டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இந்தியாவில் கொரோனா சமூக தொற்றாக மாறிவிட்டதா? இந்திய மருத்துவ கவுன்சில் விளக்கம்

Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியாவில் கொரோனா வைரஸ் சமூக தொற்றாக மாறிவருவதாக அச்சம் நிலவுகிறது. ஏனெனில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பு குறித்து சோதனை செய்த 11 சதவீதம் பேர் எந்த ஒரு வெளிநாடுகளுக்கும் செல்லாதவர்கள் ஆவர். இந்நிலையில் இந்தியாவில் ஸ்டேஜ் 3 என்ற நிலையை எட்ட வில்லை என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மறுத்துள்ளது.

Recommended Video

    3வது ஸ்டேஜை சமாளிக்க ரெடியாகும் இந்தியா..

    இந்தியாவில் சனிக்கிழமை (நேற்று) காலை நிலவரப்படி 724 ஆக இருந்த கொரோனா வைரஸ் பாதிப்பு நேற்று இரவுக்குள் 918 ஆக அதிகரித்தது. இந்நிலையில் இன்று காலைக்குள் 1024 ஆக உயர்ந்துள்ளது. . அதில் 920 பேர் பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 85 பேர் இதுவரை நாடு முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

    இந்நிலையில் கடுமையான மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 110 நோயாளிகளில் 12 பேர் (11 சதவீதம் பேர்) கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது சமுக தொற்றாக இந்தியாவில் கொரோனா வைரஸ் மாறியிருப்பதற்கான முதல் அறிகுறியாக பார்க்கப்படுகிறது. ஆனால் இந்த 12 பேர் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் அல்லது எந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பது அரசு தரப்பு அதிகாரிகள் உறுதிப்படுத்தவில்லை.

    இந்தியாவில் இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் உச்சபட்சமாக 179 பேருக்கு கொரோனா.. 900த்தை தாண்டியது இந்தியாவில் இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் உச்சபட்சமாக 179 பேருக்கு கொரோனா.. 900த்தை தாண்டியது

    மத்திய அரசு மறுப்பு

    மத்திய அரசு மறுப்பு

    எனினும் மத்திய அரசு ஸ்டேஜ் 3 என்ற நிலையை மறுத்துள்ளது. வெளிநாடு செல்லாதவர் அல்லது பாதிக்கப்பட்ட நோயாளியுடன் தொடர்பு கொள்ளாதவர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு எண்ணிக்கை (12) ள் சமுதாய பரவலின் ஆரம்பம் இருப்பதாக முடிவுக்கு வர முடியாது என்று தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பரவல் குறித்து நேற்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) விஞ்ஞானி டாக்டர் ராமன் ஆர் கங்ககேத்கர் கூறுகையில், மூச்சு திணறலால் பாதிக்கப்பட்ட நோயாளிகளில் பாசிட்வ் என்று வெளிநாடுகளுக்கு செல்லாதவர்களுக்கும் வந்திருப்பதை ஒப்புக் கொண்டார்.

    கொரோனா இருந்தது

    கொரோனா இருந்தது

    அப்போது அவரிடம் இது போல் எத்தனை பேருக்கு சோதிக்கப்பட்டது என்ற செய்தியாளர்கள் கேட்ட போது, "நாங்கள் சமீபத்தில் தான் காய்ச்சல், சளி மற்றும் மூச்சுத்திணறால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு பரிசோதனை செய்யத் தொடங்கினோம். இதில் சிலருக்கு கொரோனா பாசிட்டிவ் இருந்தது உண்மை தான். ஆனால் அப்படி பாதிக்கப்பட்ட மக்கள் வெளிநாடு சென்ற வரலாற்றைக் கொடுக்கவில்லை. ஆனால், இபபோது உள்ள குறைந்த பரவல் எண்ணிக்கையை வைத்து சமூக பரவல் என்று முடிக்கு வர முடியாது..

    மறைக்க விரும்புகிறார்கள்

    மறைக்க விரும்புகிறார்கள்

    மக்கள் தங்கள் பயண வரலாறை மறைக்க விரும்புகிறார்கள்.. சில சந்தர்ப்பங்களில் மக்கள் தங்களுக்கு கொரோனா இருப்பபதை கூட வெளிப்படுத்த மறுக்கிறார்கள். , சிலர் தங்களுடைய வெளிநாட்டு பயண வரலாற்றை வெளிப்படுத்த விரும்பவில்லை நீங்கள் ஊடகங்களில் பார்த்திருப்பீர்கள் எனவே எண்ணிக்கை அதிகரிக்காத நிலையில் அதை பற்றி விரிவாக கூற முடியாது என்றார்.

    இது நல்ல செய்தி அல்ல

    இது நல்ல செய்தி அல்ல

    இந்நிலையில் இந்திய மருத்துவ கவுன்சிலின் வைராலஜி மேம்பட்ட ஆராய்ச்சி மையத்தின் முன்னாள் தலைவர் டாக்டர் டி ஜேக்கப் ஜான் கூறுகையில், மூச்சுத்திணறல் நோயாளிகளிடையே பாசிட்டிவ் வழக்குகள் நல்ல செய்தி அல்ல. தொற்று பொது சுகாதார கட்டுப்பாட்டு நடவடிக்கைகளில் இருந்து நழுவிவிட்டது. இதுவரை நாங்கள் டிரான்ஸ்மிஷன் கோட்டை நிறுத்த முயற்சித்தோம், அதை குறுக்கிடுகிறோம். இதுவரை இருந்த அளவு அதுதான். சமூகத்தில் பாதிக்கப்படாதவர்களைப் பாதுகாக்க யார் தொற்றுநோயைக் கொண்டு வருகிறார்கள் என்பதைக் கண்டறிய முயற்சிப்பதன் மூலம் பொது சுகாதார பரிசோதனை மூலம் இதைச் செய்தோம். ஆனால் காய்ச்சல் சளி மற்றும் மூச்சுத்திணறல் நோயாளிகளை பரிசோதிப்பது என்பது சுகாதாரத்துக்காகவும், பாதிக்கப்பட்டவர்களின் நலனுக்காகவும், அவர்களின் சிகிச்சைக்காகவும் சோதிக்கப்படுகிறது. "மூக்சுத்திணறல் நோயாளிகளிடம் ஆரம்ப நிலையிலேயே சோதனை செய்வது என்பது நோய்த்தொற்றுகள் கண்டறியப்படாத பிற இடங்களில் நிலைமையைக் கணிக்க அரசாங்கம் விரிவாக்க முடியும் என்றார்.

    மார்ச் 20 முதல் சோதனை

    மார்ச் 20 முதல் சோதனை

    கொரோனா வைரஸின் பரவல் யார் மூலம் ஒருவருக்கு பரவியது என்பதை கண்டுபிடிக்க இயலாமை நிலையே சமூக பரிமாற்றம் என்று குறிக்கப்படுகிறது. அரசாங்கம், மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட மூச்சுத்திணறல் நோயாளிகளை பரிசோதிக்க தொடங்குவதற்கு ஒரு முக்கிய காரணம், சமூக பரவலை சரிபார்க்க வேண்டும் என்பதற்கு தான். அரசு கடந்த மார்ச் 20ம் தேதிக்கு பிறகு காய்ச்சல் சளி மற்றும் மூச்சுத்திணறல் ஆகிய அறிகுறிகளுடன் பாதிக்கப்பட்ட அனைவரையும் பரிசோதிக்க தொடங்கி உள்ளது.

    English summary
    Over 10% Test Positive for Covid-19, most had No Overseas Travel History, the first signal of community transmission of Covid-19 in the country
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X