டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இப்படியே போனா ஆட்சியை இழந்திடுவோம்.. வேகமாக செயல்படும் எதிர்க்கட்சிகள்.. பெரும் கலக்கத்தில் பாஜக!

லோக்சபா தேர்தல் நடந்து கொண்டிருக்கும் நேரத்திலேயே மாநில கட்சிகள் தேர்தலுக்கு பிந்தைய கூட்டணிக்காக தயாராகி வருகிறது.

Google Oneindia Tamil News

Recommended Video

    வேகமாக செயல்படும் எதிர்க்கட்சிகள்.. பெரும் கலக்கத்தில் பாஜக!- வீடியோ

    டெல்லி: லோக்சபா தேர்தல் நடந்து கொண்டிருக்கும் நேரத்திலேயே மாநில கட்சிகள் தேர்தலுக்கு பிந்தைய கூட்டணிக்காக தயாராகி வருகிறது. மாநில கட்சிகளின் வேகத்தை பார்த்து பாஜக கலக்கத்தில் இருக்கிறது.

    லோக்சபா தேர்தலில் இதுவரை 5 கட்ட வாக்குப்பதிவு நிறைவு பெற்று இருக்கிறது. இன்னும் 2 கட்ட வாக்குப்பதிவுகள் மட்டுமே உள்ளது. மே 23ம் தேதி வாக்குகள் எண்ணப்பட இருக்கிறது.

    இந்த நிலையில்தான், எதிர்க்கட்சிகள் தேர்தலுக்கு என்ன செய்ய வேண்டும் என்பதை இப்போதே திட்டமிட்டு வருகிறது. என்ன செய்ய வேண்டும் என்று திட்டமிடல் மட்டுமில்லாமல் அதை செயல்படுத்தியும் வருகிறது.

    மிக முக்கியமான கோரிக்கை.. தேர்தல் முடிந்ததும் ஜனாதிபதியை சந்திக்கும் 21 கட்சிகள்.. அதிரடி பிளான்! மிக முக்கியமான கோரிக்கை.. தேர்தல் முடிந்ததும் ஜனாதிபதியை சந்திக்கும் 21 கட்சிகள்.. அதிரடி பிளான்!

    ஒரு பக்கம் சந்திரசேகர ராவ்

    ஒரு பக்கம் சந்திரசேகர ராவ்

    தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ்தான் இதில் முன்னிலையில் இருப்பது. அவர் மூன்றாம் அணியை உருவாக்குவதற்காக, மாநில தலைவர் ஒருவரை பிரதமராக்குவதற்காக இப்போதே, தென்னிந்திய கட்சி தலைவர்களை சந்தித்து வருகிறார். தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் ஏற்கனவே கேரள முதல்வர் பினராயி விஜயனை சந்தித்தார். அதேபோல் கர்நாடக முதல்வர் குமாரசாமியிடம் போனில் பேசினார்.

    இன்னொரு பக்கம் என்ன

    இன்னொரு பக்கம் என்ன

    இன்னொரு பக்கம் ஆந்திர பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு, மே 21ம் தேதியை குறி வைத்து இருக்கிறார். லோக்சபா தேர்தல் முடிவுகள் வெளியாவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பே பிரதமரை தேர்வு செய்ய இவர் முடிவெடுத்து இருக்கிறார். இதற்காக அவர் 21 கட்சிகளிடம் பேசி உள்ளார். இந்த சந்திப்பு மே 21 நடக்க உள்ளது.

    வேறு ஒரு கோணம்

    வேறு ஒரு கோணம்

    அதேபோல் இந்த 21 கட்சிகளும் மே 23ம் தேதி குடியரசுத்தலைவரை சந்தித்து கடிதம் அளிக்க உள்ளனர். அதன்படி, லோக்சபா தேர்தலில் யாருக்கும் மெஜாரிட்டி கிடைக்கவில்லை என்றால், தனி பெரும் கட்சியை ஆட்சி அமைக்க அழைக்க கூடாது, அதிக பெரும்பான்மை உள்ள கட்சியைத்தான் ஆட்சி அமைக்க அழைக்க வேண்டு என்று கோரிக்கை வைக்க உள்ளனர்.

    பாஜகவிற்கு எதிரான நிலை

    பாஜகவிற்கு எதிரான நிலை

    இந்த திட்டம் எல்லாம் பாஜகவை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும், என்ற ஒரு விஷயத்தை மட்டும்தான் மையமாக வைத்து செய்யப்படுகிறது. அதன்படி, பாஜக, காங்கிரஸ் அல்லாமல் மூன்றாம் கூட்டணியை அமைப்பது அல்லது காங்கிரஸ் கட்சியுடன் சேர்ந்து ஆட்சி அமைப்பது, என்ற இரண்டு திட்டங்களை மையமாக வைத்து எதிர்க்கட்சிகள் செயல்படுகிறது. இதுதான் பாஜகவிற்கு கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

    பாஜக கோபம்

    பாஜக கோபம்

    தேர்தலுக்கு பின் மாநில கட்சிகளை தன்பக்கம் இழுக்கலாம் என்று பாஜக நினைத்தது. ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில், பாஜகவிற்கு எதிராக பெரும்பாலான எதிர்க்கட்சிகள் ஒரு குடையில் கூடி வருகிறது. இதை கொஞ்சமும் எதிர்பார்க்காத பாஜக குழப்பத்தில் உள்ளது. பாஜக தேசிய தலைவர் அமித் ஷாவும், பிரதமர் மோடியும் இதை எப்படி எதிர்கொள்கிறார்கள் என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

    English summary
    Opposition parties move fast for post-poll alliance makes BJP worry.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X