• search
டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

வளைச்சு வளைச்சு மீட்டிங்.. கடந்த ஆண்டே எச்சரிக்கை.. ஆக்சிஜனை 'கோட்டை' விட்டது யார்?

|

டெல்லி: இத்தனை எச்சரிக்கை விடுத்துமா இன்று ஆக்சிஜன் பற்றாக்குறையால் நாடு தத்தளிக்கிறது? என்று அதிர்ச்சியடைய வைக்கும் தகவல் வெளியாகியுள்ளது.

  மோசமான விளைவுகளை ஏற்படுத்திய கொரோனாவின் Second Wave.. யார் காரணம்?

  கொரோனா 2வது அலை காரணமாக, மக்கள் கொத்து கொத்தாக அதன் பிடியில் சிக்கி தவித்து வருகின்றனர். நாளுக்கு நாள், ஒவ்வொரு மாநிலத்திலும் கொரோனா எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

  அதைவிட கொடுமை, கொரோனா பாதிப்பால் மூச்சுத் திணறல் ஏற்படுவோருக்கு ஆக்சிஜன் கொடுக்க முடியாமல் பல மருத்துவமனைகள் அல்லாடி வருவது தான். இதனால், தினம் பல உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.

   ஆக்ஸிஜன் லாரியை டெல்லி அரசு கொள்ளை அடித்துவிட்டது... ஹரியானா மந்திரி அனில் விஜ் திடுக் புகார்..! ஆக்ஸிஜன் லாரியை டெல்லி அரசு கொள்ளை அடித்துவிட்டது... ஹரியானா மந்திரி அனில் விஜ் திடுக் புகார்..!

  ஆக்சிஜன் தட்டுப்பாடு

  ஆக்சிஜன் தட்டுப்பாடு

  இந்த நிலையில், கடந்த ஆண்டே இதுகுறித்த எச்சரிக்கை இரண்டு முறை விடுக்கப்பட்டுள்ள தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அதாவது, நாடு ஆக்சிஜன் பற்றாக்குறையால் தவிக்கும் சூழல் ஏற்படும் என்று ஒரே ஆண்டுக்கு முன்பே எச்சரிக்கப்பட்டிருக்கிறது. அதாவது, போன வருஷம் கொரோனா காரணமாக லாக் டவுன் அறிவித்தார்கள் அல்லவா? நாம் கூட அப்போது கொரோனாவை விரட்ட விளக்கேற்றிக் கொண்டு இருந்தோமே! அந்த காலக்கட்டத்தில்... அதாவது, மத்திய அரசு அமைத்த Empowered Groups of Officers சார்பில் ஏப்ரல் 1, 2020 அன்று கொரோனா ஆலோசனைக் கூட்டத்தில் ஆக்சிஜன் தட்டுப்பாடு குறித்து விவரிக்கப்பட்டது.

  இத்தனை அதிகாரிகள் பங்கேற்றுமா?

  இத்தனை அதிகாரிகள் பங்கேற்றுமா?

  அந்த கூட்டத்தில், "வரும் நாட்களில் இந்தியா ஆக்ஸிஜன் சப்ளை பற்றாக்குறையை எதிர்கொள்ளக்கூடும். இதை நிவர்த்தி செய்ய, சி.ஐ.ஐ இந்திய எரிவாயு சங்கத்துடன் ஒருங்கிணைந்து ஆக்ஸிஜன் வழங்கல் பற்றாக்குறையை தீர்க்க வேண்டும்" என்று சரியாக ஒரு வருடத்திற்கு முன்பு எச்சரிக்கப்பட்டது. NITI Aayog தலைமை நிர்வாக அதிகாரி அமிதாப் காந்த் தலைமையிலான இந்த கூட்டத்தில் இந்தியாவின் முதன்மை அறிவியல் ஆலோசகர் கே. விஜய் ராகவன் கலந்து கொண்டார். அதுமட்டுமின்றி, பிரதமர் அலுவலகம் உட்பட அரசாங்கத்தின் பல்வேறு பிரிவுகளில் இருந்து அரை டஜன் அதிகாரிகள், உள்துறை அமைச்சக அதிகாரிகள்; வெளிவிவகார அமைச்சக அதிகாரிகள் இதில் கலந்து கொண்டனர். மேலும், சிஐஐ இயக்குநர் ஜெனரல் சந்திரஜித் பானர்ஜி உட்பட ஒரு டஜன் தொழில் பிரதிநிதிகளும் இதில் பங்கேற்றனர்.

