டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வெங்காயத்தை பதுக்கி கொள்ளை லாபம் சம்பாதிக்க நினைத்தால் கடும் நடவடிக்கை - மத்திய அரசு

வெங்காயத்தை பதுக்கி லாபம் சம்பாதிக்க நினைப்பவர்கள் மீது அத்தியாவசிய பொருட்கள் திருத்த சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்

Google Oneindia Tamil News

டெல்லி: வெங்காய விலை உயர்வை கட்டுப்படுத்தவும் பதுக்கலை தடுக்கவும் மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. வெங்காயத்தை பதுக்கி லாபம் சம்பாதிக்க நினைப்பவர்கள் மீது அத்தியாவசிய பொருட்கள் திருத்த சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிகரித்து வரும் வெங்காய விலையை கட்டுப்படுத்தவும், பதுக்கலை தடுக்கவும் மத்திய அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சில்லரை வியாபாரிகள் 2 டன் வெங்காயம் வைத்துக் கொள்ளவும், மொத்த வியாபாரிகள் 25 டன் வைத்துக் கொள்ளவும் வரம்பு நிர்ணயித்து உள்ளது என்று மத்திய நுகர்வோர் விவகாரங்கள் மற்றும் உணவு மற்றும் பொது விநியோகம் துறை அமைச்சர் பியூஷ் கோயல் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Onion Price Hike: Strict action hoard onions and make a profit - Central Government

மகாராஷ்டிரா, ஆந்திரா, தெலுங்கானா, வட கர்நாடகாவில் பெய்த பலத்த மழையால் வெங்காய விளைச்சல் பாதிக்கப்பட்டது. சென்னை உள்ளிட்ட தமிழக சந்தைகளில் வெங்காயம் விலை ஒரு கிலோ 100 ரூபாய் வரை உயர்ந்துள்ளது.

தமிழ்நாட்டில் வெங்காய விலை உயர்வை கட்டுப்படுத்தும் விதமாக அரசு பசுமை பண்ணை நுகர்வோர் கடைகளில் ஒரு கிலோ வெங்காயம் ரூ.45க்கு விற்பனை செய்கிறது. மணிக்கணக்கில் காத்திருந்து ஒருவருக்கு 2 கிலோ வெங்காயம் வாங்கிச்செல்கின்றனர். வெங்காய விலையை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றன.

இந்த நிலையில், தட்டுப்பாட்டை காரணம் காட்டி வியாபாரிகள் அவற்றை பதுக்கி, கொள்ளை லாபம் சம்பாதிக்க நினைத்ததற்கும் மத்திய அரசு முட்டுக்கட்டை போட்டு இருக்கிறது. அதாவது, வியாபாரிகள் வெங்காயத்தை இருப்பு வைப்பதற்கு மத்திய அரசு வரம்பு நிர்ணயம் செய்துள்ளது.

இதன்படி, சில்லரை வியாபாரிகள் அதிகபட்சமாக தங்களிடம் 2 டன் வரை வெங்காயத்தை இருப்பு வைத்துக் கொள்ளலாம். மொத்த வியாபாரிகள் அதிகபட்சமாக 25 டன் வரை இருப்பு வைக்கலாம். இந்த தகவலை மத்திய நுகர்வோர் விவகாரங்கள்துறை செயலாளர் லீனா நந்தன் செய்தியாளர்களிடம் தெரிவித்து உள்ளார்.

இதை மீறினால், அத்தியாவசிய பொருட்கள் திருத்த சட்டத்தின் கீழ் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளார். இந்த திருத்த சட்டம் கடந்த மாதம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே நுகர்வோர் விவகாரங்கள் மற்றும் உணவு மற்றும் பொது விநியோகம் துறை அமைச்சர் பியூஷ் கோயல் வெங்காய விலை உயர்வை கட்டுப்படுத்தவும் பதுக்கலை தடுக்கவும் மத்திய அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கை பற்றி ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதிகரித்து வரும் வெங்காய விலையை கட்டுப்படுத்தவும், பதுக்கலை தடுக்கவும் மோடி அரசு 3-வது கட்டமாக நடவடிக்கை எடுத்து, சில்லரை வியாபாரிகள் 2 டன் வெங்காயம் வைத்துக் கொள்ளவும், மொத்த வியாபாரிகள் 25 டன் வைத்துக் கொள்ளவும் வரம்பு நிர்ணயித்து உள்ளது என்று பதிவிட்டு உள்ளார்.

English summary
PM NarendraModi to provide onion to consumers at affordable price Many steps have been taken by the government.These range from restrictions on onion exports, loosening of import regulations, and supply of onions from buffer stocks Piyush Goyal post twitter page.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X