டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

லோக்சபாவில் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டார் ஆசம் கான்.. எம்பிக்களுக்கு ஓம் பிர்லா எச்சரிக்கை

Google Oneindia Tamil News

டெல்லி: லோக்சபாவில் பாஜக பெண் எம்பி குறித்து ஆபாசமாக பேசிய விவகாரம் தொடர்பாக ஆசம் கான் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டார் ஆசம் கான். சபாநாயகர் ஒம் பிர்லா, இனி இப்படி நடக்க கூடாது என எம்பிக்களை எச்சரித்தார்.

லோக்சபாவில் கடந்த 25ம் தேதி முத்தலாக் மசோதா குறித்து விவாதம் நடந்தது. அப்போது சபாநாயகர் ஒம் பிர்லா அவையில் சிறது நேரம் இல்லை. இந்த காரணத்தால் துணை சபாநாயகரும் பாஜக பெண் எம்பியுமான பீகாரைச் சேர்ந்த ரமாதேவி சபாநாயகர் இருக்கையில் அமர்ந்து அவையை நடத்தினார்.

 சர்ச்சை பேச்சு

சர்ச்சை பேச்சு

அப்போது பேசிய சமாஜ்வாதி எம்பி ஆசம் கான், ரமா தேவி எம்பியை விரும்புவதாகவும். எங்கு பார்த்தாலும் அவர் முகமே தெரிவதாகவும் தெரிவித்தார். இதைகேட்டு அதிர்ச்சி அடைந்த ரமா தேவி உள்பட அனைத்து எம்பிக்களும் அதிர்ச்சி அடைந்தனர். குறிப்பாக பெண் எம்பிக்கள் கட்சி பாகுபாடு இல்லாமல் ஆசம் கானின் செயல் அருவருப்பாக இருந்ததாக கண்டித்தனர்.

 மன்னிப்பு கேட்க வலிறுத்தல்

மன்னிப்பு கேட்க வலிறுத்தல்

இதையடுத்து சபாநாயகர் ஒம்பிர்லா, சமாஜ்வாதி எம்பி ஆசம் கானை பாதிக்கப்பட்ட பெண் எம்பி ரமாதேவியிடம் மன்னிப்பு கேட்க வலியுறுத்தினார். அதேநேரம் ஆசம் கானுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு எம்பிக்கள் சபாநாயகரிடம் வலியுறுத்தினர்.

 மன்னிக்க மறுப்பு

மன்னிக்க மறுப்பு

இதையடுத்து ஆசம் கான் எம்பி, பாஜக பெண் எம்பி ரமா தேவியிடம் மன்னிப்பு கேட்டார்,. ஆனால் ரமா தேவி மன்னிக்க முடியாது என்று அறிவித்துவிட்டார்..

 ஒம்பிர்லா ஆலோசனை

ஒம்பிர்லா ஆலோசனை

இந்நிலையில் தான் இன்று இரண்டு நாள் விடுமுறைக்கு பின் லோக்சபா கூடுகிறது. இதையடுத்து அவையை சுமூகமாக நடத்தும் பொருட்டு, சபாநாயகர் ஓம் பிர்லா, சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், சமாஜ்வாதி எம்பி ஆசம் கான், பாஜக எம்பி ரமா தேவி ஆகியோரை தனது அலுவலகத்துக்கு அழைத்து ஆலோசனை நடத்தினார்.

 எம்பிக்களுக்கு சபாநாயகர் எச்சரிக்கை

எம்பிக்களுக்கு சபாநாயகர் எச்சரிக்கை

இதையடுத்து ஆசம் கான் லோக்சபாவில் ரமா தேவியிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டார். இதை ஏற்றுக்கொண்ட சபாநாயகர் ஓம்பிர்லா எதிர்காலத்தில் இது போன்று நடக்க கூடாது என எம்பிக்களை எச்சரித்தார். வார்த்தைகளை கவனமாக பயன்படுத்தும்படி கேட்டுக்கொண்டார்.

English summary
Om Birla says Azam Khan has tendered apology and all members must maintain decorum so that no such incident takes place in future
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X