டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஆபரேஷன் வெஸ்ட்லேண்ட்.. ஜெயா ஜெட்லீக்கு 4 ஆண்டு சிறை.. டெல்லி சிபிஐ கோர்ட் அதிரடி

Google Oneindia Tamil News

டெல்லி: சமதா கட்சியின் முன்னாள் தலைவர் ஜெயா ஜெட்லீக்கு 4 ஆண்டு சிறை தண்டனை கொடுத்து டெல்லி ஹைகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

பீகாரில் நிதிஷ் குமார் மற்றும் ஜார்ஜ் பெர்னாண்டஸ் மூலம் தொடங்கப்பட்ட சோஷலிச கட்சியின் தலைவராக இருந்தவர்தான் ஜெயா ஜெட்லீ. பீகாரில் மிகவும் மதிக்கப்பட்ட இவர் ஊழல் புகாரிலும், சொத்து குவிப்பு புகாரிலும் சிக்கினார்.

Operation Westland: Delhi court has sentenced Jaya Jaitly for four years

2000-2001 ல் நடந்த ராணுவ ஒப்பந்தத்தில் முறைகேடு செய்ததாக இவர் மீது புகார் வைக்கப்பட்டது. தேஹல்கா பத்திரிக்கை மூலம் நடத்தப்பட்ட ஸ்டிங் ஆபரேஷனில் இந்த முறைகேடு கண்டுபிடிக்கப்பட்டது. ஆப்ரேஷன் வெஸ்ட்லேண்ட் என்ற இந்த ஸ்டிங் ஆப்ரேஷன் மூலம் ஜெயா ஜெட்லீ முறைகேடு செய்தது 2001ல் அம்பலம் ஆனது.

காங்கிரஸ் தலைவர் சோனியா மருத்துவமனையில் அனுமதி.. வழக்கமான பரிசோதனை!காங்கிரஸ் தலைவர் சோனியா மருத்துவமனையில் அனுமதி.. வழக்கமான பரிசோதனை!

இதன் மீதான வழக்கு விசாரணை டெல்லி ஹைகோர்ட்டில் நடந்து வந்த நிலையில், இன்று அதில் தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், ஜெயா ஜெட்லீக்கு 4 ஆண்டு சிறை தண்டனை கொடுத்து டெல்லி சிபிஐ ஹைகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

மேலும் அதேபோல் அவரின் நெருங்கிய நண்பர்கள் கோபால் பச்சர்வால், எஸ்பி முர்காய் ஆகியோருக்கும் நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. வீடியோ கால் மூலம் இந்த தண்டனை வழங்கப்பட்டது. அதேபோல் இவர்கள் எல்லோருக்கும் ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.

English summary
Operation Westland: Delhi court has sentenced Jaya Jaitly for four years.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X