டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வயதானவர்களை கொரோனா வைரஸ் மாறுபாடு எளிதாக தாக்குகிறது.. புதிய ஆய்வில் தகவல்.. முழு விவரம்!

Google Oneindia Tamil News

டெல்லி: குறைவான ஆன்டிபாடிகள் இருப்பதால் வயதானவர்கள் கொரோனா வைரஸின் வெவ்வேறு வகைகளால் பாதிக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாக புதிய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

ஒரேகான் சுகாதார மற்றும் அறிவியல் பல்கலைக்கழகத்தின் (OHSU) ஆராய்ச்சியாளர்கள் குழு நடத்திய ஆய்வில் இந்த முடிவு தெரியவந்துள்ளது.

ஷாக்..! திடீரென ஏற்பட்ட மிக பெரிய நிலச்சரிவு.. அப்படியே தரைமட்டமான பாலம் - 9 பேர் பலி.. வைரல் வீடியோஷாக்..! திடீரென ஏற்பட்ட மிக பெரிய நிலச்சரிவு.. அப்படியே தரைமட்டமான பாலம் - 9 பேர் பலி.. வைரல் வீடியோ

 நோயெதிர்ப்பு சக்தி

நோயெதிர்ப்பு சக்தி

ஃபைசரின் கொரோனா தடுப்பூசியின் இரண்டாவது மற்றும் இறுதி அளவைப் பெற்ற இரண்டு வாரங்களுக்குப் பிறகு 50 நோயாளிகளின் இரத்த மாதிரியை எடுத்து நோயெதிர்ப்பு சக்தி குறித்து பரிசோதனை நடத்தப்பட்டது. அதாவது இந்த ரத்த மாதிரிகள் வயதுக் குழுக்களாகப் பிரிக்கப்பட்டு பரிசோதிக்கப்பட்டன. அப்போது 70 முதல் 82 வயதுடையவர்களின் ரத்தத்தில் சாதாரண கொரோனா வைரஸ் மற்றும் காமா கொரோனா மாறுபாடு இருப்பது கண்டறியப்பட்டது.

 வயதானவர்களுக்கு ஆபத்து

வயதானவர்களுக்கு ஆபத்து

இளைஞர்கள் வயதானவர்களை விட ஏழு மடங்கு அதிக ஆன்டிபாடியை கொண்டிருந்தனர் என்பதும் தெரியவந்தது. தடுப்பூசி போடப்பட்டாலும் வயதானவர்கள் கொரோனா வைரஸின் மாறுபாடுகளுக்கு ஆளாகிறார்கள் என்று OHSU இன் ஸ்கூல் ஆஃப் மெடிசின் உதவி பேராசிரியரான மூத்த எழுத்தாளர் ஃபிகாடு டாஃபெஸ் கூறினார்.

தடுப்பூசிகள் வலுவானவை

தடுப்பூசிகள் வலுவானவை

இதில் நல்ல செய்தி என்னவென்றால், தடுப்பூசிகள் மிகவும் வலுவானவை , நடைமுறையில் எல்லா வயதினருக்கும் தொற்று மற்றும் கடுமையான நோய்களைத் தடுப்பதில் கொரோனா தடுப்பூசிகள் மிகுந்த பயனளிப்பதாகத் தெரிகிறது என்று டாஃபெசும், அவரது குழுவினரும் மிக தெளிவாக சுட்டிக்காட்டி உள்ளனர்.

பாதுகாப்பாக இல்லை

பாதுகாப்பாக இல்லை

கொரோனாவுக்கு எதிராக அனைவருக்கும் தடுப்பூசி போட வேண்டியதன் அவசியத்தை இந்த ஆய்வு அடிக்கோடிட்டுக் காட்டுகிறது என்று டஃபெஸ் கூறினார். "வயதானவர்கள் தடுப்பூசி போடப்படுவதால் அவர்கள் முற்றிலும் பாதுகாப்பாக இல்லை. அவர்களைச் சுற்றியுள்ள மக்களுக்கும் உண்மையில் தடுப்பூசி போட வேண்டும், "என்று அவர் வலியுறுத்தினார்.

English summary
A new study has found that older people are more likely to be infected with different types of corona virus because they have fewer antibodies
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X