டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

லடாக் போர்முனை - 1999-ம் ஆண்டு கார்கில் யுத்தத்துக்குப் பின் எல்லையில் உச்சகட்ட போர் பதற்றம்

Google Oneindia Tamil News

டெல்லி: 1999-ம் ஆண்டு கார்கில் யுத்தத்துக்குப் பின்னர் லடாக் எல்லையில் உச்சகட்ட போர் பதற்றம் உருவாகி உள்ளது.

Recommended Video

    எல்லையில் 3 கி.மீ. தொலைவுக்குள் ஊடுருவிய சீன ராணுவம் ? | Oneindia Tamil

    லடாக் எல்லை இப்போது சீனா- இந்தியா இடையேயான போர் முனையாக விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது. லடாக்கின் கால்வின் பள்ளத்தாக்கை சீனா ஏற்கனவே கடந்த காலங்களில் போர் களப் பகுதியாக பயன்படுத்தி வந்துள்ளது.

    எல்லையில் ஓயாத தொல்லை.. சீனாவை வழிக்கு கொண்டுவர.. இந்தியா கையில் எடுத்தது 'திரிசூல' வியூகம்! எல்லையில் ஓயாத தொல்லை.. சீனாவை வழிக்கு கொண்டுவர.. இந்தியா கையில் எடுத்தது 'திரிசூல' வியூகம்!

    லடாக் கால்வின் பள்ளத்தாக்கு

    லடாக் கால்வின் பள்ளத்தாக்கு

    தற்போதும் இதே பகுதிகளில்தான் சீனா வாலை ஆட்டிக் கொண்டு நிற்கிறது. இந்திய எல்லைக்குள் 3 கி.மீ. தொலைவுக்கு சீனா ஊடுருவி இருக்கிறது என்கிறது சில தகவல்கள். அதேநேரத்தில் இந்திய நிலைகளில் இருந்து 10 முதல் 15 கி.மீ. தொலைவில் இன்னொரு பக்கம் முகாமிட்டு நிற்கிறதாம் சீனா படைகள்.

    படைகள் குவிப்பு இடம்

    படைகள் குவிப்பு இடம்

    எல்லையில் சீனா தாம் சொல்லுகிற எல்லைகட்டுப்பாட்டு கோட்டு பகுதியில்தான் படைகளை குவித்திருக்கிறது என சொல்கிறது. ஆனால் செயற்கைக்கோள் வரைபடங்களை ஆராயும் பாதுகாப்புத் துறை வல்லுநர்கள், பொதுவான எல்லை கட்டுப்பாட்டுப் கோட்டுப் பகுதியில்தான் சீனா தமது படைகளை ஊடுருவ செய்திருக்கிறது என்கின்றனர்.

    ராணுவம் குவிப்பால் பதற்றம்

    ராணுவம் குவிப்பால் பதற்றம்

    இந்திய நிலையான KM120 -ல் இந்தியா ஏற்கனவே 250 வீரர்களைக் கொ ண்ட குழுவை முகாமிட வைத்திருக்கிறது. இப்பகுதியில் மேலும் ராணுவ வீரர்கள் களமிறக்கப்பட உள்ளனர். இதனால் 1999-ம் ஆண்டு கார்கில் யுத்தத்துக்குப் பின்னர் லடாக் பிராந்தியத்தில் போர் மேகங்கள் சூழ்ந்து நிற்கின்றன.

    எங்கே ஊடுருவினாலும் அடி

    எங்கே ஊடுருவினாலும் அடி

    இப்பகுதியில் மட்டும் அல்லாது, சீனாவுடனான அனைத்து எல்லைப் பகுதிகளிலும் நமது ராணுவம் தீவிர ரோந்து பணிகளை மேற்கொண்டு வருகிறது. சீனா ராணுவம் ஒரு அங்குலம் முன்னேறி ஊடுருவ முயற்சித்தாலும் பதிலடி தருவது என்பதில் நமது ராணுவம் உறுதியுடன் களத்தில் இருக்கிறது என்கின்றன பாதுகாப்பு வட்டாரங்கள்.

    English summary
    India is facing border tensions since the Kargil battle in 1999 now in Ladakh.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X