டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

எல்லையில் தயாராக இருங்கள்.. பாதுகாப்பு படை தலைவர்களுக்கு அஜித் தோவல் உத்தரவு

Google Oneindia Tamil News

டெல்லி: காஷ்மீர் மாநிலத்தில் துணை ராணுவப் படையினர் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலை தொடர்ந்து இந்திய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், இன்று, அனைத்து பாதுகாப்பு படைத் தலைவர்கள் மற்றும் உளவுத்துறை அமைப்பின் தலைவர்களுடன் அவசர ஆலோசனை நடத்தினார்.

அப்போது எந்த ஒரு நடவடிக்கைக்கும் தயாராக இருக்கும்படி அஜித் தோவல் அறிவுறுத்தினார்.

NSA Doval meets security and intelligence chiefs

எல்லை பாதுகாப்பு படையினர் (BSF) ஜம்மு காஷ்மீர் எல்லையில் மிகுந்த விழிப்புடன் இருக்க வேண்டும் என்று அஜித் தோவல் அப்போது கேட்டுக் கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எல்லையில் கூடுதல் படைகளை குவித்து வைக்கும்படியும் அஜித் தோவல் அப்போது அறிவுறுத்தி உள்ளார்.

பாகிஸ்தான் நாட்டில் இருந்து செயல்பட்டு வரும் பயங்கரவாத இயக்கங்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுப்பதற்கு ராணுவத்திற்கு முழு சுதந்திரமும் வழங்கப்பட்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை தெரிவித்தார். இந்த நிலையில் எல்லையில் பாதுகாப்பை பலப்படுத்துவது தொடர்பாக அஜித் தோவல் ஆலோசனை நடத்தியுள்ளார். அடுத்தடுத்த இந்த நிகழ்வுகள் எண்ணையில் உஷ்ணத்தை அதிகரித்துள்ளன.

English summary
National security advisor Ajit Doval on Friday held a high level meeting with all security force chiefs in the wake of the Pulwama terror attack.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X