டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

லாக் டவுனில் மக்களை உயிர்ப்போடு வைத்திருக்கும் பாரம்பரிய விளையாட்டுக்கள் - மோடி பெருமிதம்

இந்த லாக் டவுன் காலத்தில் இந்தியாவின் கிராமங்களில் மக்கள் விளையாடும் பாரம்பரிய விளையாட்டுகள் அவர்களை உயிர்ப்போடு வைத்திருக்கிறது என்று பிரதமர் மோடி தனது மன் கீ பாத் நிகழ்ச்சியில் பேசும் போது கூறியுள்ள

Google Oneindia Tamil News

டெல்லி: கொரோனா வைரஸ் பரவி வரும் இந்த கால கட்டத்தில் மக்கள் ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட்டு நோய் எதிர்ப்பு சக்தியோடு இருக்க வேண்டும் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். ஜூன் மாதத்தின் கடைசி ஞாயிறான இன்று மன் கீ பாத் நிகழ்ச்சியில் பேசிய அவர், நாடு முழுவதும் லாக்டவுன் கால கட்டத்தில் மக்கள் விளையாடும் பல்லாங்குழி, பரமபதம்,கல்லாங்கல் போன்ற பாரம்பரிய விளையாட்டுக்கள் அவர்களை என்றைக்கும் உயிர்ப்போடு வைத்திருக்கிறது என்றும் தெரிவித்துள்ளார்.

மன் கீ பாத் எனப்படும் மனதின் குரல் நிகழ்ச்சி மூலம் பிரதமர் மோடி மாதந்தோறும் நாட்டு மக்களிடம் உரையாற்றி வருகிறார். கொரோனா லாக் டவுன் பரவி வரும் இன்றைய கால கட்டத்தில் தேசத்தின் மக்கள் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகளை இன்றைய மன் கீ பாத் நிகழ்ச்சியில் பேசும் போது தெரிவித்தார்.

Our country has a very rich heritage of traditional sports says Modi in Mann Ki Baat

நமது தேசம் ஆன்மீக தேசம், உலகத்திற்கே பல நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட சத்தான பாரம்பரிய மருந்துகளை நம் நாட்டில் இயற்கையாகவே பயன்படுத்திக்கொண்டிருக்கிறோம். நமது நாட்டின் சமையல் அறையில் அன்றாடம் பயன்படுத்தும் இஞ்சியும் மஞ்சளும்தான் தற்போது கொரோனாவிற்கு எதிராக உலகம் முழுவதும் பயன்படுத்தி வருவதாக கூறினார் மோடி.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க தற்போது நாடு முழுவதும் லாக் டவுன் அறிவிக்கப்பட்டுள்ளது. ஓய்வாக இருக்கும் மக்கள் பலரும் பாரம்பரிய விளையாட்டுக்களை விளையாடி வருகின்றனர். தமிழ்நாட்டின் பல்லாங்குழி கர்நாடகாவின் அலிகுலி மனே விளையாட்டு பிரபலமாக விளையாடுகின்றனர்.

குழி குழியாக உள்ள தட்டில் முத்துக்களை நிரப்பி விளையாடும் இந்த விளையாட்டு தென்னிந்தியாவில் மட்டுமல்ல தெற்காசியா ஏன் உலகம் முழுவதுமே தற்போது பிரபலமாகி வருகிறது. இந்த விளையாட்டுக்கள் மட்டுமல்லாது பாரமபதம் எனப்படும் ஏணி பாம்பு விளையாட்டு, கல்லாங்கல் எனப்படும் சிறு கற்களை தூக்கிப்போட்டு பிடித்து விளையாடும் விளையாட்டுக்களை தற்போது இன்றைய சிறுவர்களும் விளையாடுகின்றனர்.

இதுபோன்ற பாரம்பரிய விளையாட்டுக்கள்தான் நம் தேசத்தின் மக்களை இன்றைக்கும் உயிர்போடு வைத்திருக்கிறது. இதே போல கிராமங்களில் தாயம் விளையாட்டும் விளையாடுகின்றனர். சோழி, புளியமுத்துக்களைக் கொண்டும் விளையாடும் இந்த விளையாட்டுக்கள் இன்றைக்கும் கிராம மக்களிடையே பிரபலமாக விளையாடப்படுகிறது என்று கூறினார் மோடி.

 இந்தியாவுடன் யாரும் மோத முடியாது.. லடாக் எல்லையில் சீனாவுக்கு சரியான பதிலடி.. மோடி இந்தியாவுடன் யாரும் மோத முடியாது.. லடாக் எல்லையில் சீனாவுக்கு சரியான பதிலடி.. மோடி

தொடர்ந்து பேசிய அவர், இந்த கொரோனா வைரஸ் பரவல் காலத்திலும் சமூக சேவை செய்து வரும் பலரையும் பாராட்டினார். கடந்த மாதம் பேசும் போது பாராட்டிய மதுரையைச் சேர்ந்த மோகனின் சேவையை இந்த மாதமும் நினைவுபடுத்தினார். சலூன் கடை வைத்திருக்கும் மோகன், தனது மகளின் படிப்பு செலவுக்காக வைத்திருந்த 5 லட்சம் ரூபாய் சேமிப்பு பணத்தை தனது பகுதியில் வசிக்கும் மக்களுக்காக அரிசி, காய்கறி, மளிகைப்பொருட்களை வாங்கிக் கொடுத்து உதவினார். தனது குடும்ப நலனைத்தாண்டி மக்களுக்காக சேவை செய்யும் நல்ல உள்ளங்களை மோடி இன்றைக்கும் பாராட்டியதோடு வாழ்த்து தெரிவித்தார்.

English summary
Prime Minister Modi speech today Mann Ki Baat, our country has a very rich heritage of traditional sports. For example, you may have heard the name of agame called “Pachisi”. This game is played as Pallanguli in Tamil Nadu, is called Ali Guli Mane in Karnataka and is known as VamanGuntlu in AndhraPradesh.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X