டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

டிவியை ஆஃ ப் பண்ணி வைங்கப்பா.. ஒமர் அப்துல்லா டிவீட்

Google Oneindia Tamil News

டெல்லி: தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் பாஜகவுக்கு ஆதரவாக வெளியாகி வரும் சூழலில் சிலரது பகல் கனவுகள் 23 ம் தேதியோடு முடிவுக்கு வரும் என்று நடிகர் பிரகாஷ் ராஜும், தொலைகாட்சி பெட்டியை அனைத்து வைக்க வேண்டிய நேரம் இது என்று காஷ்மீரின் முன்னாள் முதலமைச்சர் ஓமர் அப்துல்லாவும் கருத்து தெரிவித்துள்ளனர்.

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் பாஜக கூட்டணிக்கு ஆதரவாக வெளியாகி வரும் சூழலில் நடிகரும் பெங்களூரு மத்திய தொகுதியின் சுயேச்சை வேட்பாளருமான பிரகாஷ் ராஜ் டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.

Omar Abdullah asks the people to switch off the TVs

டைம்ஸ் நவ், சி வோட்டர், ரிபப்ளிக், நியுஸ் 18, நியுஸ் எக்ஸ், நியுஸ் நேஷன், உள்ளிட்ட பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளே ஆட்சி அமைக்கும் என்று கூறியுள்ளன. இதனால் பங்கு சந்தைகளும் உச்சத்தில் உள்ளதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. பாஜக தலைவர்களும், தொண்டர்களும் உற்சாகத்தில் உள்ளனர்.

இந்நிலையில் இந்த கருத்துக் கணிப்புகள் குறித்து கருத்து தெரிவித்துள்ள நடிகர் பிரகாஷ் ராஜ் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளாக கெட்டக்கனவு மீண்டும் வரும் என சிலர் பகல் கனவு காண்கின்றனர். இது தவறு என்று வரும் 23 ம் தேதி குடிமக்கள் நிரூபிப்பார்கள் என்று பிரகாஷ்ராஜ் டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.

இந்த கருத்துக் கணிப்புகள் குறித்து டிவிட்டரில் பதிவிட்டுள்ள காஷ்மீரின் முன்னாள் முதலமைச்சர் ஓமர் அப்துல்லா ஒவ்வொரு கருத்துக் கணிப்புகளும் தவறு என்று கூறமுடியாது. பேசாமல் டிவியை அனைத்து வைத்துவிட்டு 23 ம் தேதிக்காக காத்திருக்க வேண்டியதுதான். சமூக வலைதள பக்கங்களை லாக் அவுட் செய்துவிட்டு மே 23-ம் தேதி பூமி அதன் அச்சில்தான் சுற்றுகிறதா எனக் காண காத்திருப்போம் என பதிவிட்டுள்ளார்.

தயாராக இருங்கள்.. ராகுலுக்கு வந்த முக்கிய அறிவுரை.. இன்று இரவே முக்கிய தலைகளை சந்திக்க திட்டம்! தயாராக இருங்கள்.. ராகுலுக்கு வந்த முக்கிய அறிவுரை.. இன்று இரவே முக்கிய தலைகளை சந்திக்க திட்டம்!

இந்த பதிவுக்கு பதிலளித்துள்ள காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவரான சசி தரூர் "நீங்கள் கூறுவது உண்மைதான், கற்பனையான எண்ணிக்கை குறித்த வேற்று விவாதங்களில் நமது நேரத்தை வீணடிப்பதை விட 23 ம் தேதிக்காக காத்திருப்பது நல்லது. இப்போது வந்திருக்கும் அனைத்து கருத்துக் கணிப்புகளும் தவறாக வாய்ப்புள்ளது" என்று ஓமரின் டிவிட்டுக்கு சசிதரூர் பதிலளித்துள்ளார்.

English summary
Omar Abdullah asks the people to switch off the TVs
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X