டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஈவிஎம் மோசடி... தேர்தல் ஆணையத்துக்கு பொறுப்பு இருக்கு.. பிரணாப் முகர்ஜி பரபரப்பு அறிக்கை

Google Oneindia Tamil News

டெல்லி: வாக்கு இயந்திர முறைகேடு தொடர்பான புகார்களுக்கு பதில் அளிக்க வேண்டிய பொறுப்பு தேர்தல் ஆணையத்துக்கு உள்ளது என்று முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தெரிவித்து உள்ளார்.

வாக்கு இயந்திரத்தில் முறைகேடு செய்வதாக பாஜக மீது எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. பல இடங்களில் வாக்க இயந்திரங்கள் மோசடி செய்யப்படுவதாக புகார்கள் எழுந்ததால், வாக்கு இயந்திர விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், அது தொடர்பான சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்தை பிரணாப் முகர்ஜி வலியுறுத்தி உள்ளார்.

 Onus on ensuring institutional integrity in this case lies with the Election Commission says Pranab Mukherjee

இது தொடர்பாக பிரணாப் முகர்ஜி இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், "வாக்காளர்களின் தீர்ப்பை மாற்றும் முறைகேடுகள் தொடர்பான புகார்கள் கவலை அளிக்கிறது. தனது கட்டுப்பாட்டில் இருக்கும் வாக்கு இயந்திரங்களின் பாதுகாப்பான நிலையில் இருப்பதை உறுதி செய்ய வேண்டிய பொறுப்பு தேர்தல் ஆணையத்துக்கு உள்ளது.

நான்சென்ஸ்.. நியூசென்ஸ்.. சென்னை அமைப்பு தாக்கல் செய்த விவிபேட் பொதுநல வழக்கை விளாசிய உச்சநீதிமன்றம்நான்சென்ஸ்.. நியூசென்ஸ்.. சென்னை அமைப்பு தாக்கல் செய்த விவிபேட் பொதுநல வழக்கை விளாசிய உச்சநீதிமன்றம்

ஜனநாயகத்தின் அடிப்படைடையே கேள்வி கேட்கும் எந்த ஊகங்களுக்கும் இடமளிக்க கூடாது. வாக்களிக்கும் புனிததன்மை தான் மக்களின் ஆணை. அதன் மீது சிறதளவு கூட சந்தேகம் இருக்கக்கூடாது.

எனவே வாக்கு இயந்திரங்களின் (ஈவிஎம் மிஷின்களின்) பாதுகாப்பினை தேர்தல் அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். அதன் மூலம் அவர்கள் அனைத்து யூகங்கள் மற்றும் புகார்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்" இவ்வாறு கூறியுள்ளார்

முன்னதாக நேற்று டெல்லியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய பிரணாப் முகர்ஜி, தேர்தல் ஆணையம் தேர்தலை சிறப்பாக நடத்தியிருப்பதாக பாராட்டி இருந்தார். இன்றைக்கு ஜனநாயம் வெற்றியடைந்திருக்கிறது என்றால், இந்தியாவின் முதல் தலைமைத் தேர்தல் ஆணையர் சுகுமார் சென் தொடங்கி, இன்றைய தேர்தல் ஆணையர்கள் வரை தேர்தலை சிறப்பாக நடத்தியதே அதற்குக் காரணம் என பிராணப் முகர்ஜி கூறியிருந்தார் .

English summary
Former President Pranab Mukherjee issues statement, says ' Onus on ensuring institutional integrity in this case(security of EVMs) lies with the Election Commission
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X