தேசிய குடிமக்கள் பதிவேடு (என்.ஆர்.சி) நடைமுறை நாடு முழுவதும் அமல்படுத்தப்படும்: அமித்ஷா
டெல்லி : தேசிய குடிமக்கள் பதிவேடு (என்.ஆர்.சி.) நடைமுறை நாடு முழுவதும் அமல்படுத்தப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவித்துள்ளார்.
ராஜ்யசபாவில் ஜம்மு காஷ்மீர் விவகாரத்தைத் தொடர்ந்து என்.ஆர்.சி. குறித்து அமித்ஷா பேசியதாவது:

தேசிய குடிமக்கள் பதிவேடு நடைமுறை என்பது உச்சநீதிமன்றத்தின் கண்காணிப்பின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் எந்த ஒரு மதமும் குறிவைக்கப்படவில்லை. எந்த ஒரு மதத்தினரையும் தனிமைப்படுத்தவும் இல்லை.
வதந்திகளை பரப்ப வேண்டாம்.. காஷ்மீரில் இயல்பு நிலை திரும்பிவிட்டது.. ராஜ்யசபாவில் அமித் ஷா பேச்சு!
அனைத்து மதத்தினருக்கும் உரிய பாதுகாப்பை மத்திய அரசு வழங்கும். தேசிய குடிமக்கள் பதிவேடு நடைமுறையானது இந்தியா முழுவதும் அமல்படுத்தப்படும்.
அஸ்ஸாமில் தேசிய குடிமக்கள் பதிவேட்டில் பெயர் இடம்பெறாதவர்கள் அதற்கான தீர்ப்பாயத்தில் முறையிடலாம். இதற்கான உதவிகளை அஸ்ஸாம் மாநில அரசு செய்து தரும். இவ்வாறு அமித்ஷா கூறினார்.
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!