• search
டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

கொரோனாவால் பாலியல் உபகரணங்கள் விற்பனை இந்தியாவில் படுஜோர்.. தமிழகம் 3வது இடம்.. சீனா உற்சாகம்

|

டெல்லி: கொரோனா நெருக்கடி காரணமாக மக்கள் வீடுகளுக்குள் முடங்கி கிடப்பதால் பாலியல் உபகரணங்கள் விற்பனை இந்தியாவில் படுஜோராக அதிகரித்துள்ளது. ஆன்லைனில் இதன் விற்பனை சக்கை போடு போடுகிறது. இந்தியாவில் கொரோனா காலத்தில் இதன் விற்பனை 65 சதவீதம் அதிகரித்து இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. பாலியல் உபகரணங்கள் விற்பனையில் இந்திய அளவில் தமிழகம் 3-வது இடத்தில் உள்ளது.

    China -வை நம்பி இருப்பதை குறைக்க வேண்டும்... Chennai பக்கம் வண்டியை திருப்பிய Apple நிறுவனம்

    கொரோனாவால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் எல்லா துறையிலும் பேரிழப்பு ஏற்பட்டுள்ளது தொழில்கள் முடங்கி நடத்த முடியாத அளவுக்கு நொறுங்கி கிடக்கின்றன. ஆனால் பாலியல் உபகரண்ங்கள் உற்பத்தி மட்டும் அதீதமான லாபத்தை அள்ளிக்கொடுத்து வருகிறது. வீட்டுக்குள்ளேயே முடங்கி இருப்பதால் பலர் ஆன்லைன் மூலம் பாலியல் பொம்மை மற்றும் உபகரணங்களை ஆர்டர்கள் செய்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

    சமீபத்தில் வெளியான ஒரு ஆய்வு மற்றும் புள்ளி விவரப்படி, பாலியல் உபகரணங்கள் விற்பனை செய்யும் ஆன்லைன் நிறுவனங்களை தேடுவோரின் எண்ணிக்கை 2.2 கோடியாக உயர்ந்துள்ளதகாவும் இதுவரை மொத்தமாக 3,35,000 பாலியல் உபகரணங்கள் விற்று தீர்ந்துள்ளதும் தெரியவந்துள்ளது.

    மொதல்ல இந்த ரெட்ஸோனை எடுங்கப்பா.. ஆண்களோட மொதல்ல இந்த ரெட்ஸோனை எடுங்கப்பா.. ஆண்களோட "தொல்லை" தாங்க முடியலை.. கதறும் பெண்கள்

    விற்பனை படுஜோர்

    விற்பனை படுஜோர்

    தட்ஸ்பர்சனல்.காம் நிறுவனம் சமீபத்தில் ஒரு சர்வே எடுத்துள்ளது. இந்த நிறுவனம் செக்ஸ் பொம்மை, உபகரணங்களை ஆன்லைனில் விற்கிறது. அந்நிறுவனம் வெளியிட்ட கணக்குபடி, லாக்டவுன் அறிவித்த மார்ச் மாதத்தில் இருந்து இப்போது வரை, அதாவது கடந்த 3 மாதத்தில் மட்டும் செக்ஸ் பொம்மை, உபகரணங்கள் விற்பனை இந்தியாவில் 65 சதவீதம் அதிகரித்துள்ளதாம்.

    மகாராஷ்டிரா முதலிடம்

    மகாராஷ்டிரா முதலிடம்

    இந்தியாவில் எந்த மாநிலத்தில் அதிகம் விற்பனையாகி உள்ளது என்கிற தகவலையும் அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதன்படி கொரோனாவால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள மகாராஷ்டிரா மாநிலம் தான் முதல் இடத்தில் இருக்கிறது. அதற்கு அடுத்த இடத்தில் கர்நாடகா மாநிலமும், 3வது இடத்தில் தமிழகமும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சூரத்தில் அதிகம்

    சூரத்தில் அதிகம்

    நாட்டில் உள்ள பெருநகரங்களில் மிக அதிகபட்சமாக மும்பையில் விற்பனையாகி உள்ளது. அதற்கு அடுத்தபடியாக இந்தியாவின் சிலிக்கான் வேலி என்று அழைக்கப்படும் ஐடி நகரமான பெங்களூருவில் விற்பனையாகி இருக்கிறது. விற்பனையில் 3வது இடத்தில் நாட்டின் தேசிய தலைநகரான டெல்லியும் இருக்கிறது. நாட்டிலேயே அதிகபட்சமான விற்பனை என்பது சூரத்தில் நடந்திருக்கிறதாம். சூரத்தில் சராசரியாக ஒரு ஆர்டர் மதிப்பு ரூ.3,900 ஆக உள்ளதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுளளது.

    பாலியல் உபகரணங்கள் விற்பனை

    பாலியல் உபகரணங்கள் விற்பனை

    ஊரடங்கு தொடங்கியபோதே காண்டம் உள்ளிட்ட கருத்தடை சாதனங்கள் விற்பனை விறுவிறுப்படைந்துள்ளது. பல இடங்களில் காண்டம் உள்ளிட்டவற்றின் ஸ்டாக் தீர்ந்துவிட்டதாம். நாட்டிலேயே பாலின வாரியாக பாலியல் உபகரணங்களை ஆர்டர் செய்வோர் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், உத்தர பிரதேசத்தில்தான் அதிகமான ஆண்கள் ஆர்டர் செய்துள்ளனர்.

    சீனா மகிழ்ச்சி

    சீனா மகிழ்ச்சி

    இந்நிலையில் பெண்களும் ஆர்டர் செய்வதில் சளைத்தவர்கள் இல்லை என்பது போல் ஆய்வில் தெரியவந்துள்ளது. விஜயவாடா, ஜாம்ஷெட்பூர், பெல்காம், வதோதரா ஆகிய நகரங்களில் ஆண்களை விட பெண்கள்தான் அதிகமான உபகரணங்களை வாங்கியுள்ளார்களாம். பாலியல் உபகரணங்களை அதிகம் தயாரிக்கப்படுவது சீனாவில்தான். இவற்றின் ஏற்றுமதி திடீரென 50 சதவீதம் அதிகரித்துள்ளது. இதனால் சீன தயாரிப்பாளர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    குவியும் ஆர்டர்கள்

    குவியும் ஆர்டர்கள்

    சீனாவுக்கு இந்தியா மட்டும் மிகப்பெரிய மார்க்கெட் அல்ல. அமெரிக்கா,இங்கிலாந்து, ஐரோப்பிய நாடுகள், நியூசிலாந்து, ஆஸ்திரேலியாவில் இருந்து ஆர்டர்கள் குவிந்துள்ளதாம் பெரிய தொழிற்சாலைகள் மாதம் சராசரியாக 2,000 பொம்மைகளும், சிறு தொழிற்சாலைகள் 300 முதல் 500 பொம்மைகளும் உற்பத்தி செய்கின்றனவாம். ஆட்களையும் கூடுதலாக நியமித்துள்ளன. இந்திய மதிப்பில் இந்த பொம்மையின் விலை ரூ.38,500 என்று கூறப்படுகிறது. சீனா பொருட்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்று எதிர்ப்பு எழுந்து வரும் இந்த சூழலும சீன பொருட்கள் விற்பனை படுஜோராகவே உள்ளது.

    English summary
    Online Sale of Sex Toys Rises to 65% due COVID-19 Lockdown in India. Mumbai Tops the List, Reveals Study
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X