டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தப்பு செய்யற எண்ணம் இருந்தா... இங்க இருக்காதீங்க.. இளைஞரை அறையும் விவசாய சங்க தலைவர்.. வைரல் வீடியோ

Google Oneindia Tamil News

டெல்லி: தவறு செய்யும் எண்ணம் உடைய யாரும் போராட்ட களத்தில் இருக்கக் கூடாது என்று கூறி இளைஞர் ஒருவரை விவசாயச் சங்க ராகேஷ் டிக்கைட் அறையும் வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.

விவசாய சட்டங்களுக்கு எதிராக குடியரசு தினத்தன்று விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணியில் மிகப் பெரிய குழப்பம் ஏற்பட்டது. டிராக்டர் பேரணியின்போது, டிராக்டர் கவிழ்ந்து விவசாயி ஒருவர் உயிரிழந்தார்.

On Camera, Farmer Leader Slaps Man says Those With Ill Intent Should Leave

அதேபோல காவல் துறை தரப்பிலும் சுமார் 80க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதையடுத்து பல விவசாயச் சங்கத் தலைவர்கள் மீது 22 எஃப்ஐஆர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், முக்கிய விவசாயச் சங்க தலைவர்களுக்கு இது தொடர்பாக மூன்று நாட்களில் பதிலளிக்க வேண்டும் என நோட்டீசும் அனுப்பப்பட்டுள்ளது.

இந்நிலையில், காஜியாபாத் எல்லையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பாரதிய கிசான் யூனியன் செய்தித் தொடர்பாளர் ராகேஷ் டிக். இளைஞர் ஒருவரைக் கண்ணத்தில் அறையும் வீடியோ தற்போது வைரலாகியுள்ளது.

அந்த இளைஞரை அறையும் ராகேஷ் டிக், "இந்த இளைஞர் நமது அமைப்பைச் சேர்ந்தவர் இல்லை. இவர் கையில் தடியுடன் இருந்தார், ஏதோ செய்ய முயன்றுள்ளார். மேலும், ஊடகங்களிலும் இவர் தொடர்ந்து தவறாகவே நடந்துகொண்டார். தவறான எண்ணம் உடைய அனைவரும் உடனடியாக இந்த இடத்தைவிட்டுச் சென்று விடுங்கள்" என்று ஆவேசமாகப் பேசினார்.

குடியரசு தினத்தன்று ஏற்பட்ட குழப்பத்தைத் தொடர்ந்து தலைநகர் டெல்லியில் பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். தலைநகரில் நிலைமை சரி ஆகும் வரை இவர்கள் பாதுகாப்புப் பணியில் தொடர்ந்து ஈடுபடுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

English summary
Bharatiya Kisan Union spokesperson Rakesh Tikait slapped a man at the Ghazipur border where farmers are protesting against the new farm laws.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X