டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

முண்டியடித்தும் பின்வரிசையில் ஓபிஆர்.. முகத்தில் ஈயாடாத ஓபிஎஸ்.. பன்னீரை தவிர்த்தாரா பிரதமர்?

Google Oneindia Tamil News

டெல்லி: குடியரசு தலைவர் பதவிக்கான பாஜக வேட்பாளர் திரௌபதி முர்மு வேட்புமனு தாக்கலின் போது தலையை தொங்க போட்டுக் கொண்டு முகத்தில் ஈயாடாமல் இருந்த ஓபிஎஸ்யை பிரதமர் மோடி கண்டுகொள்ளவில்லையா என்ற கேள்வி எழுந்தது.

அதிமுகவில் உள்கட்சி பூசல் வெடித்து ஓபிஎஸ் நேற்று நடந்த பொதுக் குழுவில் இபிஎஸ் ஆதரவாளர்களால் அவமானப்படுத்தப்பட்டார். பாதியிலேயே பொதுக்குழுவை விட்டு வெளியேறினார்.

கட்சியில் இரட்டை தலைமை நிலைப்பாடே தொடர வேண்டும் என்பதை விரும்பும் பன்னீர்செல்வத்திற்கு எடப்பாடிபழனிச்சாமியை காட்டிலும் ஆதரவு குறைவாகவே உள்ளது. தற்போது ஒருங்கிணைப்பாளர் பதவியும் பறிபோனதாக எடப்பாடி தரப்பினர் சொல்கிறார்கள்.

இ-பைக் தீ பிடிக்கத்தான் செய்யும்! வாயை கொடுத்து வாங்கிக் கட்டிய ஓலா சிஇஓ! வச்சு செய்த நெட்டிசன்ஸ்கள் இ-பைக் தீ பிடிக்கத்தான் செய்யும்! வாயை கொடுத்து வாங்கிக் கட்டிய ஓலா சிஇஓ! வச்சு செய்த நெட்டிசன்ஸ்கள்

அரசியல் என்னவாகும்

அரசியல் என்னவாகும்

இதனால் ஓபிஎஸ்ஸின் அரசியல் அஸ்தமனமாகிறதா என்ற கேள்வியும் எழுகிறது. இந்த நிலையில் டெல்லிக்கு ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் சென்றுள்ளார். குடியரசுத் தலைவருக்கான பாஜக வேட்பாளர் திரௌபதி முர்முவின் வேட்பு மனு தாக்கலுக்காக ஓபிஎஸ் டீம் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

மோடியை சந்திக்க ஓபிஎஸ் திட்டம்

மோடியை சந்திக்க ஓபிஎஸ் திட்டம்

எனினும் அவர் பிரதமர் நரேந்திர மோடியுடன் சந்திக்க நேரம் கேட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் அவ்வாறு நேரம் கிடைத்து பிரதமரை சந்திக்கும் பட்சத்தில் நிச்சயம் அதிமுக உள்கட்சி பூசல் குறித்து முறையிட்டு கட்சியில் தனக்கான தலைமை பதவியை தக்க வைத்துக் கொள்வார் என தெரிகிறது.

முண்டியடித்த ஓபிஆர்

முண்டியடித்த ஓபிஆர்

இந்த நிலையில் திரௌபதி முர்முவின் வேட்பு மனு தாக்கலில் கலந்து கொள்ள பிரதமருடன் பாஜக, கூட்டணி கட்சி தலைவர்கள் சென்ற போது ஓபிஎஸ் மகன் ஓபி ரவீந்திரநாத் மற்ற தலைவர்களை முண்டியடித்துக் கொண்டு முன்வரிசைக்கு ஓடி வந்த காட்சிகள் வைரலாகி வருகின்றன.

எதற்காக முண்டியடித்தார்

ஒரு வேளை முன்வரிசையில் முண்டியடித்து கொண்டு வந்தால் தனக்கு பிரதமரின் ஆதரவு இருப்பதாக எடப்பாடி பழனிச்சாமி அணிக்கு காட்டுவதற்காகவா என தெரியவில்லை. இந்த நிலையில் வேட்புமனு தாக்கலின் போது ஓபிஎஸ் பிரதமருக்கு பின் வரிசையில் உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத்துடன் அமர வைக்கப்பட்டிருந்தார்.

ஓபிஎஸ்ஸை கண்டு கொள்ளாத பிரதமர்

ஓபிஎஸ்ஸை கண்டு கொள்ளாத பிரதமர்

முண்டியடித்து ஓடி வந்த ஓபி ரவீந்திரநாத் பின் வரிசையில் அமர்ந்திருந்தார். ஓபிஎஸ் முகத்தை தொங்க போட்டுக் கொண்டும், போலியான சிரிப்பை காட்டிக் கொண்டும் இருந்தார். பின்னர் வேட்புமனுவுக்கு பிறகு பிரதமர் நரேந்திர மோடி அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். அப்போது ஓபிஎஸ் இரு முறை கைகூப்பியும் பிரதமர் மோடி அவரை கண்டு கொள்ளவில்லை என்றே தெரிகிறது. இல்லை முன்கூட்டியே ஓபிஎஸ்ஸை வரவேற்று பிரதமர் மோடி பேசினாரா என்பதும் தெரியவில்லை. ஓபிஎஸ்ஸின் நிலை மிகவும் அனுதாபத்துக்குரியதாகவே இருப்பதாக சொல்லப்படுகிறது.

English summary
O Paneer Selvam sitting with UP CM Yogi Adityanath in Delhi while Bjp presidential candidate Draupadi Murmu files nomination. He was noticed by PM?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X