டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஆக அடுத்தது "ஒரே நாடு, ஒரே தேர்தல்" என்பதுதான் மத்திய அரசின் அஜெண்டா? பிரதமர் மோடி பேச்சால் பரபரப்பு

Google Oneindia Tamil News

டெல்லி: ஒரே நாடு ஒரே தேர்தல் வெறும் விவாதங்களுக்குரியது மட்டுமல்ல.. தேசத்துக்கும் மிகவும் அவசியமான ஒன்று என பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.

1949-ம் ஆண்டு நவம்பர் 26-ல் இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தை அரசியல் சாசன நிர்ணய சபை ஏற்றுக் கொண்டது. இந்த நாள் அரசியல் சாசன தினமாக கொண்டாடப்படுகிறது.

அரசியல் சாசன தினத்தை முன்னிட்டு லோக்சபா, சட்டசபை அதிகாரிகளை உள்ளடக்கிய தலைமை அதிகாரிகள் மாநாட்டில் இன்று பிரதமர் மோடி பேசியதாவது:

ஆந்திரா அம்மம்பள்ளி அணையில் இருந்து நீர் திறப்பு- திருவள்ளூரில் கொசஸ்தலை ஆற்றில் வெள்ள அபாயம்ஆந்திரா அம்மம்பள்ளி அணையில் இருந்து நீர் திறப்பு- திருவள்ளூரில் கொசஸ்தலை ஆற்றில் வெள்ள அபாயம்

எதுக்கு தனி தனி வாக்காளர் பட்டியல்?

எதுக்கு தனி தனி வாக்காளர் பட்டியல்?

லோக்சபா, சட்டசபை தேர்தல், பஞ்சாயத்து தேர்தல்களுக்கு ஒரே வாக்காளர் பட்டியல் முறை கொண்டுவரப்பட வேண்டும். தனித்தனி வாக்காளர் பட்டியல் என்பது நமது சக்தியை வீணாக்கும் செயலாகும்.

ஒரே தேசம்- ஒரே தேர்தல்

ஒரே தேசம்- ஒரே தேர்தல்

ஒவ்வொரு சில மாதங்களிலும் பல தேர்தல்கள் நடத்தப்படுகின்றன. இதனால் வளர்ச்சி பணிகள் பாதிக்கப்படுகின்றன. ஆகையால்தான் ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பதை நடைமுறைப்படுத்த வேண்டும்.

பாஜகவின் அஜெண்டா

பாஜகவின் அஜெண்டா

அரசியல் சாசனம் தொடர்பான விழிப்புணர்வை பொதுமக்களிடத்தில் அதிகாரிகள் ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு பிரதமர் மோடி வலியுறுத்தினார். மத்திய பாஜக அரசும் பாஜக தலைவர்களும் ஒரே நாடு, ஒரே தேர்தல் முழக்கத்தை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

தமிழகம், மே.வங்க தேர்தல்

தமிழகம், மே.வங்க தேர்தல்

ஒவ்வொரு சட்டசபை தேர்தல்களிலும் பாஜகவுக்கு வெற்றி தோல்வி மாறி மாறி வருகிறது. பாஜகவுக்கு மிக முக்கியமான அடுத்த 2 தேர்தல்கள் தமிழகம், மேற்கு வங்க சட்டசபை தேர்தல்கள். இந்த நிலையில் பிரதமர் மோடி ஒரே நாடு- ஒரே தேர்தல் என மீண்டும் முழங்கியிருப்பது நாடு முழுவதும் உன்னிப்பாக கவனிக்கப்படுகிறது.

English summary
Prime Minister Narendra Modi today urged that one nation, one election is not a matter of debate only, but this is the need for India.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X