டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இனி காஷ்மீருக்கு முன்னேற்றம்தான்.. அசத்தல் கருத்து கணிப்பு முடிவை பாருங்கள்

Google Oneindia Tamil News

Recommended Video

    Kashmir Issue| இதன் பிறகு காஷ்மீரில் என்னவெல்லாம் நடைபெற வாய்ப்பு உள்ளது?

    டெல்லி: காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு நீக்கியுள்ளது. ராஜ்யசபாவில் நேற்று அதற்கான சட்டத் திருத்தம் நிறைவேறியது. இன்று லோக்சபாவில் அச்சட்டத் திருத்தம் தாக்கல் செய்யப்படுகிறது.

    நாடு முழுக்க இந்த அறிவிப்பு என்பது பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. வைகோ முதல் ப.சிதம்பரம் வரை எதிர்க்கட்சிகளின் முக்கிய தலைவர்கள், இதை கடுமையாக கண்டித்துள்ளனர். ஆனால், ஆளும் தரப்போ, காஷ்மீருக்கு சுதந்திரம் பெற்றுக் கொடுத்ததை போல கொண்டாடி வருகிறது.

    இப்படி இருவேறு கருத்துக்கள் சமூகத்தில் நிலவுகின்றன. சிறப்பு அந்தஸ்து கொடுக்கப்பட்டதால் காஷ்மீரில் தொழில்துறை வளர முடியவில்லை என்றெல்லாம் ஆளும் தரப்பு கூறி, தங்களது நடவடிக்கையை வரலாற்று சிறப்பு மிக்கது என வர்ணிக்கிறது.

    ஜம்மு காஷ்மீர் 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்க நமது வாசகர்கள் அமோக ஆதரவு! ஜம்மு காஷ்மீர் 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்க நமது வாசகர்கள் அமோக ஆதரவு!

     கருத்துக் கணிப்பு

    கருத்துக் கணிப்பு

    இந்த கருத்துக்கள் எந்த அளவுக்கு மக்களால் ஏற்கப்பட்டுள்ளது. சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதால் ஜம்மு காஷ்மீர் முன்னேற்றம் அடையுமா என்பது குறித்து மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது ஜனநாயகத்தில் முக்கியம் அல்லவா. எனவே இதுதொடர்பாக நமது 'ஒன்இந்தியா தமிழ்' இணையதளத்தில், ஒரு கருத்துக் கணிப்பு நடத்தினோம்.

     மூன்று ஆப்ஷன்கள்

    மூன்று ஆப்ஷன்கள்

    இந்த கருத்துக் கணிப்பில், சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதால் ஜம்மு காஷ்மீர் முன்னேற்றம் அடையுமா? என்று கேள்வி வைக்கப்பட்டது. இதற்கு பதிலாக, நிச்சயம், பெரிய மாற்றம் இருக்காது, போகப் போக பார்க்கலாம் என மூன்று ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டு, வாசகர்கள் பதிலளிக்க கேட்டுக்கொள்ளப்பட்டனர்.

     முன்னேற்றம் அடையும்

    முன்னேற்றம் அடையும்

    இதில் நிச்சயமாக முன்னேற்றம் அடையும் என்ற ஆப்ஷனுக்கு 61.27 சதவீதம் பேர் வாக்களித்துள்ளனர். பெரிய மாற்றம் இருக்காது என்ற ஆப்ஷனுக்கு 24.45 சதவீதம் பேர் வாக்களித்துள்ளனர். போகப் போக பார்க்கலாம் என்று, 14.29 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர். இதுதான் மக்களின் எண்ண ஓட்டமாக இருக்கிறது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.

     நம்பிக்கை

    நம்பிக்கை

    பெரிய மாற்றம் இருக்காது என்று சொல்வோர் 25 சதவீதத்துக்கும் குறைவாக இருப்பதை வைத்து பார்த்தால், மத்திய அரசின் இந்த நடவடிக்கையில், பெரும்பாலான மக்களுக்கு, நம்பிக்கை இருக்கிறது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. காஷ்மீர் முன்னேற்றம் அடைந்தால் கன்னியாகுமரி வரை உள்ள இந்தியர்களுக்கு கண்டிப்பாக மகிழ்ச்சிதான்.

    English summary
    Most of our readers says scrapping of article 370 special status to the Jammu Kashmir will benieit the state.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X