டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஒரு நாயகி உதயமாகிறாள்.. தேசிய அளவில் உருவாகும் 3ம் அணி? மாநில கட்சிகளின் அசத்தல் பிளான் பி!

லோக்சபா தேர்தலுக்கு பின் தேசிய அளவில் மூன்றாவது அணி உருவாவதற்கான பிரகாசமான வாய்ப்புகள் தெரிகிறது.

Google Oneindia Tamil News

Recommended Video

    மத்தியில் உதயமாக இருக்கும் மூன்றாவது கூட்டணி?- வீடியோ

    டெல்லி: லோக்சபா தேர்தலுக்கு பின் தேசிய அளவில் மூன்றாவது அணி உருவாவதற்கான பிரகாசமான வாய்ப்புகள் தெரிகிறது.

    லோக்சபா தேர்தலில் இதுவரை 4 கட்ட லோக்சபா தேர்தல்கள் முடிந்துள்ளது. இன்றும் ஐந்தாம் கட்ட தேர்தல் நடக்கிறது. மே 23 லோக்சபா தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளது.

    இந்தியாவின் புதிய பிரதமராக யார் பொறுப்பேற்பார் என்று பெரிய கேள்வி எழுந்துள்ளது. இதில் காங்கிரஸ், பாஜக ஆகிய கட்சிகள் இல்லாமல் வேறு மாநில கட்சியை சேர்ந்த நபர்கள் கூட பிரதமர் ஆக வாய்ப்புள்ளது என்கிறார்கள்.

    தமிழக வேலை தமிழருக்கே என்ற நிலையை திமுக உருவாக்கும்- ஸ்டாலின் உறுதி தமிழக வேலை தமிழருக்கே என்ற நிலையை திமுக உருவாக்கும்- ஸ்டாலின் உறுதி

    என்ன நடக்க வாய்ப்பு

    என்ன நடக்க வாய்ப்பு

    • இந்த லோக்சபா தேர்தலுக்கு பின் பின்வரும் 4 விஷயங்கள் நடக்க வாய்ப்புள்ளது.
    • காங்கிரஸ் கூட்டணி பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைப்பது. ஆனால் வாய்ப்பு குறைவு.
    • பாஜக கூட்டணி பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைப்பது. கொஞ்சம் மட்டுமே வாய்ப்புள்ளது.
    • மாநில கட்சிகளின் ஆதரவுடன் பாஜக அல்லது காங்கிரஸ் ஆட்சி அமைப்பது.
    • மாநில கட்சிகள் எல்லாம் சேர்ந்து மூன்றாவது அணியை உருவாக்குவது.

    ரேஸில் யார்

    ரேஸில் யார்

    இதற்கான ரேஸில் சில முக்கிய மாநில தலைவர்கள் இருக்கிறார்கள்.

    • மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி.
    • பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி.
    • தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ்.
    • சமாஜ்வாதி முன்னாள் தலைவர் முலாயம் சிங் யாதவ்.
    • அகிலேஷ் யாதவ், சந்திரபாபு நாயுடு ஆகியோர் தங்களுக்கு பிரதமர் ஆக விருப்பமில்லை என்று ஏற்கனவே கூறிவிட்டனர். பெரும்பாலும் மாயாவதி இல்லை மமதாவிற்கே வாய்ப்பு இருப்பதாக கூறுகிறார்கள்.

    இரண்டு பிரச்சனை

    இரண்டு பிரச்சனை

    இந்த நிலையில் இந்த மூன்றாவது அணி உருவாக்கத்திற்கு இரண்டே பிரச்சனைகள் மட்டுமே இருக்க வாய்ப்புள்ளது. அதன்படி சந்திரசேகர ராவிற்கும், சந்திரபாபு நாயுடுவிற்கும் இடையில் கடுமையான மனக்கசப்பு இருக்கிறது. இவர்கள் இருவரும் ஒரே அணியில் இணைவது சாத்தியமா என்பது தெரியவில்லை. அதேபோல் சந்திரபாபு நாயுடு காங்கிரஸ் கட்சிக்கு மிகவும் நெருக்கமாக இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    இன்னொரு பிரச்சனை

    இன்னொரு பிரச்சனை

    இரண்டாவது பிரச்சனை என்று பார்த்தால், காங்கிரஸ் கட்சியால் ஆட்சி அமைக்க முடியவில்லை என்றால், திமுக இந்த மூன்றாவது அணிக்கு ஆதரவு அளிக்குமா என்று கேள்வி எழுந்துள்ளது. ஒருவேளை திமுக கூட்டணி 20க்கும் மேற்பட்ட இடங்களை பெற்று, காங்கிரஸ் இல்லாமல் வேறு ஒரு அணிக்கு திமுக ஆதரவு அளிக்குமா, ஸ்டாலின் அந்த முடிவை எடுப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

    இன்னொரு வாய்ப்பு

    இன்னொரு வாய்ப்பு

    மூன்றாவது அணி உருவாகவில்லை என்றாலும் கூட, எதிர்க்கட்சிகள் எல்லாம் ஒன்றாக ஒரு குடையின் கீழ் இணைய வாய்ப்புள்ளது என்றும் கூறுகிறார்கள். ஆனால் எதிர்க்கட்சிகள் எல்லாம் காங்கிரஸ் கட்சியுடன் ஒன்று சேர்ந்து, ராகுல் காந்தி இல்லாமல் வேறு ஒரு நபரை பிரதமராக தேர்வு செய்யவும் வாய்ப்புள்ளது.

    English summary
    Opponents may form a federal front against BJP and Congress after May 23.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X