டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

நாளை தேர்தல் ரிசல்ட்.. மாலையே அவசர மீட்டிங்.. பிரதமரை தேர்வு செய்ய பிளான்.. எதிர்க்கட்சிகள் முடிவு!

லோக்சபா தேர்தல் முடிவுகள் நாளை வெளியாக உள்ள நிலையில், நாளை மாலை எதிர்க்கட்சிகள் எல்லாம் சேர்த்து ஆலோசனை கூட்டம் நடத்த உள்ளது.

Google Oneindia Tamil News

டெல்லி: லோக்சபா தேர்தல் முடிவுகள் நாளை வெளியாக உள்ள நிலையில், நாளை மாலை எதிர்க்கட்சிகள் எல்லாம் சேர்த்து ஆலோசனை கூட்டம் நடத்த உள்ளது.

லோக்சபா தேர்தல் கொண்டாட்டம் ஒரு வழியாக முடிந்துவிட்டது. இந்த இரவு கழிந்து விடிந்தால் தேர்தல் முடிவுகள் தெரிய தொடங்கிவிடும்.

நாளை காலை 8 மணிக்கு வாக்குகள் எண்ணப்பட உள்ளது. இந்த நிலையில் எதிர்க்கட்சிகள் இப்போதே பிரதமரை தேர்வு செய்ய களமிறங்கி உள்ளது.

நாளை கூட்டம்

நாளை கூட்டம்

அதன்படி நாளை மாலை எதிர்க்கட்சிகள் எல்லாம் சேர்த்து ஆலோசனை கூட்டம் நடத்த உள்ளது. டெல்லியில் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் இந்த சந்திப்பு நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சமயங்களில் பொதுவான ஹோட்டல் எதிலாவது கூட்டம் நடக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கிறார்கள்.

யார் எல்லாம்

யார் எல்லாம்

மொத்தம் 22 கட்சிகள் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள இருக்கிறது. திமுக தலைவர் ஸ்டாலின், பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி, சமாஜ் வாதி தலைவர் அகிலேஷ் யாதவ், மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி, பிஜு பட்நாயக், சரத் பவார், அரவிந்த் கெஜ்ரிவால், குமாரசாமி உள்ளிட்ட தலைவர்கள் இந்த சந்திப்பில் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.

என்ன நோக்கம்

என்ன நோக்கம்

அதன்படி நாளை மாலையே எதிர்க்கட்சிகள் பிரதமரை தேர்வு செய்ய திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வருகிறது. நாளை தேர்தல் முடிவுகள் கண்டிப்பாக சாதகமாக வரும் என்று எதிர்க்கட்சிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளது. இதனால்தான் நாளை மீட்டிங் நடக்க அதிக வாய்ப்புள்ளதாக கூறுகிறார்கள்.

இன்னொரு கூட்டம்

இன்னொரு கூட்டம்

இந்த கூட்டம் இல்லாமல் மே 24ம் தேதி இன்னொரு கூட்டம் நடத்தவும் திட்டமிட்டு இருக்கிறார்கள். அதில் புதிய மாநில கட்சிகளின் ஆதரவை எதிர்க்கட்சிகள் பெற வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது. அதன்பின் மே 24 மாலை ஆட்சி அமைக்க உரிமை கோரவும் எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளது.

English summary
Opponents plan for a meeting tomorrow in Delhi after the result.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X