  3,000 மெட்ரிக் டன்

  3,000 மெட்ரிக் டன்

  இந்த சந்திப்புக்கு நான்கு நாட்களுக்குப் பிறகு, "கோவிட் -19 தொற்றுநோயைத் தொடர்ந்து மருத்துவ ஆக்ஸிஜன் போதுமான அளவு கிடைப்பதை உறுதி செய்வதற்காக" ஒன்பது பேர் கொண்ட குழு டிபிஐஐடி செயலாளர் குருபிரசாத் மொஹாபத்ராவின் தலைமையில் அமைக்கப்பட்டதாக பதிவுகள் காட்டுகின்றன. அப்போது கோவிட் -19 பாதிப்புகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்க, ஆக்ஸிஜனின் தேவையும் தொடர்ந்து அதிகரித்து, செப்டம்பர் 24-25 தேதிகளில் (கோவிட் -19 இன் முதல் அலைகளின் உச்சம்) சுமார் ஒரு நாளைக்கு 3,000 மெட்ரிக் டன் (எம்டி) ஆக உயர்ந்தது.

  போதுமான உற்பத்தி

  போதுமான உற்பத்தி

  EG-VI மட்டுமல்ல, சுகாதாரத்திற்கான பாராளுமன்ற நிலைக்குழுவும் ஆக்ஸிஜனின் "இருப்பு மற்றும் விலை" என்ற சிக்கலைக் கோடிட்டு காட்டி, "மருத்துவமனைகளில் தேவைக்கேற்ப அதன் விநியோகத்தை உறுதி செய்வதற்காக ஆக்ஸிஜனின் போதுமான உற்பத்தியை ஊக்குவிக்க வேண்டும்" அரசாங்கத்திடம் அப்போதே கேட்டுக்கொண்டது.

  நவம்பர் 21, 2020

  நவம்பர் 21, 2020

  அக்டோபர் 16, 2020 அன்று சமாஜ்வாடி கட்சியின் ராம் கோபால் யாதவின் தலைமையில் நடைபெற்ற கூட்டங்களில் ஒன்றில் பேசிய மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷண், கோவிட் -19 சிகிச்சையில் non-invasive ஆக்ஸிஜன் பயன்படுத்துவதையும், அது எவ்வாறு "நல்ல முடிவுகளை" வழங்குகிறது என்பதையும் எடுத்துரைத்தார். ஆக்ஸிஜனின் விலையை நிர்ணயிக்க, தேசிய மருந்து விலை ஆணையத்திடம் (NPPA) அமைச்சகம் கோரியுள்ளது என்று சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை செயலாளர் கமிட்டிக்கு தகவல் கொடுத்தார்" என்று நவம்பர் 21, 2020 அன்று மாநிலங்களவை தலைவருக்கு கமிட்டி சார்பில் வழங்கப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  ஆக்ஸிஜன் கையிருப்பில் உள்ளதா?

  ஆக்ஸிஜன் கையிருப்பில் உள்ளதா?

  கோவிட்டுக்கு முந்தைய நாட்களில், மருத்துவ ஆக்ஸிஜனின் தேவை ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 1,000 மெட்ரிக் டன் என்றும், மீதமுள்ள 6,000 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் தொழில்துறையில் பயன்படுத்தப்படுவதாகவும் இந்திய சுகாதாரத் துறை செயலாளர் அறிக்கை சமர்ப்பித்தார். ஆகையால், "The Outbreak of Pandemic Covid-19 and Its Management." என்ற பெயரிட்ட அவரது அறிக்கையில், ஆக்ஸிஜன் கையிருப்பில் உள்ளதா என்பதையும் ஆக்ஸிஜன் விலைகள் கட்டுப்படுத்தப்படுவதையும் உறுதிப்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

  அரசாங்கத்திற்கு பரிந்துரை

  அரசாங்கத்திற்கு பரிந்துரை

  ஆகையால், ஆக்ஸிஜன் சிலிண்டர்களின் விலையைக் கட்டுப்படுத்த சரியான நடவடிக்கைகளை எடுக்குமாறு தேசிய மருந்து விலை ஆணையத்தை குழு கடுமையாக அறிவுறுத்தியது. இதனால் அனைத்து மருத்துவமனைகளிலும் ஆக்ஸிஜன் சிலிண்டர்களின் இருப்பு மற்றும் விலை மலிவு ஆகியவை மருத்துவ நுகர்வுக்காக உறுதி செய்யப்படுகின்றன. மேலும் இந்த குழு மருத்துவமனைகளில் தேவைக்கேற்ப அதன் விநியோகத்தை உறுதி செய்வதற்காக ஆக்ஸிஜனின் போதுமான உற்பத்தியை ஊக்குவிக்க வேண்டும் என்று அரசாங்கத்திற்கு பரிந்துரைத்ததாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

  இத்தனை எச்சரிக்கை, அறிக்கை, வழிகாட்டல்களை மீறி இன்று நாடு ஆக்சிஜன் பற்றாக்குறையால் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. அதிகாரிகளின் மெத்தனத்தால் இந்த தவறு ஏற்பட்டுள்ளதா? அல்லது அரசு இயந்திரம் இவ்வளவு மோசமாக செயல்பட்டுள்ளதா? என்பதை காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.

   
   
   
  English summary
  Officials, House panel flagged oxygen need shortage - கொரோனா
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X