டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

டெல்லி மத நிகழ்ச்சியில் பங்கேற்பு.. பலருக்கும் கொரோனா.. நிஜாமுதீனில் தனிமைப்படுத்தப்படும் மக்கள்

Google Oneindia Tamil News

டெல்லி: டெல்லியில் மார்ச் 13 முதல் 15ம் தேதி வரை நடந்த மத மாநாட்டில் சுமார் 2000 பேர் கலந்து கொண்டனர். அவர்களில் பலருக்கு கொரோனா பரவி உள்ளது. எனவே அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தெற்கு டெல்லியின் நிஜாமுதீன் மேற்கு பகுதியைச் சேர்ந்த 200 க்கும் மேற்பட்டோரை தனிமைப்படுத்தி உள்ளனர்.

Recommended Video

    டெல்லியில் நடைபெற்ற கூட்டம்... பலருக்கு கொரோனா பாதிப்பு... என்ன நடந்தது?

    நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரே நாளில் 208 அதிகரித்து 1347 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 44 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் டெல்லி மத நிகழ்ச்சியில் பங்கேற்ற பலருக்கு கொரோனா இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    டெல்லி நிஜாமுதினில் மார்ச் 13 முதல் 15ம் தேதி வரை ஒரு மத வழிபாட்டு நிகழ்ச்சி நடந்தது. இதில் 2000க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இதில் நாடு முழுவதில் இருந்தும் பலரும் பங்கேற்றார்கள். இந்தோனேசியா மற்றும் மலேசியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகள் தப்லீ-இ-ஜமாஅத்தின் சபையில் கலந்து கொண்டிருக்கிறார்கள்.

    டெல்லி மசூதியில் தங்கியிருந்த வெளிநாட்டவர் உட்பட 300 பேருக்கு அதிரடி கொரோனா பரிசோதனை டெல்லி மசூதியில் தங்கியிருந்த வெளிநாட்டவர் உட்பட 300 பேருக்கு அதிரடி கொரோனா பரிசோதனை

     மத நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள்

    மத நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள்

    அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பலருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்ட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த 6 பேர் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்திருப்பதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. இதேபோல் தமிழகத்தில் இருந்து பங்கேற்ற பலருக்கும் கொரோனா ஏற்பட்டுள்ளதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

     சுற்றி வளைத்த போலீஸ்

    சுற்றி வளைத்த போலீஸ்

    இந்நிலையில் டெல்லி நிஜாமுதின் நிகர்ச்சியில் பங்கேற்ற பலரும் தெற்கு டெல்லி நிஜாமுதின் பகுதியில் உள்ள மக்கள் ஜமாஅத்தின் 'மார்க்காஜ்' (மையத்தில்) தொடர்ந்து தங்கியிருப்பதாக உள்ளூர்வாசிகள் தெரிவித்தார்கள்.இந்த தகவலை அடுத்து அங்கு ஒரு முக்கிய பகுதியை போலீசார் மற்றும் துணை ராணுவ வீரர்கள் ஞாயிற்றுக்கிழமை இரவு சுற்றி வளைத்தனர், அங்கிருந்த 200 க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில் டெல்லி நிஜாமுதின் நிகர்ச்சியில் பங்கேற்ற பலரும் தெற்கு டெல்லி நிஜாமுதின் பகுதியில் உள்ள மக்கள் ஜமாஅத்தின் 'மார்க்காஜ்' (மையத்தில்) தொடர்ந்து தங்கியிருப்பதாக உள்ளூர்வாசிகள் தெரிவித்தார்கள்.இந்த தகவலை அடுத்து அங்கு ஒரு முக்கிய பகுதியை போலீசார் மற்றும் துணை ராணுவ வீரர்கள் ஞாயிற்றுக்கிழமை இரவு சுற்றி வளைத்தனர், அங்கிருந்த 200 க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

     பேருந்துகளில் ஏற்றம்

    பேருந்துகளில் ஏற்றம்

    நிஜாமுதின் மேற்கு பகுதியில் ஏராளமான மக்களுக்கு கொரோனா வைரஸ் நோயின் அறிகுறிகள் காட்டுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. கொரோனா அறிகுறி காரணமாக 200 க்கும் மேற்பட்டவர்கள் டெல்லியின் சுகாதாரத் துறையால் பேருந்துகள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டு வெவ்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

    153 பேர் தனிமையில்

    நிஜாமுதீனில் இருந்து ஞாயிற்றுக்கிழமை 85 பேர் எல்.என்.ஜே.பி மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டனர், இன்று 68 பேர் அனுமதிக்கப்பட்டு உள்ளனர், எனவே மொத்தம் 153 பேர் தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகளில் அனுமதிக்கப்பட்டு நோய்த்தொற்றுக்கு பரிசோதிக்கப்படுகிறார்கள்" என்று எல்.என்.ஜே.பி மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் ஜே சி பாஸ்ஸி தெரிவித்தார். டெல்லியில் 97 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரை 2 பேர் இறந்துள்ளனர்.

    English summary
    Delhi: People continue to board buses in the Nizammudin area, to be taken to different hospitals for a checkup. A religious gathering was held in Markaz, that violated lockdown conditions and several COVID19 positive cases have been found among those who attended the gathering.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X