டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மூச்சை திணற வைக்கும் காற்று மாசு.. டெல்லியில் வாகன கட்டுப்பாடு இன்று முதல் அமல்

Google Oneindia Tamil News

Recommended Video

    டெல்லி காற்று மாசு பற்றி வங்கதேச பயிற்சியாளர் பகீர் தகவல்-வீடியோ

    டெல்லி: டெல்லி மற்றும் வடஇந்தியாவில் காற்று மாசு ஏற்பட்டுள்ளதால் இன்று முதல் வாகன கட்டுப்பாடு அமல்படுத்தப்பட்டுள்ளது.

    காற்று மாசு காரணமாக டெல்லி மற்றும் வடஇந்தியாவில் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 8 இடங்களில் சுவாசிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    Odd-Even vehicle scheme started today in Delhi

    இதனால் சாலை விபத்துகள் ஏற்படுகின்றன. ரயில்கள் தாமதமடைவதுடன் விமானங்கள் தரையிறங்குவதிலும் தாமதம் ஏற்பட்டுள்ளது. காற்று மாசு 900 இருப்பதால் பள்ளிகளுக்கு நாளை வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் காற்று மாசு தர குறியீடு 500 உள்ளது. இந்த நிலையில் டெல்லியில் வாகன கட்டுப்பாட்டை அமலுக்கு கொண்டு வர அம்மாநில அரசு முடிவு செய்தது. அதன்படி இன்று முதல் வாகன கட்டுப்பாடு அமலுக்கு வந்தது.

    டெல்லியிலிருந்து சென்னை உள்பட தமிழகத்துக்கு பரவும் காற்று மாசு.. என்ன காரணம்?- வெதர்மேன் விளக்கம்டெல்லியிலிருந்து சென்னை உள்பட தமிழகத்துக்கு பரவும் காற்று மாசு.. என்ன காரணம்?- வெதர்மேன் விளக்கம்

    ஒற்றைப்படை, இரட்டைப்படை எண் என்ற அடிப்படையில் வாகனங்கள் அனுமதிக்கப்படவுள்ளன. இன்று முதல் நவ 15 வரை இந்த முறை அமலில் இருக்கும். மின்சார வாகனங்களுக்கும், பெண்கள் , மாற்று திறனாளிகள் பயன்படுத்தும் வாகனங்களுக்கும் விலக்கு அளிக்கப்படுகிறது.

    இந்த முறை கடந்த 2016-ஆம் ஆண்டு அமல்படுத்தப்பட்டது. இந்த சட்டம் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை நீடிக்கும். ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த முறை பின்பற்றப்படாது. குடியரசுத் தலைவர், துணை குடியரசுத் தலைவர், பிரதமர், மத்திய அமைச்சர்கள், இந்திய தலைமை நீதிபதி, இரு அவைகளின் எதிர்க்கட்சிகளின் தலைவர்கள், சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள், தலைமை தேர்தல் ஆணையர்கள் உள்ளிட்டோர் இந்த வாகன கட்டுப்பாட்டிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறார்கள்.

    வாகன கட்டுப்பாட்டை மீறுபவர்களுக்கு ரூ 4000 வரை அபராதம் விதிக்கப்படும். முன்னதாக இந்த அபராதம் ரூ 2000 ஆக இருந்தது.

    English summary
    Delhi odd-even numbers scheme starts today. It is the third edition of the scheme. Violaters will be asked penalty for Rs. 4000.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X