டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

டெல்லி வன்முறைகளில் 13 பேர் பலி- நள்ளிரவில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆலோசனை

Google Oneindia Tamil News

டெல்லி: டெல்லியில் சி.ஏ.ஏ. எதிர்ப்பாளர்கள்- ஆதரவாளர்கள் இடையேயான மோதலில் 13 பேர் பலியாகி உள்ளனர். 2-வது நாளாக நேற்றும் வன்முறை நீடித்த நிலையில் டெல்லி போலீஸ் அதிகாரிகளுடன் நள்ளிரவில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆலோசனை நடத்தினார்.

Recommended Video

    Clashes broke out in Delhi as pro and anti CAA protesters

    வடகிழக்கு டெல்லியில் கடந்த 2 நாட்களாக நடைபெற்ற மோதல்களில் 13 பேர் பலியாகினர். 100-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர பல இடங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    NSA Ajit Doval reviews situation in north east Delhi

    டெல்லியில் வன்முறையாளர்களை கண்டதும் சுட உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த வன்முறைகளை கட்டுப்படுத்துவது தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித்ஷா, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டோர் நேற்று தீவிர ஆலோசனை நடத்தினர்.

    NSA Ajit Doval reviews situation in north east Delhi

    இதனைத் தொடர்ந்து நள்ளிரவில் வன்முறையால் பாதிக்கப்பட்ட இடங்களை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் பார்வையிட்டார். மேலும் டெல்லி போலீஸ் அதிகாரிகளுடன் அஜித் தோவல் ஆலோசனை நடத்தினார். வன்முறை நிகழ்ந்த பகுதிகளைச் சேர்ந்த காவல்துறை அதிகாரிகளும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றனர்.

    NSA Ajit Doval reviews situation in north east Delhi

    இதனிடையே வன்முறைகளில் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவருவோரை மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தன் நேற்று நள்ளிரவு சந்தித்தார். டெல்லி குரு தேஹ் பகதூர் மருத்துவமனையில் படுகாயமடைந்தவர்களை சந்தித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய ஹர்ஷ் வர்தன், 150 பேர் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் சிலர் இன்று சிகிச்சை முடிந்து வீடு திரும்ப உள்ளனர். அனைவரும் விரைவில் நலம் பெற பிரார்த்திக்கிறேன் என்றார்.

    English summary
    National Security Adviser Ajit Doval visited the office of North-east DCP Ved Prakash Surya in Seelampur for a meeting late on Tuesday night.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X