டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வளைகுடா நாடுகளில் வசிக்கும் இந்தியர்களே... உங்களை மீட்க கூடுதலாக 58 விமானங்கள் அறிவிப்பு

Google Oneindia Tamil News

டெல்லி: வளைகுடா நாடுகளில் கொரோனா பாதிப்பு, பொது முடக்கம் காரணமாக தவித்து வரும் இந்தியர்களை மீட்பதற்காக கூடுதலாக 58 விமானங்கள் இயக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

அதாவது வந்தே பாரத் மிஷனின் 3-வது கட்டத்தின் கீழ் வளைகுடா நாடுகளில் 107 விமானங்களை இயக்க திட்டமிட்டிருந்த மத்திய அரசு , அதன் எண்ணிக்கையை 165 ஆக உயர்த்தி உள்ளதாக விமானப் போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி புதன்கிழமை தெரிவித்தார்.

Number Of Flights For Stranded Indians In Gulf Raised from 107 to 165 : Minister Hardeep Singh Puri

கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுக்க மார்ச் 25ம் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. இந்நிலையில் கடந்த ஜூன் 1ம் தேதி முதல் உள் நாட்டு விமான சேவைகள் தொடங்கி உள்ளது. ஆனால் வெளிநாட்டு விமான சேவைகள் தொடங்கவில்லை.

ஆனால் அதேநேரம் வந்தே பாரத் திட்டத்தின் கீழ் வெளிநாடுகளில் கொரோனா லாக்டவுனால் பாதிக்கப்பட்ட இந்தியர்களை மத்திய அரசு மீட்டு வருகிறது. அமெரிக்கா, ஐரோப்பியா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளுக்கும், வளைகுடா நாடுகளுக்கும் அதிக விமானங்களை அனுப்பி இந்தியர்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

கிரண்பேடியின் அடாவடித்தனத்தால் புதுச்சேரியின் பொருளாதாரம் பாதிப்பு.. நாராயணசாமி குற்றச்சாட்டு கிரண்பேடியின் அடாவடித்தனத்தால் புதுச்சேரியின் பொருளாதாரம் பாதிப்பு.. நாராயணசாமி குற்றச்சாட்டு

இந்நிலையில் மே 7 ஆம் தேதி தொடங்கிய இந்த பயணத்தின் கீழ் இயங்கும் விமானங்களில் 70,000 க்கும் மேற்பட்ட இந்தியர்கள் திரும்பி வந்துள்ளனர், கிட்டத்தட்ட 17,000 பேர் நாட்டிலிருந்து வெளியேறியுள்ளனர் என்று விமானப் போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி டுவிட்டரில் கூறியுள்ளார்.

வளை குடா நாடுகளில் இருந்து இந்தியர்களை மீட்பதற்காக 107 விமானங்கள் இயக்க திட்டமிட்ட மத்திய அரசு இப்போது கூடுதலாக 58 விமானங்களை இயக்க முடிவு செய்துள்ளது. அதாவது 165 விமானங்கள் வளைகுடா நாடுகளுக்கு இயக்கப்படும் என்று என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்த தகவலை மத்திய விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

English summary
Civil Aviation Minister Hardeep Singh Puri said that The number of flights to operate from Gulf countries under Phase-3 of the Vande Bharat Mission has been increased from planned 107 to 165,
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X