டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

செம செம.. உழைப்பாளி தமிழர்கள்... தேசிய வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தில் தமிழகம் டாப்!

Google Oneindia Tamil News

புதுடெல்லி: கொரோனா பாதிப்பில் நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்பட்ட நிலையில், மத்திய அரசின் தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டத்தின் (என்.ஆர்.இ.ஜி.எஸ்) கீழ் கிராமப்புறங்கள் அதிக அளவில் பயன் அடைந்துள்ளது.

என்.ஆர்.இ.ஜி.எஸ் திட்டத்தில் அதிக அளவு வேலை பெற்றவர்கள் பட்டியலில் தமிழகம் முதல் இடத்தில் உள்ளது. இந்த திட்டத்தின் வருவாயும் நடப்பு ஆண்டில் அதிகமாக உள்ளது.

மேற்கு வங்கம், உத்தரப்பிரதேச மாநிலங்களும் இந்த திட்டத்தில் சிறப்பாக செயலாற்றி உள்ளன. அக்டோபரில் மட்டும் 1.98 கோடி குடும்பங்கள் இத்திட்டத்தில் பயன் அடைந்தன

இலங்கையின் மட்டக்களப்பு- பருத்தித்துறை இடையே கரையை கடந்து மன்னார் வளைகுடாவுக்குள் நுழையும் 'புரேவி'இலங்கையின் மட்டக்களப்பு- பருத்தித்துறை இடையே கரையை கடந்து மன்னார் வளைகுடாவுக்குள் நுழையும் 'புரேவி'

 கொரோனா கொடுத்த அடி

கொரோனா கொடுத்த அடி

கொரோனா தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் நாட்டின் பொருளாதாரம் அடியோடு முடங்கியது. இப்போது ஓரளவு முன்னேற்றம் கண்டாலும், கொரோனாவுக்கு முந்தைய பழைய பொருளாதார நிலையை எட்டவில்லை.

 கிராமங்களில் வேலை

கிராமங்களில் வேலை

கொரோனா தாக்கம் நாட்டின் முதுகெலும்பான கிராமப்புறங்களை தாக்கியது. அங்கு பலர் வேலை இல்லாமல் சிரமப்பட்டனர். மத்திய அரசின் தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டத்தின் (என்.ஆர்.இ.ஜி.எஸ்) கீழ் கிராமப்புற மக்களுக்கு வேலை வழங்கப்பட்டு வருகிறது. நாட்டின் உள்ள கிராம பஞ்சாயத்து மக்கள் இந்த திட்டத்தின் கீழ் வேலை பெற்று வருகின்றனர்.

 பதிவு அதிகம்

பதிவு அதிகம்

இந்த நிலையில் கொரோனா காலகட்டத்தில் தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டத்தின் கீழ் வழக்கத்தை விட அதிகமான கிராம பஞ்சாயத்துகள் பதிவு செய்துள்ளது தெரியவந்துள்ளது. என்.ஆர்.இ.ஜி.எஸ. தளத்தில் நவம்பர் 29 ஆம் தேதி வரை வெளியிடப்பட்ட புள்ளி விவரங்களை வைத்து பார்க்கும்போது, நடப்பு நிதியாண்டில் 9,181 கிராம பஞ்சாயத்துகள் என்.ஆர்.இ.ஜி.எஸ் கீழ் வேலை பெற்றுள்ளது.

 96% சதவீதம்

96% சதவீதம்

இது மொத்தமுள்ள 2.68 லட்சம் கிராம பஞ்சாயத்துகளில் 3.42% மட்டுமே ஆகும். நாடு முழுவதும் 96 சதவீத கிராம பஞ்சாயத்துகள் ஏப்ரல் முதல் நவம்பர் இறுதி வரை என்.ஆர்.இ.ஜி.எஸ் இன் கீழ் வேலைக்கான கோரிக்கையை பதிவு செய்துள்ளன. கடந்த நிதியாண்டில் என்.ஆர்.இ.ஜி.எஸ் இன் கீழ் வேலை பெற்ற கிராம பஞ்சாயத்துகளின் எண்ணிக்கை 10,371 ஆகும். இது மொத்த கிராம பஞ்சாயத்துகளில் 3.91 சதவீதமாக இருந்தது.

