டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

வைரல் வீடியோவை பார்த்த கிலியில் ஊர்க் காவலர்களாக மாறிய எதிர்க்கட்சிகள்.. என்னதான் நடக்கிறது?

Google Oneindia Tamil News

Recommended Video

    பாஜகவினரால் கடத்தப்படும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் ? வைரலாகும் வீடியோ

    டெல்லி: 24 மணி நேரமும் வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைத்துள்ள கட்டடத்துக்கு முன்பு ஊர்க் காவலர்களாக மாறி எதிர்க்கட்சிகள் கண்காணித்து வருகின்றனர்.

    தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளை உண்மையாக்க வாக்கு இயந்திரங்கள் மாற்றப்படுவதாக சமூகவலைதளங்களில் வீடியோக்கள் வைரலாகின.

    இதையடுத்து எதிர்க்கட்சிகள் தங்களது பிரதிநிதிகளை 24 மணி நேரமும் வாக்கு இயந்திரம் வைக்கப்பட்டுள்ள இடத்தில் கண்காணிப்புக்குட்படுத்தியுள்ளனர்.

    தென்மேற்கு பருவமழைக்கான சூழல் 3 நாட்களில் தொடங்கும்... இந்திய வானிலை மையம் ஜில் ஜில் அறிவிப்பு! தென்மேற்கு பருவமழைக்கான சூழல் 3 நாட்களில் தொடங்கும்... இந்திய வானிலை மையம் ஜில் ஜில் அறிவிப்பு!

    எதிர்க்கட்சிகள் கோரிக்கை

    எதிர்க்கட்சிகள் கோரிக்கை

    மத்திய பிரதேச மாநிலம் போபாலில் நேற்று இரவு காங்கிரஸ் தலைவர் திக்விஜய சிங் வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையை நேரில் சென்று பார்வையிட்டார். வாக்கு பதிவு இயந்திரங்களுடன் விவிபாட் சீட்டை சரி பார்க்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.

    கோரிக்கை

    கோரிக்கை

    இந்த நிலையில் இது தொடர்பாக 22 எதிர்க்கட்சிகளும் தேர்தல் ஆணையத்தில் மனு அளித்தனர். அப்போது வாக்கு எண்ணிக்கையை முறையாக நடத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    கண்காணிப்பு

    கண்காணிப்பு

    இதைத் தொடர்ந்து சண்டீகர், உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள இடங்களுக்கு முன்பு 24 மணி நேரமும் கண்காணித்து வருகின்றனர்.

    எதிர்க்கட்சிகள்

    எதிர்க்கட்சிகள்

    வாக்கு பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளின் முன்பு பூத் ஏஜென்ட்கள் கண்காணித்து வருகின்றனர். அது மட்டுமல்லாது சிசிடிவி காட்சிகளையும் எதிர்க்கட்சியினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

    English summary
    Opposition parties booth agents vigil for 24 hours outside where EVM are kept.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X