டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கொரோனா தடுப்பூசி சப்ளை ஈஸியாகும்.. அமெரிக்காவின் நோவாவாக்ஸுடன் இந்திய நிறுவனம் ஒப்பந்தம்

Google Oneindia Tamil News

டெல்லி: நோவாவாக்ஸ் இன்க் கோவிட் -19 தடுப்பூசி சப்ளை தொடர்பாக இந்தியாவின், முன்னணி மருந்து நிறுவனமான, சீரம் இன்ஸ்டிடியூட்டுடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

இந்த ஒப்பந்தத்தால், இந்தியாவில், நோவாவாக்ஸ் கொரோனா தடுப்பு மருந்தை சப்ளை செய்யும், பிரத்யேக உரிமையை சீரம் நிறுவனம் பெறும். அதேநேரம், பெருந்தொற்று காலகட்டத்தில், பிற நாடுகளுக்கும் மருந்தை சப்ளை செய்ய முடியும்.

உலக வங்கியால் உயர் நடுத்தர அல்லது உயர் வருமானம் கொண்ட நாடுகளாக அறிவிக்கப்பட்ட நாடுகளைத் தவிர மற்ற எல்லா நாடுகளிலும் தொற்றுநோய் காலகட்டத்தில், மருந்து சப்ளை செய்ய முடியும் என்கிறது இந்த ஒப்பந்தம்.

இந்தியாவில் 20 லட்சம் பேரை எட்டப்போகும் கொரோனா - 12,82,215 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்இந்தியாவில் 20 லட்சம் பேரை எட்டப்போகும் கொரோனா - 12,82,215 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்

ஆன்டிபாடி

ஆன்டிபாடி

நோவாவாக்ஸ் அதன் கோவிட் -19 தடுப்பூசியின் ஆரம்ப கட்ட மருத்துவ பரிசோதனையில் கொரோனா வைரசுக்கு எதிராக அதிக அளவு ஆன்டிபாடிகளை உருவாக்கியது என்றும், இது செப்டம்பர் பிற்பகுதியில் மூன்றாம் கட்ட சோதனையைத் தொடங்கலாம் என்றும் தெரிவித்துள்ளது.

ஆரம்ப கட்டம்

ஆரம்ப கட்டம்

ஒரு சிறிய, ஆரம்ப கட்ட மருத்துவ பரிசோதனையின் ஆரம்ப டேட்டா தகவல்படி, கோவிட் -19 தடுப்பூசி கொரோனா வைரஸுக்கு எதிராக அதிக அளவு ஆன்டிபாடிகளை உருவாக்கியது என்று நோவாவாக்ஸ் கூறியிருந்தது. "செப்டம்பர் பிற்பகுதியில் ஒரு பெரிய முக்கிய கட்ட மூன்றாம் சோதனையைத் தொடங்கலாம்" என்று அந்த நிறுவனம் மேலும் கூறியது.

தடுப்பூசி

தடுப்பூசி

எனவே, 2021 ஆம் ஆண்டில் 1 பில்லியன் முதல் 2 பில்லியன் டோஸ் தடுப்பூசியை உற்பத்தி செய்ய முடியும் என்று நோவாவாக்ஸ் கூறுகிறது. அமெரிக்காவின் மேரிலாந்தை சேர்ந்த நோவாவாக்ஸ் தயாரித்துள்ள தடுப்பூசி பெயர், NVX-CoV2373.

தடுப்பூசி உற்பத்தி

தடுப்பூசி உற்பத்தி

இந்திய நிறுவனமான சீரம் ஏற்கனவே ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக டிரையல்களுக்கு அனுமதி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் தடுப்பூசியை அதிக அளவுக்கு உற்பத்தி செய்து வருகிறது சீரம். எனவே இதுபோன்ற ஒப்பந்தங்கள் அதிக மக்களுக்கு எளிதாக கொரோனா வைரசை கொண்டு சேர்க்க உதவும் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Novavax Inc said on Wednesday it has entered a supply and license agreement with the Serum Institute of India for the development and commercialization of its Covid-19 vaccine candidate.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X