 9 கோடி நபர்கள்

9 கோடி நபர்கள்

மொத்தத்தில், 9.42 கோடி நபர்களை உள்ளடக்கிய 6.5 கோடி குடும்பங்கள், இந்த ஆண்டின் நவம்பர் 29 வரை என்.ஆர்.இ.ஜி.எஸ் கீழ் வேலையை பெற்றுள்ளன. இது மற்ற காலங்களை விட மிகவும் உயர்ந்ததாகும். இந்த காலகட்டத்தில் ஊதிய செலவினம் எப்போதும் இல்லாத அளவுக்கு 53,522 கோடி ரூபாயை எட்டியுள்ளது.

 அக்டோபரில் அதிகம்

அக்டோபரில் அதிகம்

இந்த ஆண்டில் ஏப்ரல் முதல் இன்று வரை 265.81 கோடிக்கு மேல் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. இது கடந்த நிதியாண்டில் மொத்தம் 265.44 கோடியை விட அதிகமாகும். ஆகஸ்ட், செப்டம்பர் மாதத்தை விட அக்டோபரில் என்.ஆர்.இ.ஜி.எஸ் தேவை அதிகரித்துள்ளது. அதாவது செப்டம்பர் (65 சதவீதம்) மற்றும் ஆகஸ்ட் (63 சதவீதம்) ஆகியவற்றை அக்டோபரில் தேவை விகிதம் அதிகமாக உள்ளது.

 தமிழகம் முதல் இடம்

தமிழகம் முதல் இடம்

இந்த அக்டோபரில் மட்டும் 1.98 கோடி குடும்பங்கள் இத்திட்டத்தில் பயன் அடைந்தன. இது கடந்த ஆண்டு இதே மாதத்தில் 1.09 கோடியை விட 82 சதவீதம் அதிகம் ஆகும். என்.ஆர்.இ.ஜி.எஸ் இன் கீழ் அதிகமாக வேலை பெற்ற கிராம பஞ்சாயத்துக்களில் தமிழகம் முதல் இடத்தில் உள்ளது. அதற்கு அடுத்தபடியாக மேற்கு வங்கம், உத்தரபிரதேசம் மற்றும் மத்திய பிரதேச மாநிலங்கள் உள்ளன.

 மேற்கு வங்கம் பரவாயில்லை

மேற்கு வங்கம் பரவாயில்லை

அதுவும் அக்டோபரில் தமிழகத்தில் அதிக அளவாக 42.78 லட்சம் குடும்பங்கள் என்.ஆர்.இ.ஜி.எஸ் வேலையை பெற்றுள்ளன. அடுத்த இடத்தில் மேற்கு வங்கம் (22.52 லட்சம்), உத்தரப்பிரதேசம் (20 லட்சம்), மத்தியப் பிரதேசம் (15.19 லட்சம்) உள்ளன. நாடு முழுவதும் ஜூலை மாதத்திலிருந்து என்.ஆர்.இ.ஜி.எஸ்ஸைப் பெற்ற மிக அதிகமான குடும்பங்களில் தமிழகம் முதல் இடம் பிடித்துள்ளது. தெரிவித்துள்ளது. கடந்த நான்கு மாதங்களில் சராசரியாக சுமார் 40 லட்சம் குடும்பங்கள் என்.ஆர்.இ.ஜி.எஸ் வேலையை பெற்றுள்ளன.

மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது கொண்டு வரப்பட்ட அருமையான திட்டம் இந்த கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டம் என்பது நினைவிருக்கலாம்.

English summary
Rural areas have benefited the most under the National Rural Employment Guarantee Scheme (NREGS) of the Central Government during the Corona period
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X