டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இந்த தீபாவளிக்கு அனைத்து மகள்களையும் லட்சுமியாக வணங்கி கொண்டாட வேண்டும்.. மோடி

Google Oneindia Tamil News

டெல்லி: இந்த தீபாவளிக்கு அனைத்து மகள்களையும் லட்சுமியாக வணங்கி கொண்டாட வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக தசரா விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. கண்கவர் கலை நிகழ்ச்சிகளும், சிறப்புப் பூஜைகளும் நாடு முழுவதும் நடந்தது.

On this Diwali, all daughters should be worshipped and respected: pm modi

டெல்லி அருகே துவாரகாவில் நடந்த தசரா பண்டிகை கொண்டாட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று ராவணன் சிலை மீது அம்புவிட்டார்.

அதன்பின்னர் அவர் விழாவில் பேசுகையில், "இந்த தீபாவளிக்கு அனைத்து பெண் குழந்தைகளையும் லட்சுமியாக பாவித்து வணங்கி கொண்டாட வேண்டும். மான் கி பாத் உரையில் நான் ஏற்கனவே கூறியிருக்கிறேன். எங்கள் வீட்டில் லட்சுமி இருக்கிறாள். லட்சுமி எங்கள் பகுதியில் இருக்கிறாள். எங்கள் மகள்கள் தான் லட்சுமிகள் என்று கூறியிருந்தேன்.,

இந்த தீபாவளியன்று, நம்முடைய அனைத்து மகள்களையும் வணங்க வேண்டும், மதிக்க வேண்டும்... நவராத்திரியுடன் நின்றுவிடமால், பெண்களின் அதிகாரம் மற்றும் கவுரவத்தை மேலும் மேம்படுத்துவதில் நாம் பணியாற்றுவோம். பெண் குழந்தைகளை காப்போம், அவர்களுக்கு கல்வியை கொடுப்போம் என்ற குறிக்கோளாக கொண்டு எனது தலைமையிலான அரசு செயல்படுகிறது.

எங்கள் திருவிழாக்கள் கல்வி சார்ந்தவை ... தேவைப்படும்போது எங்களை அது மாற்றலாம்... ஏனென்றால் நம் சமூகத்தில், தீமைக்கு எதிராக போராடும் மக்கள் நம்மிடம் உள்ளனர்". "நமக்குள் தீமையை எதிர்த்துப் போராடுவதும்" முக்கியம்" என்றார்.

English summary
pm modi on Dussehra function at Delhi's Dwarka: On this Diwali, all daughters should be worshipped and respected
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X