டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பூட்டானுடன் எல்லை பிரச்சனை இருக்கிறது..பஞ்சாயத்துக்கு அதிகாரப்பூர்வமாக பிள்ளையார் சுழி போட்ட சீனா

Google Oneindia Tamil News

டெல்லி: பூட்டானுடன் எல்லை பிரச்சனை இருப்பதாக முதன் முறையாக சீனா பகிரங்கமாக அறிவித்துள்ளது. இதனால் சீனா, இந்தியா, பூட்டான் இடையேயான உறவில் மீண்டும் பதற்றம் உருவாகி உள்ளது.

லடாக் எல்லையில் கால்வன் பள்ளத்தாக்கை ஆக்கிமிக்க சீனா முயற்சித்தது. இதனை இந்திய ராணுவம் முறியடித்தது. இம்மோதலில் 20 இந்திய ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர்.

Now China claims territory in Bhutan

இதனால் இந்திய- சீனா உறவில் பெரும் பதற்றம் உருவாகியுள்ளது. லடாக்குக்கு பிரதமர் மோடி நேரில் சென்று நிலைமையை ஆய்வு செய்தார்.

இதனிடையே பூட்டான், அருணாசல பிரதேசங்களிலும் சீனா குடைச்சல் கொடுக்க தொடங்கியது. தற்போது பூட்டானுடன் தங்களுக்கு எல்லை பிரச்சனை இருக்கிறது என பகிரங்கமாக பிள்ளையார் சுழி போட்டு சர்ச்சையை தொடங்கி வைத்திருக்கிறது.

Now China claims territory in Bhutan

பூட்டானின் டோக்லாம் பீடபூமியை கைப்பற்ற சீனா கடும் முயற்சித்தது. ஆனால் பூட்டானின் பாதுகாப்புக்கு பொறுப்பாக இருக்கும் இந்திய ராணுவம் சீனாவின் இந்த ஆக்கிரமிப்பை வெற்றிகரமாக முறியடித்தது. இந்தியாவை பொறுத்தவரை டோக்லாம் என்பது பூட்டானுக்கான எல்லை பகுதி மட்டும் அல்ல.

பெரும் திருப்பம்.. ரஷ்யாவுடன் சண்டைக்கு போகும் சீனா.. தொடங்கியது புதிய எல்லை பிரச்சனை.. ஷாக் பின்னணிபெரும் திருப்பம்.. ரஷ்யாவுடன் சண்டைக்கு போகும் சீனா.. தொடங்கியது புதிய எல்லை பிரச்சனை.. ஷாக் பின்னணி

டோக்லாமை சீனா கைப்பற்றினால் இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களை இந்திய பெருநிலப்பரப்புடன் இணைக்கக் கூடிய இணைப்பை எளிதில் அந்த நாட்டால் துண்டித்துவிட முடியும். ஆகையால்தான் இந்தியாவைப் பொறுத்தவரை டோக்லாம் மிகவும் கேந்திர முக்கியமான பகுதியாக பார்க்கிறது. இந்த நிலையில் சீனா, பூட்டானிலும் எல்லை பிரச்சனையை தொடங்கி வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

English summary
China has now made a new territorial claim along the undisputed stretch of its border with Bhutan.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X