டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சிப் இல்லாத கிரெடிட், டெபிட் கார்டுகள் இனி செல்லாது.. ரிசர்வ் வங்கி உத்தரவு நடைமுறைக்கு வந்தது

Google Oneindia Tamil News

Recommended Video

    சிப் இல்லாத கிரெடிட், டெபிட் கார்டுகள் இனி செல்லாது- வீடியோ

    டெல்லி:இவிஎம் சிப் இல்லாத டெபிட், கிரெடிட் கார்டுகள் இன்று முதல் வேலை செய்யாது என்பதால் அந்த கார்டுகளை வைத்து ஏடிஎம் மையங்களில் பணம் எடுக்கவோ, கடைகளில் ஸ்வைப்பிங் செய்து பொருட்கள் வாங்கவோ இனி முடியாது.

    வாடிக்கையாளர்களுக்கு வழங்கியுள்ள பழைய முறையிலான கார்டுகளை எளிதாக மோசடிக்கு பயன்படுத்த முடியும் என்பதால், அதற்கு பதிலாக சிப் வைக்கப்பட்ட டெபிட், கிரெடிட் கார்டுகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்க வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டது.

    old credit card and debit cards invalid from today, based on rbi guideline

    இந்த உத்தரவு அனைத்து சர்வதேச, உள்நாட்டு வங்கிகளின் டெபிட், கிரெடிட் கார்டுகளுக்கும் பொருந்தும். கடந்த 2015-ம் ஆண்டு இது தொடர்பாக ரிசர்வ் வங்கி உத்தரவிட்டு, 2016 ஜனவரிமாதத்தில் இருந்து நடைமுறைக்கு வந்து இந்த ஆண்டு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

    பழைய முறையிலான மேக்னடிக் டெபிட்,கிரெடிட் கார்டுகளை மாற்றுவதற்கு ரிசர்வ் வங்கி அளித்த காலக்கெடு டிசம்பர் 31ம் தேதியோடு முடிந்துவிட்டது. இதையடுத்து, பழைய கார்டுகள் வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் வங்கியில் கொடுத்து புதிய கார்டுகளை பெற்றுக் கொள்ளுமாறு வங்கிகள் கூறியுள்ளன.

    அதை கண்டுகொள்ளாமல் உள்ள வாடிக்கையாளர்களுக்கு இன்று முதல் டெபிட், கிரெடிட் கார்டுகள் செயல்படாது. ஆனால், ஆன்லைன் கணக்கு செயல்பாட்டில் இருக்கும்.அதே சமயம், பழைய முறையிலான மேக்னட்டிங் டெபிட், கிரெடிட் கார்டுகளை வைத்திருப்பவர்கள் ஏடிம் மையத்தில் பணம் எடுக்க முடியாது, ஷாப்பிங் மால்களில் பொருட்கள், சேவைகள் பெற்று பணம் செலுத்த இயலாது.

    English summary
    The cards that don't have the chip-based security phased out from today and will no longer let you withdraw cash from ATM because of an order by the Reserve Bank of India.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X