டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அயோத்தியில் ராமர் கோயில்.. நம்மால் முடிந்த பங்களிப்பை செய்வோம்.. அக்‌ஷய் குமார் வீடியோ வெளியீடு

Google Oneindia Tamil News

டெல்லி: பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் ஞாயிற்றுக்கிழமை உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோயிலுக்கு தங்களால் முடிந்த பங்களிப்பு செய்யுமாறு ரசிகர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் 1992ம் ஆண்டு பாபர் மசூதி இடிக்கப்பட்து. அப்போது ஏற்பட்ட வகுப்புவாத வன்முறையில் நாடு முழுவதும் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். இதையடுத்து அந்த சர்ச்சைக்குரிய இடம் யாருக்கு சொந்தம் என்று பல வருடங்களாக வழக்கு நடந்து வந்தது.

இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் கடந்த 2019ம் ஆண்டு நவம்பர் மாதம் தீர்ப்பு அளித்தது. குறிப்பிட்ட இடத்தில் ராமர் கோயில் கட்டிக்கொள்ளலாம் என்று உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல சாசன அமர்வு தீர்ப்பு வழங்கியது.

கேஸ் சிலிண்டர் புக்கிங் செய்ய போறீங்களா.. பிப்ரவரி 1ம் தேதி முதல் சூப்பர் மாற்றம் நடைமுறை! கேஸ் சிலிண்டர் புக்கிங் செய்ய போறீங்களா.. பிப்ரவரி 1ம் தேதி முதல் சூப்பர் மாற்றம் நடைமுறை!

ஆகஸ்டில் அடிக்கல்

ஆகஸ்டில் அடிக்கல்

கோயிலின் கட்டுமானத்தை நிர்வகிக்கவும் மேற்பார்வையிடவும் ஒரு அறக்கட்டளை அமைக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. இதன்படி அறக்கட்டளை அமைக்கப்பட்டது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பிரதமர் நரேந்திர மோடி அந்த இடத்தில் கோயில் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டினார்.

குடியரசுத் தலைவர் நன்கொடை

குடியரசுத் தலைவர் நன்கொடை

இந்நிலையில் ராமர் கோயில் அறக்கட்டளை நாடு தழுவிய நன்கொடை இயக்கத்தை தற்போது தொடங்கி உள்ளது. கோயில் கட்ட 1,100 கோடி ரூபாய் செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. பிப்ரவரி 27 வரை தொடரும் நன்கொடைக்கான இயக்கத்தில் பல்வேறு அரசியல் மற்றும் அரை-அரசியல் அமைப்புகளின் தலைவர்கள் இணைந்துள்ளனர். குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் ராமர் கோயில் கட்ட 5 லட்சம் மற்றும் நூறு உறுதிமொழி அளித்தார்.

அறக்கட்டளை முடிவு

அறக்கட்டளை முடிவு

₹ 10, ₹ 100 அல்லது ₹ 1,000 என நாட்டு மக்களின் பங்களிப்பு மூலம் நிதி திரட்டுவதற்காக மூன்று வகையான கூப்பன்களை நன்கொடை பெற கோயில் அறக்கட்டளை வெளியிட்டுள்ளது. இந்துக்கள் அனைவரும் ராமர் கோயில் கட்ட நிதி அளிப்பார்கள் என்று கோயில் அறக்கட்டளை நம்புகிறது. இதனிடையே எந்தவொரு நாட்டு அரசாங்க நிதி, வெளிநாட்டிலிருந்து வரும் பணம் அல்லது கார்ப்பரேட்டுகளிடம் இருந்து ராமர் கோயில் கட்ட நன்கொடைகள் பெறுவது இல்லை என்று அறக்கட்டளை முடிவு செய்துள்ளது. முற்றிலும் பொதுமக்களின் பங்களிப்பில் ராமர் கோயில் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.

ராமர் கோயில்

இந்நிலையில் ராமர் கோயில் கட்டுவதற்கு நிதி திரட்டுவதற்கான பிரச்சார இயக்கத்தில் நடிகர் அக்‌ஷய் குமார் இணைந்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வீடியோவில். "அயோத்தியில் நம்முடைய பிரம்மாண்டமான ஸ்ரீ ராம் கோயிலின் கட்டுமானப் பணிகள் தொடங்கியிருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இப்போது நம்மால் முடிந்த பங்களிப்பை ராமர் கோயிலுக்கு செய்வோம். நான் இதில்இணைந்துள்ளேன். நீங்களும் இதில் இணைந்து பங்களிப்பு செய்வீர்கள் என நம்புகிறேன் என்று கூறியுள்ளார்.

English summary
Bollywood star Akshay Kumar on Sunday sent out a call to fans that It is a matter of great pleasure that the construction of our grand temple of Sri Rama has begun in Ayodhya… Now it is our turn to contribute. I have started, hope you will join together. Jai Siyaram.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X