டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

எல்லாம் செளக்கியம்தான்.... மோடியின் பேச்சை முன்வைத்து ட்விட்டரில் கலாய்த்த ப.சிதம்பரம்

Google Oneindia Tamil News

Recommended Video

    Howdy Modi | Modi about Indian Culture | இந்தியாவின் அழகே பல மொழியும், கலாச்சாரமும்தான்: மோடி

    டெல்லி: அமெரிக்காவின் ஹூஸ்டனில் ஹவுடி மோடி நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசிய எல்லாம் செளக்கியம்தான் என்பதை வைத்து ட்விட்டரில் விமர்சித்திருக்கிறார் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம்.

    ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் டெல்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் சிதம்பரம். தற்போது ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல் செய்திருக்கிறார் சிதம்பரம்.

    Opposition leaders are in prison, Chidambaram Tweets

    அதேநேரத்தில் தமது குடும்பத்தினர் மூலமாக ட்விட்டரில் ஆக்டிவ்வாகவும் சிதம்பரம் இருந்து வருகிறார். இந்தி திணிப்புக்கு எதிராக கடுமையாக கருத்துகளை சிதம்பரம் அதில் பயன்படுத்தி இருந்தார்.

    இதனிடையே அமெரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருக்கும் பிரதமர் மோடி ஹூஸ்டன் நகரில் ஹவுடி மோடி நிகழ்ச்சியில் பங்கேற்றார். இதில் அமெரிக்கா அதிபர் டொனால்டு டிரம்ப்பும் கலந்து கொண்டார்.

    இதில் பேசிய பிரதமர் மோடி தமிழ் உள்ளிட்ட அனைத்து இந்திய மொழிகளிலும் எல்லோரும் செளக்கியம் என குறிப்பிட்டார். இதனை முன்வைத்து இன்று தமது ட்விட்டர் பக்கத்தில் ப.சிதம்பரம், வேலைவாய்ப்பின்மை, வேலை இழப்புகள், குறைவான கூலி, கும்பல் வன்முறைகள், காஷ்மீரில் இயல்பு முடக்கம் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்களை சிறையில் அடைத்தல் ஆகியவற்றைத் தவிர்த்து அனைவரும் செளக்கியம் என கிண்டலடித்துள்ளார்.

    தகுதி நீக்கப்பட்ட எம்எல்ஏக்கள் தேர்தலில் போட்டியிடலாம்.. உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தடாலடிதகுதி நீக்கப்பட்ட எம்எல்ஏக்கள் தேர்தலில் போட்டியிடலாம்.. உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தடாலடி

    இதற்கு பிரதமர் மோடியின் ஆதரவாளர்கள் கடும் கண்டனம் தெரிவித்து அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

    English summary
    Former Union Minister P Chidambaram who jailed in Tihar Jail tweets, “Bharat mai sab achha hai. Except for unemployment, loss of existing jobs, lower wages, mob violence, lockdown in Kashmir and throwing Opposition leaders in prison.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X