டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஓபிஎஸ், இபிஎஸ் ஹேப்பி.. அதிமுக வேட்பு மனுக்களில் கையெழுத்திடலாம்.. டெல்லி ஹைகோர்ட் தீர்ப்பு

Google Oneindia Tamil News

டெல்லி: அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் வேட்பு மனுவில் ஒ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கையெழுத்திட தடை விதிக்கக் கோரி முன்னாள் எம்.பி.கே.சி.பழனிசாமி தொடர்ந்த வழக்கை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

ஜெயலலிதா மறைவுக்கு பின் அதிமுக விதிகளில் மாற்றம் கொண்டுவரப்பட்டது. இதன்படி பொதுச்செயலாளர் பதவிக்கு பதில் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவி உருவாக்கப்பட்டது. அவர்கள் தான் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் வேட்புமனுக்களில் கையெழுத்திடுகிறார்கள்.

ops eps sign no problem : Delhi high court reject k c palanisamy petition

இந்நிலையில் இது அதிமுகவின் சட்டவிதிகளுக்கு புறம்பானது என கூறி அதிமுக முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு அங்கு நிலுவையில் இருந்து வந்தது.

இந்நிலையில் தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில் இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க் கோரி கே.சி.பழனிசாமி டெல்லி உயர்நீதிமன்றத்தில் முறையிட்டார். இதனால் அவரது கோரிக்கையை ஏற்ற நீதிமன்றம் அவசர வழக்காக விசாரித்தது.

ஒரு விஷயம் கவனிச்சீங்களா.. அம்மா சமாதி பக்கம் ஒருத்தர் கூட போகலை பாருங்க! ஒரு விஷயம் கவனிச்சீங்களா.. அம்மா சமாதி பக்கம் ஒருத்தர் கூட போகலை பாருங்க!

இன்று இந்த வழக்கில் தீர்ப்பளித்த டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதியோகேஷ் கண்ணா, அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் வேட்பு மனுவில் ஒ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கையெழுத்திட இடைக்காலத் தடை விதிக்க எந்த காரணமும் இல்லை என்று தடை விதிக்க மறுத்து உத்தரவிட்டார். இதனால் அதிமுகவினர் மகிழ்ச்சியில் உள்ளனர்.

English summary
Fairytale Unity between jayalalithaa with dhinakaran over gift box symbol
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X