டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

வேளாண் மசோதாவிற்கு எதிர்ப்பு : செப்டம்பர் 24ல் நாடு தழுவிய போராட்டம் - காங்கிரஸ் அழைப்பு

வேளாண் மசோதாவுக்கு எதிராக செப்டம்பர் 24ஆம் தேதி நாடு தழுவிய போராட்டத்துக்கு காங்கிரஸ் அழைப்பு விடுத்துள்ளது. நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் வேளாண் மசோதா நிறைவேற்றப்பட்ட நிலையில் போராட்டத்துக்கு அழைப்

Google Oneindia Tamil News

டெல்லி: நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் வேளாண் மசோதா நிறைவேற்றப்பட்ட நிலையில் செப்டம்பர் 24ஆம் தேதி நாடு தழுவிய போராட்டத்துக்கு காங்கிரஸ் அழைப்பு விடுத்துள்ளது. இந்தப் போராட்டத்தில் திமுக, திரிணாமூல் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், சிவசேனா, ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்க வாய்ப்பு உள்ளது.

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் வேளாண் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. நேற்று ராஜ்ய சபாவில் இந்த மசோதாவை நிறைவேற்றும்போது அமளி துமளி நடந்தது. சபை விதிகள் அடங்கிய பேப்பரை கிழித்து எறிந்தனர். வேளாண் மசோதா நகலையும் கிழித்து எறிந்தனர்.

Opposition to the Farm Bill 2020: Congress calls for nationwide protest

இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் எதிர்க்கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். பஞ்சாபில் போராட்டம் பெரிய அளவில் நடந்து வருகிறது. வரும் 24ஆம் தேதி முதல் 26ஆம் தேதி வரை தொடர் போராட்டங்களை நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர். ரயில் மறியல் போராட்டத்திலும் விவசாயிகள் ஈடுபட உள்ளனர்.

இந்த மசோதாவை சட்டமாக்க ஒப்புதல் அளிக்கக்கூடாது என்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்து முறையிட திரிணாமூல் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், ஆம் ஆத்மி உள்ளிட்ட 12 எதிர்க்கட்சிகள் தீர்மானித்துள்ளன.

சஸ்பெண்ட் செய்யப்பட்ட 8 எம்பிக்கள் ராஜ்யசபா வளாகத்தை விட்டு வெளியேற மறுப்பு - நள்ளிரவிலும் தர்ணாசஸ்பெண்ட் செய்யப்பட்ட 8 எம்பிக்கள் ராஜ்யசபா வளாகத்தை விட்டு வெளியேற மறுப்பு - நள்ளிரவிலும் தர்ணா

இதன் தொடர்ச்சியாக, மத்திய பாஜக அரசு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியுள்ள வேளாண் மசோதாக்களுக்கு எதிராக நாடு தழுவிய அளவில் போராட்டம் நடத்த காங்கிரஸ் கட்சி அழைப்பு விடுத்துள்ளது. இந்த போராட்டத்தில் அனைத்து எதிர்கட்சியினரம் பங்கேற்பார்கள் என்று தெரிகிறது.

இதனிடையே மத்திய வேளாண் மசோதாவை எதிர்த்து, மாநிலம் தழுவிய அளவிலான போராட்டத்துக்கு திமுக அழைப்பு விடுத்துள்ளது. செப்டம்பர் 28 ஆம் தேதி நடத்த திட்டமிடப்பட்டுள்ள இந்தப் போராட்டத்தில் காங்கிரஸ், மதிமுக, விசிக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பங்கேற்கும் எனத் தெரிகிறது.

English summary
Congress has called for a nationwide strike on September 24 as the agriculture bill is passed in both houses of parliament. Parties including DMK, Trinamool Congress, Marxist Communist Party, Shiv Sena and Aam Aadmi Party are participating in this struggle.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X