டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

லோக்சபாவில் பலம் கூடுகிறது... முஸ்லீம் எம்.பி-க்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

Google Oneindia Tamil News

டெல்லி: 2014 ம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலை காட்டிலும், 2019 தேர்தலில், முஸ்லீம் உறுப்பினர்களின் எண்ணிக்கை 27 ஆக அதிகரித்துள்ளது.

இந்தியாவின் முதலாவது மக்களைத் தேர்தலின் போது, முஸ்லீம் உறுப்பினர்களின் எண்ணிக்கை 21 ஆக இருந்தது. 1980 ஆம் ஆண்டில் மக்களவைக்கு 49 முஸ்லீம் உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டதே அதிகபட்சமாகும். இதைத் தொடர்ந்து அந்த எண்ணிக்கையானது 16 வது மக்களவையில் 22 ஆக குறைந்தது.

Number of Muslim MPs increase in Lok Sabha

இந்த நிலையில், தற்போது தேர்வு செய்யப்பட்டுள்ள 17 வது மக்களவையில் 27 ஆக உயர்ந்துள்ளது. இதில் மேற்குவங்கத்தைச் சேர்ந்த சவுமித்ரா கான் என்பவர் மட்டுமே பாஜகவைச் சேர்ந்த உறுப்பினர் ஆவார். இவருக்கு மத்தியமைச்சரவையில் இடம் அளிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மற்றொருவர் பாஜக கூட்டணியில் உள்ள லோக் ஜனசக்தி கட்சியின் உறுப்பினர் மஹ்பூப் அலி கைசர் என்பவர் ஆவார். மற்ற அனைத்து முஸ்லீம் உறுப்பினர்களும் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கொல்கத்தா முன்னாள் போலீஸ் கமிஷ்னரை வெளிநாடு தப்ப விட்றாதீங்க.. ஏர்போர்ட்டுகளுக்கு சிபிஐ அலார்ட் கொல்கத்தா முன்னாள் போலீஸ் கமிஷ்னரை வெளிநாடு தப்ப விட்றாதீங்க.. ஏர்போர்ட்டுகளுக்கு சிபிஐ அலார்ட்

கடந்த 16-வது மக்களவைத் தேர்தலின் போது, வெறும் 7 மாநிலங்களில் இருந்து மட்டுமே முஸ்லீம் வேட்பாளர்கள் மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர். மேற்கு வங்கத்திலிருந்து 8 பேரும், பீகாரிலிருந்து 4 பேரும், ஜம்மு & காஷ்மீர் மற்றும் கேரளாவிலிருந்து தலா மூன்று பேரும், இரண்டு பேர் அசாமிலிருந்தும், தமிழ்நாடு, தெலுங்கானா மற்றும் யூனியன் பிரதேசமான லட்சத்தீவு ஆகியவற்றிலிருந்து தலா ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தனர்.

English summary
Strength in Lok Sabha: Number of Muslim MPs increase
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X