டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இஎம்ஐ காலக்கெடு நீட்டிப்பு இனியும் கிடையாது.. உச்சநீதிமன்றத்தில் ரிசர்வ் வங்கி தகவல்

Google Oneindia Tamil News

டெல்லி: கொரோனா லாக்டவுனை காரணம் காட்டி, மேலும் கடன் தவணை சலுகை வழங்க முடியாது என்று உச்சநீதிமன்றத்தில் ரிசர்வ் வங்கி பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது.

கொரோனா காரணமாக நாடு முழுக்க கடந்த மார்ச் இறுதியிலிருந்து ஊரடங்கு அமலுக்கு வந்தது. ஆரம்ப கட்டங்களில் ஊரடங்கு மிக கடுமையாக இருந்தது. எனவே தொழில் நிறுவனங்கள் இயங்கவில்லை. மக்கள் கையில் பணப்புழக்கம் இல்லை. எனவே, 3 மாத காலம் இஎம்ஐ செலுத்த கால அவகாசம் வழங்கியது ரிசர்வ் வங்கி.

Not possible to extend loan moratorium period: RBI to Supreme Court

நீடித்து உத்தரவிட்டது. முதலில் மார்ச், ஏப்ரல், மே ஆகிய மாதங்களுக்கு சலுகை வழங்கப்பட்டது. அதன்பிறகு அடுத்த மூன்று மாதங்களுக்கும் இஎம்ஐ சலுகை தொடர்ந்தது. இந்த நிலையில் கட்டப்படாத இஎம்ஐகளுக்கு வட்டி மீதான வட்டி வசூலிக்கப்படும் என்று வங்கிகள் தெரிவித்தன. இதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது.

இதில் மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கியை பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதையேற்று ரிசர்வ் வங்கி இன்று தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் இஎம்ஐ ஒத்திவைப்பு சலுகையை மேலும் நீடிக்க முடியாது என திட்டவட்டமாக கூறிவிட்டது.

ஆறு மாதங்களுக்கும் மேலான நீண்ட கால ஒத்தி வைப்பு பொருளாதாரத்தில் கடன் செயல்முறையில் பலவீன தாக்கத்தை ஏற்படுத்தும். ஒட்டுமொத்த கடன் ஒழுக்கமும் போய்விடும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

English summary
Reserve Bank of India (RBI) has filed fresh affidavit in the Supreme Court in the loan moratorium case.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X