டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மூடப்பட்ட கதவுகள்.. பிரச்சனை தொடக்கிவிட்டது.. நேபாளத்தின் புதிய மேப்பிற்கு இந்தியா கொடுத்த பதிலடி!

Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியாவிற்கு எதிராக நேபாளம் புதிய வரைபடம் வெளியிட்டதற்கு இந்திய வெளியுறவுத்துறை கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளது.

Recommended Video

    நேபாளத்தின் புதிய மேப்பிற்கு இந்தியா கொடுத்த பதிலடி!

    இந்தியா - நேபாளம் ஆகிய இரண்டு நாட்டு உறவில் பெரிய அளவில் விரிசல் ஏற்பட்டு உள்ளது. இந்தியாவில் இருக்கும் லிபு லேக் பகுதியை தங்களுக்கு சொந்தமானது என்று நேபாளம் சொந்தம் கொண்டாடி வருகிறது.

    அங்கு இந்தியா அமைத்த சாலைக்கு நேபாளம் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. இதனால் லிபுலேக் பகுதியை தங்களுக்கு சொந்தமானது என்று கூறி நேபாளம் மேப் ஒன்றையும் வெளியிட்டு இருக்கிறது.

    'அந்த சாலை' தான் காரணம்.. அடுத்தடுத்து இந்தியாவுக்கு எதிராக திரும்பிய நேபாளம்.. பரபர பின்னணி 'அந்த சாலை' தான் காரணம்.. அடுத்தடுத்து இந்தியாவுக்கு எதிராக திரும்பிய நேபாளம்.. பரபர பின்னணி

    என்ன படம்

    என்ன படம்

    இந்தியாவில் இருக்கும் லிபு லேக், லம்பியாதூரா, கலபாணி ஆகிய பகுதிகளை நேபாளம் உள்ளே கொண்டு வந்து வரைபடமாக அந்த நாடு வெளியிட்டது. இதை அந்நாட்டின் இரண்டு அவைகளிலும் பிரதமர் சர்மா தாக்கல் செய்துள்ளார். அதோடு இந்தியா மீது அவர் கடுமையான விமர்சனங்களையே வைத்து வந்தார். இந்தியா அந்த இடங்களை அபகரித்துவிட்டது என்றும் கூறி வந்தார்.

    பேச்சுவார்த்தை

    பேச்சுவார்த்தை

    இந்த புதிய வரைபடம் நேற்று அந்நாட்டு பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. ஆளும் கட்சி, எதிர்க்கட்சி இரண்டும் புதிய வரைபடத்திற்கு ஆதரவு தெரிவித்தது. இதனால் மசோதா ஒரு மனதாக நிறைவேறியது. இதையடுத்து அந்நாட்டு புதிய மேப் அமலுக்கு வந்துள்ளது. இந்தியாவுடன் நேபாளம் பேச்சுவார்த்தை நடத்தும் என்று எதிர்க்கப்பட்ட நிலையில் அதற்கான கதுவுகள் மூடப்பட்டுள்ளது.

    நேபாளம் வழங்கவில்லை

    நேபாளம் வழங்கவில்லை

    இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான எந்த வாய்ப்பையும் நேபாளம் வழங்கவில்லை. இந்த நிலையில் இது தொடர்பாக தற்போது இந்திய வெளியுறவுத்துறை கருத்து தெரிவித்துள்ளது. அதில் , நேபாளத்தின் இந்த முடிவு தவறானது. நேபாளம் தங்கள் முடிவை, புதிய வரைபடத்தை வரலாற்று ரீதியாக நிரூபிக்க முடியாது. நேபாளத்தின் இந்த புதிய மேப்பிற்கு வரலாற்று ரீதியாக எந்த விதமான ஆதாரமும் இல்லை.

    அத்துமீறல்

    அத்துமீறல்

    எங்கள் உரிமையை, இந்தியாவை இறையாண்மைக்கு எதிராக இந்த நடவடிக்கையை நேபாளம் எடுத்து இருக்கிறது. இரண்டு நாட்டு புரிதலுக்கு எதிராகவும், பேச்சுவார்த்தைக்கு எதிராகவும் நேபாளம் இப்படி செய்து இருக்கிறது.இந்தியாவின் சூழ்நிலையை நேபாளம் புரிந்து கொள்ளும் என்று நினைக்கிறோம். பேச்சுவார்த்தைக்கு ஏற்ற தளத்தை இந்தியா உருவாக்கும் என்று நம்புகிறோம், என்று இந்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

    English summary
    Not Tenable: India replies to Nepal's new map which gets its nod from Parliament.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X