டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஒரே நாடு ஒரே ரேசன் திட்டம்.. ஆக. 20-ந் தேதி முதல் அமல்படுத்தப்படும்.. நிர்மலா சீதாராமன் அதிரடி!

ஒரே நாடு ஒரே ரேசன் திட்டம் ஆகஸ்ட் மாதம் 20-ந் தேதி முதல் அமல்படுத்தப்படும் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

டெல்லி: ஒரே நாடு ஒரே ரேசன் திட்டம் ஆகஸ்ட் மாதம் 20-ந் தேதி முதல் அமல்படுத்தப்படும் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

Recommended Video

    Nirmala sitharaman economic package | Concessional credits for farmers

    கொரோனா பாதிப்பு காரணமாக இந்தியாவின் பொருளாதாரம் பெரிய சரிவை சந்தித்துள்ளது. இதை மீட்க மத்திய அரசு தொடர்ச்சியாக திட்டங்களை வகுத்து அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது.

    இதனால் பிரதமர் நரேந்திர மோடி நேற்று முதல் முக்கியமான திட்டங்களை அறிவித்தார். அதன்படி 20 லட்சம் கோடி மதிப்பிலான நிதி பேக்கேஜ் அறிவிப்பதாக அவர் கூறினார். இதை தொடர்ந்து இன்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களை சந்தித்து முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

    1.20 லட்சம் லிட்டர் கிருமி நாசினிகளை உருவாக்கிய சுய உதவி குழுக்கள்.. நிர்மலா சீதாராமன் பாராட்டு! 1.20 லட்சம் லிட்டர் கிருமி நாசினிகளை உருவாக்கிய சுய உதவி குழுக்கள்.. நிர்மலா சீதாராமன் பாராட்டு!

    பேட்டி அளித்தார்

    பேட்டி அளித்தார்

    இந்த நிலையில் இன்று அளித்த பேட்டியில், ஒரே நாடு ஒரே ரேசன் திட்டம் ஆகஸ்ட் மாதம் 20-ந் தேதி முதல் அமல்படுத்தப்படும். இதற்கான ஆயத்த பணிகள் முடிந்துள்ளது . ஒரே நாடு ஒரே ரேசன் திட்டம் மூலம் 67 கோடி பேர் பயனடைவர். மக்களின் உணவு தேவை இதனால் எளிதாக பூர்த்தி செய்யப்படும் . அனைத்து மாநில மக்களுக்கும் எளிதாக ரேஷன் கிடைக்கும். யாருக்கும் ரேஷன் இல்லாத நிலைமை ஏற்படாது.

    ஒரே நாடு ஒரே ரேசன் திட்டம்

    ஒரே நாடு ஒரே ரேசன் திட்டம்

    இதன் மூலம் ரேஷன் அட்டைகளை நாட்டில் உள்ள எந்த ரேஷன் கடைகளிலும் பயன்படுத்தலாம். இதனால் அதிகம் பயன்பெற போவது பிற மாநில தொழிலாளர்கள்தான். பொருளாதார சரிவுக்கு இடையே அவர்களின் உணவு தேவை இதனால் பூர்த்தி ஆகும். புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு 2 மாதங்களுக்கு இலவச உணவு தானியம் வழங்கப்படும். புலம்பெயர் தொழிலாளர்களுக்கு குடும்பத்துக்கு 5 கிலோ அரிசி வழங்கப்படும் அல்லது அவர்களின் தேவைக்கு ஏற்ப கோதுமை வழங்கப்படும்.

    உணவு தேவை பூர்த்தியாகும்

    உணவு தேவை பூர்த்தியாகும்

    இந்தியா முழுக்க பிற மாநிலங்களில் தொழிலாளர்கள் இருக்கிறார்கள். 10 கோடிக்கும் அதிகமான குடும்பம் இப்படி உள்ளது. இதில் 8 கோடி புலம்பெயர் தொழிலாளர்களுக்கு இந்த உணவு தானியங்கள் சென்றடையும். இதற்கான திட்ட பணிகளை வகுத்து இருக்கிறோம். மாநில அரசுகளின் உதவியுடன் இந்த திட்டங்களை செயல்படுத்துவோம். தகுதியான பிறமாநில தொழிலாளர்கள் அடையாளம் காணப்படுவார்கள். இதற்கான சர்வே தொடங்க உள்ளது. இதற்காக ரூ.3500 கோடியை ஒதுக்கி உள்ளோம்.

    உணவு கிடைக்கும்

    உணவு கிடைக்கும்

    இதன் மூலம் நாடு முழுக்க ரேஷனில் உணவுப் பொருட்கள் வழங்கும் முறையை மாற்ற மத்திய அரசு முடிவு எடுத்து இருக்கிறது. நாடு முழுக்க எல்லோருக்கும் ஒரே மாதிரியான ரேஷன் கார்டுகளை வழங்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.அதன்படி இந்தியாவில் எந்த மாநிலத்தில் இருக்கும் நபர்களும் வேறு எந்த மாநிலத்திலும் ரேஷன் வாங்க முடியும். இந்த திட்டத்தை மத்திய அரசு ஒரே நாடு ஒரே ரேஷன் என்று பெயர் வைத்து அழைத்து வருகிறது.

    English summary
    One Nation One Ration will come to effect on August 20 says FB Nirmala Sitharaman.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X