டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இ காமர்ஸ் நிறுவனங்களின் புதிய திட்டங்கள்.. லாக்டவுன் முடிந்த பின் பெரிய ட்விஸ்ட் .. காத்திருக்கு!

Google Oneindia Tamil News

டெல்லி: ஜியோ மார்ட், அமேசான், ப்ளிப்கார்ட் என பல பெரு நிறுவனங்களும் சில்லறை மளிகை விற்பனையில் குதித்துள்ளதால், அடுத்த சில வருடங்களில் நீங்கள் மிகப்பெரிய மாற்றத்தை ஷாப்பிங்கில் பார்க்க போகிறீர்கள். மளிகை பொருட்கள் தொடங்கி மருந்து முதல் சாப்பாடு வரை எல்லாமே குக்கிராமங்களில் கூட ஆன்லைனில் வர வாய்ப்பு உள்ளது. இதில் எப்படி உள்ளூர் மளிகை கடைக்காரர்கள், ஜவுளி கடைக்காரர்கள் தப்பித்து நீந்த போகிறார்கள் என்பது காலத்திற்கே வெளிச்சம்

இப்படி சொல்ல காரணம் 2000ல் மொபைலை ஆச்சர்யத்தோடு பார்த்தவர்கள். 2010ல் ஸ்மார்ட்போனை ஆச்சர்யத்தோடு பார்த்தார்கள். செய்திகளை பேப்பரிலும், டிவியிலும் பார்த்த மக்கள், அதன்பின்னர் மொபைலில் பார்க்க தொடங்கினார்கள். ஊடகத்துறையில் மட்டுமல்ல எல்லா துறையிலும் ஆன்லைன் மாற்றம் நடக்க தொடங்கியது.

இதை சரியாக புரிந்து கொண்டுதான் ஆன்லைன் வர்த்தகத்தில் 100% அந்நிய முதலீட்டுக்கு மத்திய அரசு 2016ல் அனுமதி அளித்தது.

அமேசான், நெட்பிளிக்ஸ் உட்பட 12 ஓடிடி தளங்களுக்கு ஒரே பாஸ்வேர்ட்.. வந்தாச்சு ஜியோ டிவி பிளஸ்.. செம! அமேசான், நெட்பிளிக்ஸ் உட்பட 12 ஓடிடி தளங்களுக்கு ஒரே பாஸ்வேர்ட்.. வந்தாச்சு ஜியோ டிவி பிளஸ்.. செம!

வால்மார்ட் குதிப்பு

வால்மார்ட் குதிப்பு

இதையடுத்து இந்தியா போன்ற மிகப்பெரிய மக்கள் தொகை உள்ள நாட்டில் சில்லறை வணிக சந்தையை கைப்பற்ற பல ஆண்டுகளாக முயன்று வந்த அமேசானும் வால்மார்டும் அதிரடியாக பெரிய அளவில் களம் இறங்கின. அமேசான் இந்தியாவின் மிகப்பெரிய இ கமார்ஸ் நிறுவனமாக இந்தியாவில் உருவெடுத்தது. இதேபோல் ஆன்லைன் வர்த்தகத்தின் சூட்சமங்களை புரிந்து கொண்ட ப்ளிப்கார்ட் நிறுவனமும் கிடுகிடுவென வளர்ந்தது. இதை பார்த்த வால்மார்ட் ப்ளிப்கார்ட்டுன் கைகோர்த்துள்ளது.

மிகப்பெரிய மாற்றம்

மிகப்பெரிய மாற்றம்

இந்த இருநிறுவனங்களும் இ காமர்ஸ் துறையில் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் தொடங்கி ஜவுளி, புத்தகம், மொபைல் உள்பட அனைத்தும் விற்க தொடங்கிவிட்டன. மளிகை பொருட்களையும் இப்போது விற்க ஆரம்பித்துவிட்டன. இந்த மாற்றங்கள் பெருநகர மக்களை தாண்டி சிறிய நகர மக்களையும் சென்றடைந்துவிட்டன. இந்த சூழலிலும் ரிலையன்ஸ் நிறுவனமும் ஜியோமார்ட் என்ற பெயரில் சில்லறை வர்த்தகத்தில் குதித்துள்ளது. இதில் பேஸ்புக்கும் இணைந்திருக்கிறது. எனவே கொரோனா முடிந்து இயல்பு நிலை திரும்பினால் ஆன்லைன் ஷாப்பிங்கில் மிகப்பெரிய மாற்றம் நடக்க போகிறது.

மக்கள் விருப்பம் மாறியது

மக்கள் விருப்பம் மாறியது

ஏனெனில் தற்போது ஆன்லைன் ஷாப்பிங் மிகமிக கடுமையாக உயர்ந்து வருகிறது. கொரோனா ஊரடங்கு ஆன்லைன் வர்த்தகத்தில் இதுவரை சந்திக்காத புதிய மாற்றத்தையும் வளர்ச்சியையும் உருவாக்கிவிட்டுள்ளது. மக்கள் ஆன்லைன் ஷாப்பிங்கிற்கு வேகமாக மாறி வருகிறார்கள். இந்த மாற்றத்தை பலர் விரும்ப காரணம் கடைகளுக்கு சென்று அலைவது குறையும், வீடு தேடி வரும் மளிகை பொருட்கள் வருவதால் செலவும் குறைவு போன்ற காரணம் தான்.

5 வருடத்தில் வரும்

5 வருடத்தில் வரும்

இன்னொரு முக்கிய காரணம் விலை ஒப்பீடு. ஆன்லைனில் வாங்கினால் ஆபரில் பல பொருட்களை குறைந்த விலையில் அள்ள முடியும் என்று பலர் கணக்கு போட்டு வாங்குகிறார்கள். இப்போதைய சூழலில் இந்த ஆன்லைன் ஷாப்பிங் மாற்றம் பெருநகரங்கள் மற்றும் சிறுநகரங்களில் மட்டும் இருக்கும்.ஆனால் பின்னாளில் குக்கிராமங்களிலும் இந்த மாற்றம் நடைபெற போகிறது. இன்னும் 5 வருடத்தில் இ கமார்ஸ் துறை மிகப்பெரிய வளர்ச்சியை சந்திக்கப்போகிறது.

 இகாமர்ஸ் ஆதிக்கம்

இகாமர்ஸ் ஆதிக்கம்

எனவே மளிகை கடை தொடங்கி, மருந்து கடை வரை இகாமர்ஸ் நிறுவனங்களின் ஆதிக்கமே அதிகமாக இருக்க போகிறது. இந்த கால ஓட்டத்தில் எல்லா வணிகர்களும் ஆன்லைனுக்கு மாற வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்கள் என்பதே நிதர்சனமான உண்மை. மாற்றம் ஒன்றே மாறாதது என்பதற்கு ஆன்லைன் ஷாப்பிங் மிகக்சிறந்த உதாரணம்.

English summary
online sale in india, shopping style likely to change in up coming years. Everything from groceries to medicine to food is likely to come online even in the slums.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X