டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"டெமாக்ரசி"ன்னா என்ன தெரியுமா.. படு நூதன விளக்கம் சொன்ன ரவீந்திரநாத் குமார்.. அதிர்ந்த லோக்சபா

Google Oneindia Tamil News

Recommended Video

    'டெமாக்ரசி'ன்னா என்ன தெரியுமா? விளக்கம் சொன்ன ரவீந்திரநாத் குமார்-வீடியோ

    டெல்லி: Democracy என்ற ஆங்கில வார்த்தைக்கு தேனி அதிமுக எம்பி ரவீந்திரநாத் குமார் புதிய விளக்கத்தை அளித்துள்ளார். இதனால் லோக்சபையே அதிர்ந்துவிட்டது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

    நாடாளுமன்றத் தேர்தலில் வேலூர் நீங்கலாக மொத்தம் 38 தொகுதிகளில் அதிமுக தேனி தொகுதி மட்டும் வெற்றி பெற்றது. துணை முதல்வர் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் தேனி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

    அவர் உறுப்பினராக பதவியேற்ற போது, திமுக எம்பிக்கள் தமிழ் வாழ்க என தெரிவித்த நிலையில் ரவீந்திரநாத்தோ வந்தே மாதரம் ஜெய்ஹிந்த் என்று கூறி பாஜகவினரின் பாராட்டுகளை பெற்றார்.

    அன்புமணிக்குப் பிடிக்கவே இல்லையாம்.. கட்டாயப்படுத்தி எம்பி ஆக்கிய பாமக!அன்புமணிக்குப் பிடிக்கவே இல்லையாம்.. கட்டாயப்படுத்தி எம்பி ஆக்கிய பாமக!

    மோடி பார்வை

    மோடி பார்வை

    இதையடுத்து முதல் கூட்டத் தொடரில் ரவீந்திரநாத் 2.10 நிமிடங்கள் பேசி அசத்தினார். அப்போது அவர் பேச தொடங்கியவுடன் பிரதமர் மோடி அவரது உரையை உன்னிப்பாக கவனித்து கொண்டிருந்தார். முதலில் சற்று பதற்றம் நிறைந்து பேசிய ரவீந்திரநாத் பின்னர் மோடியின் பார்வை தன் மீது படுவதை அறிந்து தைரியமாக பேசி முடித்தார்.

    துணிப்பையில்

    துணிப்பையில்

    இந்த நிலையில் 2019- 2020-ஆம் நிதியாண்டுக்கான பொது பட்ஜெட் கடந்த 5-ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. அதை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். வழக்கமாக பட்ஜெட் அறிக்கைகள் கொண்டு வரப்படும் சூட்கேஸுக்கு பதிலாக நிர்மலா துணிப்பையில் பட்ஜெட் உரை கொண்டு வந்ததால் பட்ஜெட் மீது எதிர்பார்ப்பு அதிகரித்தது.

    சிறப்பம்சங்கள்

    சிறப்பம்சங்கள்

    இந்த நிலையில் பட்ஜெட் மீதான விவாதம் நாடாளுமன்றத்தில் நடைபெற்று வருகிறது. அப்போது ஆ ராசா , திருக்குறளை மேற்கோள்காட்டி நிர்மலா சீதாராமனின் பட்ஜெட்டில் சிறப்பம்சங்கள் இல்லை என குறை கூறினார்.

    டெமாக்கிரசிக்கு

    டெமாக்கிரசிக்கு

    ஆனால் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்தோ, Democracy என்ற ஆங்கில வார்த்தைக்கு விளக்கம் அளித்துள்ளார். அவர் பேசுகையில்
    D for Development Budget- வளர்ச்சிக்கான பட்ஜெட்
    E for Enormous Budget- மகத்தான பட்ஜெட்
    M for Modernization Budget- நவீன பட்ஜெட்
    O for Organized Budget- ஒருங்கிணைந்த பட்ஜெட்
    C for Corruption Free Budget- ஊழலை ஒழிக்கும் பட்ஜெட்
    R for Revolutionary Budget- புரட்சி பட்ஜெட்
    A for Associated Budget- மக்கள் திட்டங்கள் தொடர்புடைய பட்ஜெட்
    C for Cultural Budget- கலாச்சார பட்ஜெட்
    Y for Young Budget- புதுமையான பட்ஜெட் என கூறினார்.

    பாஜகவினர் நெகிழ்ச்சி

    பாஜகவினர் நெகிழ்ச்சி

    திமுக, காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் பட்ஜெட் குறித்து எதிர்மறையான கருத்தை தெரிவித்து வரும் நிலையில் தமிழகத்துக்கு எந்த நலத்திட்டமும் அறிவிக்காத போதிலும் கூட்டணி கட்சி என்ற முறையில் அதிமுக உறுப்பினர் ரவீந்திரநாத் பட்ஜெட்டுக்கு விளக்கம் அளித்தது பாஜகவினரையே தூக்கிச் சாப்பிடும் அளவுக்கு இருந்தது.

    English summary
    Theni MP OP Raveendranath gives a explanation for democracy using Budget 2019 and get applause from BJP MPs.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X