டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ரிசல்ட் வரும் நேரத்தில் எதிர்க்கட்சிகள் மக்களை குழப்புகிறார்கள்.. இணைந்திருப்போம்.. அமித் ஷா ஆவேசம்

Google Oneindia Tamil News

டெல்லி: மக்களை ஏமாற்ற வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு நடப்பதாக, எதிர்க்கட்சிகள் புகார் கூறுகின்றன என்று, பாஜக தலைவர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

லோக்சபா தேர்தல்கள் முடிவடைந்துவிட்ட நிலையில், வாக்குப்பதிவு இயந்திரங்களில் பாஜக முறைகேட்டில் ஈடுபடுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. இதுதொடர்பாக பல்வேறு வீடியோக்களை வெளியிட்டு வருகின்றன. ஆனால், வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு செய்வது இயலாத விஷயம் என தேர்தல் ஆணையம் ஒரு பக்கம் விளக்கங்களை அளித்து வருகிறது.

Opposition on EVMs are an attempt to mislead the public: Amit Shah

இந்த நிலையில், ஆளும் கட்சியான பாஜக மட்டும் அமைதிகாத்தபடி இருந்தது. இன்று அதன் தலைவர் அமித்ஷா இந்த பிரச்சினையை கையில் எடுத்துள்ளார்.

அவர் வெளியிட்ட ட்வீட்டில், வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு என்ற பெயரில் எதிர்க்கட்சிகள் எழுப்பும் சந்தேகம் மக்களை குழப்பத்தான். இதுபோன்ற பிரச்சாரங்களால் நாம் பாதிக்கப்பட கூடாது. நமது ஜனநாயக நிறுவனங்களை பலப்படுத்த வேண்டியது நமது கடமை. அனைவரும் ஒற்றுமையாக இதை செய்வோம். இவ்வாறு ஹிந்தியில் ட்வீட் செய்துள்ளார் அமித் ஷா.

English summary
Amit Shah tweeted, "The question being raised by the opposition on EVM is just an attempt to spread confusion, without affecting, we should all try to strengthen our democratic institutions."
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X