டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

குடிமக்களின் தேசிய பதிவேடு.. எதிர்காலத்திற்கான ஆவணம்.. என்ஆர்சி பற்றி தலைமை நீதிபதி கருத்து!

குடிமக்களின் தேசிய பதிவேட்டு(National Register of Citizens) என்பது எதிர்காலத்திற்கான ஆவணம் என்று தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

டெல்லி: குடிமக்களின் தேசிய பதிவேட்டு(National Register of Citizens) என்பது எதிர்காலத்திற்கான ஆவணம் என்று தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தெரிவித்துள்ளார்.

1968ல் வங்கதேசம் உருவாகும் முன் அங்கு இருந்த கிழக்கு பாகிஸ்தானில் திடீர் மதக்கலவரம் ஏற்பட்டது. இதனால் அப்போது அங்கிருந்து சாரைசாரையாக மக்கள் இந்தியாவில் குடியேறினார்கள். இந்தியாவிற்கு வந்த அவர்கள் அகதிகளாக தங்களை பதிவு செய்து கொண்டனர்.

இந்த நிலையில் வங்கதேசத்தில் இருந்து அசாமில் முறைகேடாக குடியேறிய மக்களை வெளியேற்ற மத்திய பாஜக அரசு தீவிரமாக முயன்று வருகிறது. இதற்காக அசாம் அரசுடன் சேர்ந்து மத்திய அரசு குடிமக்களின் தேசிய பதிவேட்டை வெளியிட்டது.

லிஸ்ட்

லிஸ்ட்

இதன்படி 1971க்கு பின் இந்தியாவில் வங்கதேசத்தில் இருந்து முறையின்றி குடியேறிவர்கள் வெளியேற்றப்படுவார்கள். கடைசியாக வெளியான குடிமக்களின் தேசிய பதிவேட்டில் 33 மில்லியன் விண்ணப்பங்களில் 1.9 மில்லியன் மக்கள் விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்படவில்லை . இவர்களின் பெயர் மறுபரிசீலனைக்கு அனுப்பப்பட்டு இருக்கிறது.

உச்ச நீதிமன்றம்

உச்ச நீதிமன்றம்

இதை உச்ச நீதிமன்றம் தீவிரமாக கண்காணித்து வருகிறது. இது குறித்து தற்போது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் பேட்டி அளித்துள்ளார். அதில், குடிமக்களின் தேசிய பதிவேடு வெறும் பட்டியல் கிடையாது. அது ஒரு ஆவணம். 19 லட்சம் அல்லது 40 லட்சம் என்பது பொருட்டல்ல. இது எதிர்காலத்திற்கான ஆவணம். நம்முடைய எதிர்காலம் இதை நம்பி இருக்கிறது.

என்ன மதிப்பு

என்ன மதிப்பு

குடிமக்களின் தேசிய பதிவேடு என்பது என்னை பொறுத்தவரை அமைதியாக ஒருங்கிணைந்து வாழ்வதற்கான அர்த்தம் என்று சொல்வேன். முன்னேறிய சமுதாயம் என்பது எல்லோரையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். இதற்கு எதிராக சிலர் சமூக வலைத்தளங்களில் பேசி வருகிறார்கள்.

 கைகளை முறுக்கினார்கள்

கைகளை முறுக்கினார்கள்

இந்த பட்டியலுக்கு எதிராக பலர் சமூக வலைதங்களில் கைகளை முறுக்கி, எதிராக இரட்டை மனநிலையுடன் பேசினார்கள். ஆனால் அப்படிப்பட்ட கருத்துக்கள் எல்லாம் முற்றிலும் உண்மைக்கு புறம்பானது, என்று தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் குறிப்பிட்டுள்ளார். தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் இன்னும் 2 வாரங்களில் ஓய்வு பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
NRC list is the Document for the future says Chief Justice Ranjan Gogoi.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X