தலைவர்கள், 23 செய்தித் தொடர்பாளர்கள் உட்பட 70 தேசிய அளவிலான நிர்வாகிகள் பட்டியலை ஜேபி நட்டா இன்று வெளியிட்டார். இதில்தான் தமிழக பாஜக தலைவர்கள் யாருடைய பெயரும் இடம்பெறவில்லை.

அத்துடன் தமிழக பாஜக மேலிட பொறுப்பாளராக இருந்த முரளிதர் ராவ் அதில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். பாஜகவின் இந்த பட்டியலில் ஏற்கனவே தேசிய செயலாளர் பொறுப்பில் இருந்த எச். ராஜாவின் பெயரும் கூட இல்லை. இதனால் தமிழக பாஜகவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

யார் யார் துணைத் தலைவர்கள்?

யார் யார் துணைத் தலைவர்கள்?

பாஜக புதிய துணைத் தலைவர்கள்: ராமன்சிங் (சத்தீஸ்கர்), வசுந்தரராஜே சிந்தியா (ராஜஸ்தான்), ராதாமோகன்சிங் (பீகார்), பைஜந்த் ஜெய் பாண்டா (ஒடிசா), ரகுபர்தாஸ்(ஜார்க்கண்ட்), முகுல் ராய் (மேற்கு வங்கம்), ரேகா வர்மா (உபி), அன்னபூர்னா தேவி (குஜராத்), டிகே அருணா (தெலுங்கானா), சசூபா ஆவோ (நாகாலாந்து), அப்துல்லா குட்டி(கேரளா)

புதிய பொதுச்செயலாளர்கள்

தேசிய பொதுச்செயலாளர்கள்: பூபேந்திரன் யாதவ் (ராஜஸ்தான்), அருண் சிங் (உபி), கைலாஷ் விஜவர்ஜியா (மபி), துஷ்யந்த் குமார் கவுதம் (டெல்லி), புரந்தரேஸ்வரி (ஆந்திரா), சிடி ரவி (கர்நாடகா), தருண் சுக் (பஞ்சாப்), திலிப் சாகியா (அஸ்ஸாம்). தேசிய பொதுச்செயலாளர் (அமைப்பு)- பி.எல்.சந்தோஷ் (டெல்லி).

தேசிய செயலர் பட்டியலில் ஹெச். ராஜா இல்லை

தேசிய செயலர் பட்டியலில் ஹெச். ராஜா இல்லை

தேசிய இணைச் செயலாளர்கள்: வி. சதீஷ் (மும்பை), சுதன்சிங் (ராய்ப்பூர்), சிவபிரகாஷ் (லக்னோ); தேசிய செயலாளர்கள்-வினோத் தாவதே (மகாராஷ்டிரா), வினோத் சோங்கர் (உபி), பிஸ்வேஸ்வர் துடு (ஒடிஷா), சத்யா குமார்(ஆந்திரா), சுனில் தியோதர் (மகாராஷ்டிரா), அரவிந்த் மேனன் )டெல்லி), ஹரீஷ் திவேதி (உபி) பங்கஜா முண்டா (மகாராஷ்டிரா), ஓம் பிரகாஷ் துர்வே(மபி), அனுபம் ஹஜ்ரா (மேற்கு வங்கம்), நரேந்திர சிங் (ஜம்மு காஷ்மீர்), விஜயா ரத்கார் (மகாராஷ்டிரா), அல்கா குர்ஜா (ராஜஸ்தான்).

சர்ச்சைக்குரிய அமித் மாளவியா, தேஜஸ்வி

சர்ச்சைக்குரிய அமித் மாளவியா, தேஜஸ்வி

பாஜவின் தேசிய பொருளாளராக ராஜேஷ் அகர்வா (உபி) நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் 23 செய்தித் தொடர்பாளர்களும் அறிவிக்கப்பட்டுள்ளனர். பாஜகவின் தேசிய இளைஞரணி அமைப்பான யுவ மோர்ச்சாவுக்கு சர்ச்சைக்குரிய கர்நாடகா எம்பி தேஜஸ்வி சூர்யா நியமிக்கப்பட்டுள்ளார். அத்துடன் பாஜகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவு பொறுப்பாளராக அமித் மாளவியா நியமிக்கப்பட்டுள்ளார். இவரைத்தான் நீக்க வேண்டும் என்று பாஜகவின் ராஜ்யசபா எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி போர்க்கொடி தூக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

English summary
Not a single person from Tamil Nadu in BJP's new list of national office bearers.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X